For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கும் மேல் என்ன வேண்டும்? கோபத்தில் ஷாருக்.. கேகேஆரில் பூதாகரமாகும் மோதல்..குறிவைக்கப்படும் டிகே

அபுதாபி: கொல்கத்தா அணி நேற்று மிக மோசமாக விளையாடிய காரணத்தால் தற்போது அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார்.

நேற்று மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா மிக மோசமான தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணியின் அனைத்து தரப்பும் நேற்று மிக மோசமான ஆட்டத்தை ஆடியது.

நேற்று போட்டியில் முதலில் ஆடிய மும்பை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டிற்கு 195 ரன்கள் எடுத்தது.அதன்பின் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

மோசமாக சொதப்பல்

மோசமாக சொதப்பல்

இந்த போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்றதில் இருந்து இறுதி வரை மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பவுலர்கள் யாரும் சரியாக பந்து வீசவில்லை. ஷார்ட் பந்துகளில் சிக்ஸ் செல்கிறது என்று தெரிந்தும் தொடர்ந்து ஷார்ட் பந்துகளை பவுலர்கள் வீசினார்கள். சரியான இடத்தில் பீல்டர்கள் நிற்க வைக்கப்படவில்லை. கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் மிக மோசமாக சொதப்பினார்கள்.

கேப்டன் தினேஷ் கார்த்திக்

கேப்டன் தினேஷ் கார்த்திக்

அதிலும் கேப்டன் தினேஷ் கார்த்திக் திட்டம் மிக மோசமாக இருந்தது. தவறான பேட்டிங் ஆர்டரில் பேட்ஸ்மேன்களை இறக்கியது. சரியாக பவுலிங் ரொட்டேஷன் செய்யவில்லை. அதிலும் பிளேயிங் 11 தேர்விலேயே தினேஷ் கார்த்திக் சொதப்பிவிட்டார் என்று பலரும் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

எப்படி நிலை

எப்படி நிலை

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடமாக இவர் கொல்கத்தா அணிக்கு சரியாக கேப்டன் பொறுப்பை வகிக்கவில்லை. அணிக்குள் இருக்கும் வீரர்களை சரியாக கட்டுப்படுத்தவில்லை. இரண்டு வருடமாக மிக சிறப்பான அணி இருந்தும் கூட தினேஷ் கார்த்திக்கால் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை என்று விமர்சனம் உள்ளது.

நியாயம்தான்

நியாயம்தான்

இன்னொரு பக்கம் ரசல் உடன் சண்டை வேறு போட்டுள்ளார். டிகே மீது வைக்கப்படும் இந்த புகாரிலும் ஒரு விதத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது. கொல்கத்தா அணியில் நல்ல டெத் பவுலர்கள் இல்லை என்று தினேஷ் கார்த்திக் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். இதற்காக 15.50 கோடி கொடுத்து பேட் கும்மின்ஸை அணிக்குள் ஷாருக் கான் எடுத்தார். அதேபோல் பேட்டிங், பவுலிங் என்று அனைத்திலும் கலவையாக வீரர்களை எடுத்தார்.

செம டீம்

செம டீம்

நாகர்கோட்டி, சுப்மான் கில் என்று இளம் வீரர்கள் ஒரு பக்கம், இயான் மோர்கன், ரசல் போன்ற ஹிட்டர்கள் இன்னொரு பக்கம் ராணா போன்று ஐபிஎல்லுக்காக அளவு எடுத்து செய்த வீரர்கள் என்று பலர் அணியில் உள்ளனர். இதற்கும் மேல் ஒரு அணியில் என்ன தேவை. இதற்கும் மேல் டிகேவிற்கு யார்தான் தேவை? இப்போதும் கூட ஒரு கேப்டனால் வெற்றி பெற முடியவில்லை என்றால் எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.

 ஷாருக் கான்

ஷாருக் கான்

இதனால் கடந்த சீசனில் இருந்தே கொல்கத்தா அணி மீது நிர்வாகம் விரக்தியில்தான் இருக்கிறது. ஷாருக்கானும் இதற்கு முன் அணி குறித்து ஆரவாரமாக பேசியது போல இப்போதெல்லாம் பேசுவது இல்லை. இதனால் ஷாருக்கான் டிகேவின் கேப்டன்சி மீது கோபத்தில் இருக்கிறார். விரைவில் இயான் மோர்கன் அணியின் கேப்டனாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Thursday, September 24, 2020, 16:23 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
IPL 2020: Dinesh Karthik didn't show a good captaincy in the KKR vs MI match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X