For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"அவர் சொல்லிக்கொடுத்தது தப்பு".. தோனியை சீண்டிய வார்த்தை.. சிஎஸ்கேவில் மொத்தமாக திசை மாறும் பிரச்சனை

துபாய்: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிற்கு எதிராக கடுமையான குரல் அணிக்குள் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கி உள்ளது. முதலில் இந்த தொடரை வெற்றியோடு தொடங்கிய சிஎஸ்கே போக போக மோசமாக சொதப்பியது. வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது.

பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் மீண்டு வந்த சிஎஸ்கே மீண்டும் கொல்கத்தாவிற்கு எதிராக வீழ்ந்தது. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் சிஎஸ்கே மிக மோசமாக தோல்வி அடைந்தது.

ஏன்

ஏன்

சிஎஸ்கேவின் தோல்விக்கு அணியின் பேட்டிங் யூனிட்டே காரணமாக பார்க்கப்படுகிறது. தொடரின் தொடக்கத்தில் சிஎஸ்கேவின் தோல்விக்கு ஓப்பனிங் வீரர்கள் காரணமாக பார்க்கப்பட்டனர். இதனால் அணியில் இருந்து முரளி விஜய் நீக்கப்பட்டார். அதன்பின் வாட்சன், டு பிளசிஸ் ஓப்பனிங் இறங்கினார்கள். இவர்கள் இருவரும் பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் நன்றாக ஆடினார்கள்.

ஓப்பனிங் சிறப்பு

ஓப்பனிங் சிறப்பு

வாட்சன் பார்மிற்கு திரும்பி உள்ளதால், சிஎஸ்கேவின் ஓப்பனிங் சிறப்பாகவே இருக்கிறது. அதேபோல் அம்பதி ராயுடுவும் நன்றாகவே ஆடி வருகிறார். ஆனால் சிஎஸ்கேவின் மிடில் ஆர்டர்தான் மிக மோசமாக சொதப்பி உள்ளது. தோனி, ஜடேஜா இரண்டு வீரர்களும் மிடில் ஆர்டரில் மிக மோசமாக சொதப்பி வருகிறார்கள். இவர்கள் இருவரும் சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இந்த நிலையில் சிஎஸ்கேவின் தொடர் தோல்விக்கு யார் பொறுப்பேற்பது என்று கேள்விகள் எழுந்துள்ளது. ரசிகர்கள் பலரும் கேதார் ஜாதவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். கேதார் ஜாதவை நீக்கிவிட்டால் அணியில் எல்லாம் சரியாகிவிடும். அவர் மட்டுமே தற்போது பிரச்சனை. அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் தோனியோ.. அணியின் பயிற்சியாளர் பிளமிங் மீது கோபத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். பயிற்சியாளர் பிளமிங் செய்த தவறுகள்தான் அணியின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார்கள். அவர்தான் பேட்டிங் யூனிட்டை சரியாக தயார் செய்யவில்லை என்று தோனி நினைப்பதாக கருதுகிறார்கள். இதை பஞ்சாப் போட்டிக்கு பின்பே தோனி சூசகமாக தெரிவித்தார்.

அணி தேர்வு

அணி தேர்வு

அணி தேர்வில் நிறைய வாக்குவாதங்கள் வரும். ஆனால் அதை வெளியே சொல்ல மாட்டேன் என்று தோனி குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் நேற்றைய தோல்விக்கு பின் பிளமிங்கும் மூத்த வீரர்களை குற்றஞ்சாட்டி இருந்தார். அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியாக ஆடுவது இல்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் தவறு செய்து விட்டனர் என்று தோனியை மறைமுகமாக தாக்கி பிளமிங் பேசி இருந்தார்.

தோனி கோபம்

தோனி கோபம்

இந்த வார்த்தைகள் தோனியை தனிப்பட்ட வகையில் சீண்டியதாக கூறப்படுகிறது. தோனி இதனால் பிளமிங் மீது கோபத்தில் இருக்கிறார். பிளமிங் சொல்லிக்கொடுத்ததுதான் தப்பு, அவர் போட்டுக்கொடுத்த பிளான் சொதப்பிவிட்டதாக தோனி கருதுகிறார் என்கிறார்கள். இதனால் பிளமிங் மீது பழியை போட தோனி நினைக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

என்ன நடக்கிறது

என்ன நடக்கிறது

அதாவது சிஎஸ்கே தோல்விக்கு பிளமிங் மீது பழியை போட தோனி நினைக்கிறார் என்கிறார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் சிஎஸ்கேவில் எந்த குழப்பமும் இல்லை. அடுத்த போட்டியில் ஜாதவ் விளையாட மாட்டார். அவ்வளவுதான். அவரை மாற்றிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். பிளமிங் - தோனி இடையே மோதல் வர வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார்கள். சிஎஸ்கேவில் என்ன நடக்கிறது என்று சீக்கிரமே தெரிந்துவிடும்!

Story first published: Friday, October 9, 2020, 9:26 [IST]
Other articles published on Oct 9, 2020
English summary
IPL 2020: Dhoni will take a decision after CSK coach Fleming's speech yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X