For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அது சாதாரண விஷயம் இல்லை.. எல்லோரும் அதை பற்றியே பேசுகிறார்கள்.. பேட்டியில் போட்டு உடைத்த தோனி!

அபுதாபி: சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்ன என்று சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி அளித்து இருக்கிறார்.

நேற்று நடந்த போட்டியில் மும்பை சென்னைக்கு எதிராக 162 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் அதன்பின் அதிரடியாக ஆடிய சென்னை அணி 165 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதன் மூலம் முதல் ஐபிஎல் போட்டியையே மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தோல்வியுடன் தொடங்கி உள்ளது. கடந்த 8 ஐபிஎல் தொடர்களில் வரிசையாக அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி முதல் போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது.

பேட்டி தோனி

பேட்டி தோனி

இந்த நிலையில் போட்டிக்கு பின் தோனி கொடுத்த பேட்டியில், நாங்கள் நன்றாக பயிற்சி எடுத்தோம். ஆனால் மைதானத்திற்கு செல்லும் போது நிலைமை வேறு மாதிரி இருக்கும். மைதானத்தில் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு விளையாட வேண்டும். அதுதான் மிக முக்கியம். பயிற்சி எடுத்து இருந்தாலும் களத்தில் இருக்கும் சூழ்நிலை வேறு மாதிரி இருக்கும்.

சென்னை பவுலர்கள்

சென்னை பவுலர்கள்

சென்னையில் தொடக்கத்தில் பவுலர்கள் சரியான லெந்தில் பவுலிங் செய்யவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து சரியான லெந்தில் பவுலிங் செய்தனர். சரியாக பிட்ச் செய்தனர். நிறைய நல்ல விஷயங்கள் நேற்று நடந்தது. அணி நன்றாக விளையாடியது . ஆனால் சில விஷயங்களில் இன்னும் மாற்றம் செய்ய வேண்டும்.

சில விஷயம்

சில விஷயம்

சில விஷயங்களில் இன்னும் மாற்றங்களை செய்ய வேண்டும். இரண்டாம் பாதியில் பனி காரணமாக போட்டி பாதிக்கப்பட்டது. தொடக்கத்தில் மும்பை அணி விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவி இருக்கும். யார் விக்கெட்டை இழக்காமல் இருக்கிறார்களோ, அவர்களே போட்டியின் இறுதியில் முன்னிலையில் இருப்பார்கள்.

ராயுடு போட்டி

ராயுடு போட்டி

ராயுடு நன்றாக விளையாடினார். ராயுடு - பிளசிஸ் பார்ம் நன்றாக உதவியது. எங்கள் அணியில் பலர் ஓய்வு பெற்று விட்டனர். அதனால் யாருக்கும் இப்போது காயம் இல்லை. இது ஒரு வகையில் எங்களுக்கு உதவியது. எங்களின் அனுபவம் எங்களுக்கு உதவியது. எல்லோரும் அதை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

 நிறைய அனுபவம்

நிறைய அனுபவம்

இது போன்ற அனுபவம் சாதாரணமாக நடக்காது. பல வருடங்கள் பல போட்டிகளை விளையாடினால்தான் இது போன்ற அனுபவம் கிடைக்கும். 300க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியது உதவியது. அணியில் பிளேயிங் 11 வீரர்களை எடுக்கும் போது கலவையாக எடுக்க வேண்டும். அணியில் அனுபவம் உள்ள வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் இருக்க வேண்டும்.

 இளமையான வீரர்கள்

இளமையான வீரர்கள்

இளம் வீரர்களை மூத்த வீரர்கள் வழி நடத்த வேண்டும். அப்போதுதான் ஆட்டம் கட்டுக்குள் இருக்கும். இளம் வீரர்கள் 60-70 நாட்கள் இப்படி மூத்த வீரர்கள் உடன் விளையாடுவார்கள். அந்த சமயத்தில் இளம் வீரர்களுக்கு எவ்வளவு கற்றுக்கொடுக்க முடியுமோ அவ்வளவு கற்றுக்கொடுக்க வேண்டும், அதுதான் எங்கள் நோக்கம் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, September 20, 2020, 12:20 [IST]
Other articles published on Sep 20, 2020
English summary
IPL 2020: Dhoni shares the secret of Chennai Super Kings win against MI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X