For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு அவுட் கொடுப்பீங்களா? வார்னரை வெளியே அனுப்பிய அம்பயர்.. கொந்தளித்த ரசிகர்கள்!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னருக்கு தவறாக அவுட் கொடுக்கப்பட்டது.

அது போட்டியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதால் அந்த சர்ச்சை பெரிதாக மாறவில்லை.

மூன்றாவது அம்பயர் அவசரப்பட்டு, விராட் கோலி கேட்ட டிஆர்எஸ்-க்கு அவுட் கொடுத்தது தான் இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

அவரை டீமில் எடுக்க முடியாதா? காரணமே சொல்லாமல் ஒதுக்கப்பட்ட மூத்த வீரர்.. சேவாக் சரமாரி விளாசல்!அவரை டீமில் எடுக்க முடியாதா? காரணமே சொல்லாமல் ஒதுக்கப்பட்ட மூத்த வீரர்.. சேவாக் சரமாரி விளாசல்!

முக்கிய போட்டி

முக்கிய போட்டி

2020 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கான இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் ஸ்கோர்

பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி 56 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணிக்கு 132 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஹைதராபாத் சேஸிங்

ஹைதராபாத் சேஸிங்

ஹைதராபாத் அணிக்கு டேவிட் வார்னர், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி துவக்கம் அளித்தனர். கோஸ்வாமி டக் அவுட் ஆனார். முக்கியமான போட்டி என்பதால் டேவிட் வார்னர் நிதான ஆட்டம் ஆடி துவக்கம் அளித்து இருந்தார். அவர் ஆறாவது ஓவரில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

வார்னர் அவுட்?

வார்னர் அவுட்?

ஆறாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை சந்தித்த வார்னர் பந்தை அடிக்க முடியாமல் தன் பேட்டுக்கும், உடலுக்கும் நடுவே பந்தை தவறவிட்டார். அது கேட்ச் என பெங்களூர் வீரர்கள் அம்பயரிடம் அவுட் கேட்டனர். களத்தில் இருந்த அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார்.

மூன்றாவது அம்பயர் செய்த தவறு

மூன்றாவது அம்பயர் செய்த தவறு

விராட் கோலி டிஆர்எஸ் கேட்டார். மூன்றாவது அம்பயரால் பந்து கிளவுஸ் அல்லது பேட்டில் படுவதை உறுதி செய்ய முடியவில்லை. ஸ்னிக்கோ மீட்டரில் கூட பந்து எங்கே படுகிறது என தெரியவில்லை. இந்த நிலையில் அவுட் கொடுத்திருக்கக் கூடாது. ஆனால், மூன்றாவது அம்பயர் அவுட் தந்தார்.

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

இதைக் கண்ட ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்த தவறால் போட்டியில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. ஹைதராபாத் அணி அதன் பின் தடுமாறத் துவங்கியது. இந்த நிலையில், அம்பயர் முடிவால் தான் ஹைதராபாத் அணி இந்த நிலையை எட்டியது என அனைவரும் சரமாரியாக விளாசத் துவங்கினர்.

வெற்றியால் முடிந்த சர்ச்சை

வெற்றியால் முடிந்த சர்ச்சை

எனினும், போட்டியில் கேன் வில்லியம்சன் அபார ஆட்டம் ஆடி 50 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூர் அணி தோற்று, தொடரை விட்டே விலகியது. இந்த வெட்டியால் இந்த சர்ச்சை பெரிதாக மாறவில்லை.

Story first published: Saturday, November 7, 2020, 9:59 [IST]
Other articles published on Nov 7, 2020
English summary
IPL 2020 Eliminator SRH vs RCB : David Warner DRS wicket controversy by umpire
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X