12 ஓவர் வரை உள்ளே வராத அந்த வீரர்.. கேப்டன்சியை மறந்த தோனி.. இதற்கு எதற்கு அணியில் எடுக்க வேண்டும்?

துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடந்த போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனி ஸ்பின் பவுலர்களை சரியாக பயன்படுத்தாது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

சிஎஸ்கேவிற்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று அபுதாபியில் நடந்தது. இரண்டு அணிகளில் எது மோசமான அணி என்பதை நிரூபிக்க இரண்டு அணியின் வீரர்களும் போராடினார்கள்.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஒரு பக்கம் மோசமாக இருந்தது, இன்னொரு பக்கம் ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கும் மிக மோசமாகவே இருந்தது.

சிஎஸ்கே பேட்டிங்

சிஎஸ்கே பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். சாம் கரன், தோனி, ஜடேஜா மட்டுமே கொஞ்சம் பொறுப்பாக ஆடினார்கள். இதனால் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ராஜஸ்தான் எப்படி

ராஜஸ்தான் எப்படி

அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி சிஎஸ்கே போலவே ஆட்டுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 19, உத்தப்பா 4, சாம்சன் 0 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். இதனால் ஸ்மித், பட்லர் இரண்டு பேரும் களமிறங்கி பொறுமையாக ஆடி வந்தனர். களத்தில் இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த நேரத்தில் சிஎஸ்கே சார்பாக பியூஸ் சாவ்லா பவுலிங் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு இரண்டு வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்த காரணத்தால் ஸ்பின் பவுலர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாவ்லா 12 ஓவர் வரை பந்து வீச களத்திற்கே வரவில்லை. ஜடேஜாவும் 15 ஓவர்கள் முடியும் வரை ஒரே ஒரு ஓவர்தான் போட்டார். அபுதாபி பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு இடம் கொடுத்தது.

இடம் கொடுத்தது

இடம் கொடுத்தது

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்து ஸ்பின் பவுலர்களை நன்றாக பயன்படுத்தியது. ராகுல் திவாதியா, ஷ்ரேயாஸ் கோபால் இருவரும் நன்றாக பந்து வீசினார்கள். இருவரும் 8 ஓவர்களை முழுதாக வீசி வெறும் 32 ரன்கள் மட்டும் கொடுத்தனர். 2 முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் சிஎஸ்கே அணி இன்று ஸ்பின் பவுலிங்கை சரியாக பயன்படுத்தவில்லை. பிட்ச் ஸ்பின் போட சாதகமாக இருந்தும் கூட தோனி ஸ்பின் பவுலர்களை பயன்படுத்தவில்லை. தோனியின் இந்த கேப்டன்சியை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். என்ன தல கேப்டன்சியை மறந்துவிட்டிர்களா என்று கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Dhoni's bowling rotation raises too many questions in CSK vs RR match.
Story first published: Monday, October 19, 2020, 22:51 [IST]
Other articles published on Oct 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X