சிஎஸ்கே எதிர்காலம்.. இப்படியே போனால் அவ்வளவுதான்.. தோனி சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது!

துபாய்: சென்னை அணியின் கேப்டன் சிஎஸ்கேவில் முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தோனி இப்போதே அதிரடி நடவடிக்கை எடுத்தால்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல முடியும்.

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே தற்போது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் இறங்கிய ராஜஸ்தான் 7 விக்கெட்டை இழந்தது 20 ஓவரில் 216 ரன்கள் எடுத்தது. இதில் சென்னையின் பவுலிங்கை ராஜஸ்தான் அடித்து துவைத்துள்ளது.

இதையடுத்து சென்னை அணி இறங்கி அதிரடி கலந்து நிதானமாக ஆடி வருகிறது. ஆனால் அடுத்தடுத்து சென்னை நாங் விக்கெட்டுகளை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாம்சன் அடிச்சதை கூட மறக்க முடியும்.. ஆனா இது.. லுங்கி செய்த காரியம்.. உறைந்து போன சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை ஓப்பனிங்

சென்னை ஓப்பனிங்

சென்னை அணியின் ஓப்பனிங் பேட்டிங் இந்த போட்டியிலும் மோசமாக சொதப்பியது. கடந்த இரண்டு வருடமாகவே சென்னையின் அணியின் ஓப்பனிங் தொடர்ந்து மோசமாகவே இருந்து வருகிறது. ஏதாவது ஒரு சில போட்டிகளில் மட்டுமே ஓப்பனிங் வீரர்கள் சிறப்பாக ஆடி உள்ளனர். முக்கியமாக பெரிய இலக்கு உள்ள போட்டிகளில் சென்னை ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை.

கடந்த போட்டி

கடந்த போட்டி

மும்பைக்கு எதிரான கடந்த போட்டியிலும் சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை. கடந்த போட்டியிலும் மும்பைக்கு எதிராக களத்திற்கு வந்து சில நிமிடத்தில் வாட்சன் அவுட்டானார். அதன்பின் முரளி விஜய் அவுட்டானார். வரிசையாக இரண்டு ஒப்பனர்களும் அவுட்டானார்கள். இதனால் சென்னை அணி பெரிய அதிர்ச்சியை சந்தித்தது.

இந்த போட்டி எப்படி

இந்த போட்டி எப்படி

இந்த நிலையில் இந்த போட்டியிலும் சென்னையின் ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை. இந்த நிலையில் இன்றும் பெரிய இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடும் சமயத்தில், ஓப்பனிங் வீரர்கள் சரியாக ஆடவில்லை. இந்த போட்டியிலும் முதலில் இறங்கிய முரளி விஜய் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அதேபோல் வாட்சனும் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.

தள்ளாட்டம் ஆடிய சென்னை

தள்ளாட்டம் ஆடிய சென்னை

இதனால் சென்னை அணி தற்போது தள்ளாட தொடங்கி உள்ளது. போன போட்டியில் நன்றாக விளையாடிய அம்பதி ராயுடுவும் இந்த போட்டியில் இல்லை. 2018 மற்றும் 2019 சென்னையில் ஓப்பனிங் வீரர்கள் இருவரும் சரியாக விளையாடவில்லை. அந்த சீசனில் அம்பதி ராயுடுதான் இடம் மாறி மாறி விளையாடி அணியை காப்பாற்றினார்.

அதே மாதிரி

அதே மாதிரி

இந்த முறையும் அதேபோல் சென்னை அணி மோசமாக திணற தொடங்கி உள்ளது . வரிசையாக தற்போது வீரர்கள் சென்னையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறார்கள். சென்னை அணியின் கேப்டன் சிஎஸ்கேவில் முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தோனி இப்போதே அதிரடி நடவடிக்கை எடுத்தால்தான் அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெல்ல முடியும். உடனே அணியில் விஜய் போன்ற ஓப்பனிங் வீரர்களை மாற்ற வேண்டும்.

மாற்றம் முக்கியம்

மாற்றம் முக்கியம்

நல்ல ஹீட்டர்கள். இளம் வீரர்களை ஓப்பனிங் இருக்க வேண்டும் . அதேபோல் ரெய்னா இடத்தை நிரப்ப உடனே வீரர்களை எடுக்க வேண்டும். அம்பதி ராயுடுவை மட்டுமே நம்பி தோனி இருக்க முடியாது. அதேபோல் பவுலிங்கிலும் சென்னை அணி புதிய ஆப்ஷன்களை தயாராக வைத்து இருக்க வேண்டும்.தோனி சிஎஸ்கேவில் அதிரடி மாற்றங்களை செய்தால்தான், அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி செல்ல முடியும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Dhoni should make many changes in CSK team soon.
Story first published: Tuesday, September 22, 2020, 22:59 [IST]
Other articles published on Sep 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X