For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜினாமா செய்யவில்லை.. நிர்வாகம்தான் நீக்கியது.. சிக்கிய தினேஷ் கார்த்திக்.. உண்மையை உடைத்த பிரபலம்!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகவில்லை அவரை பதவியில் இருந்து தூக்கிவிட்டனர் என்று கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த மாற்றங்கள் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியிலும் நினைத்து பார்க்க முடியாத திருப்பங்கள் நடந்து வருகிறது.

நேற்று முதல் நாள் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகுவதாக அறிவித்தார். இதனால் கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்றுள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகவில்லை அவரை பதவியில் இருந்து தூக்கிவிட்டனர் என்று கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தற்போது தெரிவித்துள்ளார். அவர் தனது பேட்டியில், கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக் ராஜினாமா எல்லாம் செய்யவில்லை. உண்மையில் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்.

பின்னணி

பின்னணி

தொடரின் பாதியில் அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டனர். இதுதான் உண்மை . வெளியே இதை அதிகாரபூர்வமாக சொல்லவில்லை. வெளியே தினேஷ் கார்த்திக் சுயமாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததாக கொல்கத்தா அணி தெரிவித்துள்ளது. மரியாதைக்காக இப்படி சொல்லி இருக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் தொடரின் பாதியில் இருந்து வெளியேற மாட்டார்கள்.

துபாய் வீரர்

துபாய் வீரர்

எந்த ஒரு பொறுப்பான வீரரும் அப்படி செய்ய மாட்டார் என்றுதான் நான் கருதுகிறேன். தினேஷ் கார்த்திக் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வருகிறது. ஆனால் நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். யாரும் இப்படி பாதியில் ராஜினாமா செய்ய மாட்டார்கள். நான் இன்னும் தினேஷ் கார்த்திக்கிடம் இது குறித்து பேசவில்லை.

உண்மை என்ன?

உண்மை என்ன?

உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் கொல்கத்தா அணியும் நன்றாகவே ஆடி வந்தது. தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருந்த போது கொல்கத்தா அணி 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்றுள்ளது. இதனால் எளிதாக கொல்கத்தா நினைத்ததால் பிளே ஆப் செல்ல முடியும்.

தினேஷ் கார்த்திக் நிலை

தினேஷ் கார்த்திக் நிலை

அதேபோல் கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக்கும் பார்மிற்கு திரும்பி உள்ளார். அவர் இரண்டு போட்டிகளில் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் கேப்டன்சியும் நன்றாக இருந்தது. தோல்வி அடைய வேண்டிய போட்டிகளை கூட வெற்றிபெற வைத்தார். அப்படி இருக்கும் போது அவரை நீக்குவது ஏன் என்று தெரியவில்லை, என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 18, 2020, 12:41 [IST]
Other articles published on Oct 18, 2020
English summary
IPL 2020: Dinesh Karthik is not resigned, He got sacked says Akash Chopra.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X