அவசரப்பட்டுவிட்டார்.. முட்டி போட்டதால் சிக்கலா?.. பாண்டியாவின் செயலால் ஏற்பட்ட சர்ச்சை.. பின்னணி!

துபாய்: நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா களத்தில் முட்டி போட்டு கைகளை உயர்த்தியதை பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் இது பிசிசிஐ விதிக்கு உட்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.

நேற்று ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பார்மிற்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா நேற்று மிகவும் அதிரடியாக ஆடினார்.

நேற்று ஹர்திக் பாண்டியா, அதிரடியாக ஆடி 21 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸ் , இரண்டு பவுண்டரி அடக்கம்.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் அரை சதம் அடித்த பின் பாண்டியா முட்டி போட்டு கையை உயர்த்தி அதை கொண்டாடினார். #BlackLivesMatter பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதை பாண்டியா செய்து இருந்தார். அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு போலீசாரால் கொல்லப்பட்டதில் இருந்து #BlackLivesMatter பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

பிரபலம்

பிரபலம்

உலகம் முழுக்க பல பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் இப்படி முட்டி போட்டு கைகளை உயர்த்தி #BlackLivesMatter பிரச்சாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பல விளையாட்டு போட்டிகளில் #BlackLivesMatter பிரச்சாரத்திற்கு ஆதரவாக சிறப்பு நிமிடங்கள் கூட ஒதுக்கப்பட்டுள்ளது . ஆனால் ஏனோ ஐபிஎல் தொடரில் #BlackLivesMatter குறித்து யாருமே பேசவில்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

பிசிசிஐ ஏனோ #BlackLivesMatter குறித்து மௌனம் காத்து வந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் சிலர் வைத்த கோரிக்கையையும் பிசிசிஐ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பிசிசிஐ இந்த #BlackLivesMatter பிரச்சாரத்திற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் பாண்டியா இதற்கு ஆதரவாக முட்டி போட்டு கைகளை உயர்த்தினார்.

துணிச்சல்

துணிச்சல்

பாண்டியாவின் இந்த செயலை, துணிச்சலை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். ஆனாலும் இது பிசிசிஐ விதிக்கு உட்பட்டதா என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். #BlackLivesMatter என்பது ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட் போன்றது.

அரசியல்

அரசியல்

இதை களத்தில் மேற்கொள்ள பிசிசிஐ அனுமதித்து உள்ளதா என்று சிலர் விஷமதனமாக கேள்வி எழுப்பி உள்ளனர். பாண்டியா அவசரப்பட்டு முட்டி போட்டுவிட்டார், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட கூட வாய்ப்புள்ளது என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்னும் சிலரோ.. மைதானத்தில் சில வீரர்கள் தங்கள் ஜாதி அடையாளத்தை காட்டும் வகையில் சதம் அடிக்கும் போது கொண்டாடுகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் மாநில பெருமையை காட்டும் வகையில் செயல்படுகிறார்கள். அப்படி இருக்கும் போது கறுப்பின மக்களின் பாதுகாப்பு குறித்து பேசினால் இவர்களுக்கு எங்கே எரிகிறது என்றும் கேள்வி எழுப்பி பாண்டியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Does BCCI allowed Black Lives Matter campaign in the season
Story first published: Monday, October 26, 2020, 12:55 [IST]
Other articles published on Oct 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X