For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜாவை அனுப்பினால் என்ன தப்பு? அடம்பிடிக்கும் தோனி.. அடுத்தடுத்து பறக்கும் மெசேஜ்.. பரபர பின்னணி!

துபாய்: ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் ஆட்டங்களில் சிஎஸ்கே கேப்டன் தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

2020 ஐபிஎல் தொடர் சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான வருடமாக மாறியுள்ளது. விளையாடிய எல்லா வருடமும் பிளே ஆப் சென்ற சிஎஸ்கே இந்த முறை பிளே ஆப் செல்வது சந்தேகம் ஆகியுள்ளது.

இதுவரை மொத்தம் 9 போட்டிகளில் சிஎஸ்கே இந்த சீசனில் ஆடி உள்ளது. இதில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வெற்றிபெற்று அதிர்ச்சி அளித்துள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

சிஎஸ்கே அணியின் தோல்விக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. இதில் மிக முக்கியமான காரணம் சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர். தொடக்கத்தில் 4 போட்டிகளில் சிஎஸ்கே தோல்வி அடைய அணியின் பேட்டிங் ஆர்டர்தான் முக்கியமான காரணமாக இருந்தது. ஓப்பனிங் வீரர் தொடங்கி மிடில் ஆர்டர் வரை பல விஷயங்களில் பிரச்சனை இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் போக போக எல்லாம் சரி செய்யப்பட்டது. ஓப்பனிங் வீரர் முரளி விஜய் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது சாம் கரன் ஓப்பனிங் இறங்கி வருகிறார். வாட்சன் பார்மிற்கு திரும்பிவிட்டார். டு பிளசிஸ் மற்றும் ராயுடு எப்போதும் போல நன்றாக ஆடி வருகிறார்கள். அதிலும் ராயுடு தன்னுடைய அதிரடி ஸ்டைலுக்கு மாறிவிட்டார்.

கடைசியில் எப்படி

கடைசியில் எப்படி

இன்னொரு பக்கம் ஜடேஜாவும் அதிரடியான பார்மிற்கு திரும்பிவிட்டார். ஜாதவ் ஏன் அணியில் இருக்கிறார் என்றே தெரியாத காரணத்தால் அவரை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை. தற்போது அணியில் பார்மிற்கு திரும்பாமல் இருக்கும் முழு நேர பேட்ஸ்மேன்.. ஒருவர்தான்.. அது தோனி மட்டுமே. ஒவ்வொரு போட்டியிலும் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனி மறைமுகமாக ஒருவகையில் காரணமாக இருக்கிறார்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தோனி சிறந்த பினிஷர், சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்தான். ஆனால் இந்த சீசனில், அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்பதே உண்மை. ஒன்னேகால் வருடம் கழித்து தோனி பேட்டிங் செய்கிறார். இதனால் தோனியிடம் டைமிங் மிஸ்ஸாகிறது. பந்தை பார்த்து அடிப்பது இல்லை. பந்தை அவரால் கணிக்க முடியவில்லை.

ராயுடு

ராயுடு

ராயுடுவிற்கு அடுத்து இருக்கும் முக்கியமான இடத்தில்தான் தோனி பேட்டிங் இறங்குகிறார். ஆனால் அவரால் வேகமாக ஆட முடியவில்லை. வேகமாக ஆடுவோம் என்று சிக்ஸ் அடிக்க முயன்றால் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து விடுகிறார்கள். தோனியின் பழைய பவர் தொடங்கி துல்லியம் வரை எல்லாமே அவரிடம் மிஸ்ஸாகிறது. ஒரு அணியில் 5வது இடம் என்பது மிகவும் முக்கியம்.

அங்குதான் இறங்குகிறார்

அங்குதான் இறங்குகிறார்

தற்போது தோனி ஐந்தாவது இடத்தில்தான் பேட்டிங் இறங்குகிறார். ஆனால் அந்த இடத்தில் இறங்கி 20 பந்துகள் வரை பிடிக்கும் தோனி பெரிதாக ரன் எடுப்பது இல்லை. இல்லையென்றால் 5-6 பந்துகளை பிடித்துவிட்டு அவுட்டாகி விடுகிறார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் பலர் தோனியின் பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் என்று இணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோரிக்கை

கோரிக்கை

தோனியை விட ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர்தான் தோனிக்கு முன்பாக களத்திற்கு வர வேண்டும். ஜடேஜா நல்ல பார்மில் இருக்கிறார். அதை தோனி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜடேஜாவை ஈகோ பார்க்காமல் முன்பே களமிறக்க வேண்டும். தோனி அதற்கு பின் பேட்டிங் இறங்கலாம் என்று இணையத்தில் பல நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மறுப்பு

மறுப்பு

ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக ரசிகர்கள் இப்படி கோரிக்கை வைத்தும் கூட தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்றவில்லை. பேட்டிங் ஆர்டரை மாற்ற பிடிக்காமல் தோனி ஆடம் பிடித்து வருகிறார். இதுவும் கூட ஒரு வகையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு மறைமுக காரணமாக உள்ளது. தான் சரியாக ஆடவில்லை என்றால் சரியாக ஆடுபவர்களை களமிறக்குவதே தலைவர்களுக்கு அழகு.. தோனி சரியான தலைவராக செயல்பட வேண்டிய நேரம் இது!

Story first published: Monday, October 19, 2020, 19:34 [IST]
Other articles published on Oct 19, 2020
English summary
IPL 2020: Dhoni should promote Jadeja ahead of him in batting for CSK hereafter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X