For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு திருப்தி இல்லை.. வெளிப்படையாக பேசிய தினேஷ் கார்த்திக்.. கையெடுத்து கும்பிட்ட ஷாருக்.. பின்னணி

துபாய்: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றும் கூட தினேஷ் கார்த்திக் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. இன்னொரு பக்கம் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும் தினேஷ் கார்த்திக் மீது பெரிய அளவில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்கிறார்கள்.

நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அதிரடி வெற்றி பெற்றது. நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா சார்பாக இளம் வீரர் சுப்மான் கில் 47 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் 9 விக்கெட்டிற்கு வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தும் நேற்று ராஜஸ்தான் தோல்வி அடைந்தது.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் வெற்றிக்கு பின் தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்தார். அதிரடி வெற்றி காரணமாக இவர் சந்தோசமாக பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக தினேஷ் கார்த்திக் பெரிய அளவில் மகிழ்ச்சியாக காணப்படவில்லை.

ஆட்டம் எப்படி?

ஆட்டம் எப்படி?

தினேஷ் கார்த்திக் தனது பேட்டியில், நாங்கள் ஆடிய ஆட்டத்தை முழுமையானது என்று கூற மாட்டேன். இது பர்பெக்ட் போட்டி கிடையாது. நிறைய விஷயங்களை நாங்கள் முன்னேற்ற வேண்டிய, மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கில், ரஸல் பேட்டிங் மற்றும் மாவி பவுலிங் ஆகியவை எங்களுக்கு கை கொடுத்தது.

கேட்ச் பிடித்தனர்

கேட்ச் பிடித்தனர்

இளம் வீரர்கள் சிறப்பாக கேட்ச் பிடிக்கிறார்கள். நேற்று எங்களுக்கு எதிராக ஆர்ச்சர் மிக சிறப்பாக பவுலிங் செய்தார். நேற்று போட்டி பேட்டிங் செய்வதற்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதற்கு முன்பு இருந்ததை விட அணியில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

முன்னேற்றம் இல்லை

முன்னேற்றம் இல்லை

பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். சில வீரர்கள் நீண்ட நாட்களாக விளையாடவில்லை. பலர் கடுமையாக கஷ்டப்பட்டு உள்ளனர். இந்த மைதானத்தில் அதிக ரன் குவிக்க வேண்டும், அப்போதுதான் வெற்றிபெற முடியும் என்று முடிவு செய்தோம். நன்றாக ஆடினோம். ஆனால் இதை முழுமையான ஆட்டம் என்று கூற முடியாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கேப்டன்சி கேள்வி

கேப்டன்சி கேள்வி

நேற்று கேப்டன்சி ரீதியாக தினேஷ் கார்த்திக் நிறைய தவறுகளை செய்தார். நேற்று கொல்கத்தா நினைத்து இருந்தால் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இருக்க முடியும். ஆனால் தினேஷ் கார்த்தி கடைசியில் ஸ்பின் பவுலர்களுக்கு மட்டுமே ஓவர் கொடுத்தார். இதனால் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்சி மீது பெரிய அளவில் அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார்கள்.

மாற்றம் வருமா ?

மாற்றம் வருமா ?

கடைசியில் கும்மின்ஸ், நாகர்கோட்டி போன்ற ஸ்பீட் பவுலர்களுக்கு ஓவர் இருந்தும் அவர் கொடுக்காமல் ஸ்பின் பவுலர்களுக்கு ஓவர் கொடுத்தார். இதனால் தினேஷ் கார்த்திக் கேப்டன்சி மீது ஷாருக்கான் அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள். இன்னும் சில போட்டிகள் பார்ப்பார் இல்லையென்றால் இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க கூட வாய்ப்புள்ளது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

நேற்று போட்டியில் வெற்றிபெற்ற காரணத்தால் தினேஷ் கார்த்திக்கின் பதவி தப்பியது என்று கூறுகிறார்கள். நேற்று ஷாருக்கான் தனது உணர்ச்சிகளை போட்டியின் போது பெரிதாக காட்டிக்கொள்ளவில்லை. அதோடு வெற்றிக்கு பின் உற்சாகமாவும் இல்லை. தினேஷ் கார்த்திக்கை பார்த்து கும்பிடு போட்டார். ஆனால் பெரிய அளவில் வெற்றியை கொண்டாடவில்லை.

Story first published: Thursday, October 1, 2020, 11:29 [IST]
Other articles published on Oct 1, 2020
English summary
IPL 2020: KKR skipper Dinesh Karthik says, It is not enough during the post-match presentation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X