வைட் லேதா.. தமிழில் மூச்சு விடாமல் பேசிய தினேஷ் கார்த்திக்கா இது? அதுவும் அம்பயர் சொன்ன அந்த பதில்!

துபாய்: ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தில் தமிழில் புகுந்து விளையாடும் தினேஷ் கார்த்திக், திடீர் என்று நேற்று தெலுங்கில் பேசியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து உள்ளது. இந்த தொடர் முழுக்க தமிழர்களை கவர்ந்த ஒரு விஷயம் என்றால் அது தினேஷ் கார்த்திக் பேசும் தமிழ்தான்.

ஸ்டம்பிற்கு பின் நின்று கொண்டு தினேஷ் கார்த்திக் தமிழில் பேசுவது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. சக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் இவர் தமிழில் பேசியது இணையம் முழுக்க ஹிட் அடித்துள்ளது.

தோனி

தோனி

வருண் சக்கரவர்த்திக்கு தமிழில்தான் இவர் அறிவுரை வழங்கினார். முழுக்க முழுக்க தமிழில் பேசியே தோனியின் விக்கெட்டை எடுத்தது, அவன் அடிக்க மாட்டான் என்று ஜாதவை தமிழில் கிண்டல் செய்தது என்று தினேஷ் கார்த்திக் இந்த சீசன் முழுக்க வைரலாகிக் கொண்டே இருந்தார். சமயத்தில் இவர் தமிழில் கெட்ட வார்த்தை கூட பேசினார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்த நிலையில்தான் மைதானத்தில் நேற்று தினேஷ் கார்த்திக் தெலுங்கிலும் பேசினார். ஆம் நேற்று போட்டியில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்த போது ஒரு பந்து வைட் போல வந்தது. இதை தினேஷ் கார்த்திக்கால் அடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் நடுவரிடம் தெலுங்கில் பேசினார்.

தெலுங்கு

தெலுங்கு

வைட் லேதா என்று தெலுங்கில் கேட்டார். அதாவது வைட் இல்லையா என்று கேட்டார். அங்கு நடுவராக இருந்தவர் ஹைதராபாத்தை சேர்ந்த சம்சுதீன். இதற்கு அவரும் தெலுங்கில்.. போகவில்லை.. ஸ்டம்பிற்கு அருகில் சென்றது.. கொஞ்சம் கூட வைட் லைன் அருகே செல்லவில்லை என்று தெலுங்கில் பதில் அளித்தார். இவர்கள் இருவரும் உரையாடிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

வைரல்

வைரல்

தினேஷ் கார்த்திக் இப்படி திடீரென தெலுங்கில் பேசியது பலரையும் கவர்ந்து உள்ளது. இதற்கு முன் இவர் மைதானத்தில் மலையாளத்திலும், கன்னடாவிலும் பேசி இருக்கிறார். அதேபோல் இந்தியிலும் பேசுவார். இன்னொரு பக்கம் பஞ்சாபி வீரர்களிடம் பஞ்சாபியிலும் பேசி இருக்கிறார்... உங்களுக்கு தெரியாத மொழிதான் என்ன பாஸ் என்று பலரும் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்க தொடங்கி உள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Dinesh Karthik talk with umpire in Telugu goes viral
Story first published: Friday, October 30, 2020, 16:03 [IST]
Other articles published on Oct 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X