For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 பேரால்தான் இப்படி ஒரு கதி.. தினேஷ் கார்த்திக் எடுத்த முடிவு.. கலக்கத்தில் ஷாருக்.. என்ன நடந்தது?

துபாய்: கொல்கத்தா அணியின் தொடர் தோல்விகளால் கேப்டன் இயான் மோர்கன் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

2020 ஐபிஎல் தொடரில் புதிய திருப்பமாக கொல்கத்தா அணி பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. வரிசையாக வெற்றிகளை குவித்து பிளே ஆப் செல்லும் என்று நம்பப்பட்ட அணி தற்போது பிளே ஆப் வாய்ப்பை இழப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

தற்போது வரை 13 போட்டிகளில் ஆடி உள்ள கொல்கத்தா அணி 6 போட்டிகளில் வென்றுள்ளது. அடுத்த போட்டியில் வென்றாலும் கூட மிக மோசமான ரன் ரேட் கொண்டு இருப்பதால் கொல்கத்தா அணி பிளே ஆப் செல்வது கடினம் என்கிறார்கள்.

கடினம்

கடினம்

தொடக்கத்தில் இந்த சீசனில் கொல்கத்தா அணி நன்றாகவே ஆடி வந்தது. வரிசையாக 7 போட்டிகளில் மொத்தம் 4 போட்டிகளில் வென்று கொல்கத்தா அணி நம்பிக்கை அளித்தது. அந்த அணி நினைத்து இருந்தால் எளிதாக பிளே ஆப் சென்று இருக்க முடியும். ஆனால் அடுத்தடுத்து அதன்பின் தோல்விகளை தழுவியது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

முதல் பாதியில் 7 போட்டிகளில் 4ல் வென்ற கொல்கத்தா அதன்பின் நடந்த 6 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்றது. அதிலும் ஒரு போட்டி ஹைதராபாத்திற்கு எதிராக சூப்பர் ஓவரில் வென்றது. இதனால் கொல்கத்தா அணி தற்போது பிளே ஆப் செல்வது சநதேகம் ஆகியுள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கொல்கத்தா அணியின் இந்த தோல்விக்கு அணியின் கேப்டன் மாற்றப்பட்டதுதான் காரணம் என்கிறார்கள். கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்த போது, அந்த அணி 4 போட்டிகளில் வென்றது. ஆனால் இயான் மோர்கன் வந்த பின் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

கேபடன்சி மாற்றம்

கேபடன்சி மாற்றம்

இந்த கேப்டன்சி மாற்றம் மொத்தமாக அணியின் சமநிலையை காலி செய்துள்ளது என்கிறார்கள். அணிக்குள் இருந்த முடிவு எடுக்கும் தன்மை, திட்டமிடல் காலியாகி உள்ளது. அதிலும் இயான் மோர்கன் எடுக்கும் பிளேயிங், பேட்டிங் ஆர்டர் என்று எதுவும் சரியில்லை, இயான் மோர்கனின் ஓவர் ரொட்டேஷன், பீல்டிங் செட்டப் என்று எல்லாமே மோசமாக உள்ளது.

காரணம்

காரணம்

கொல்கத்தா அணியின் இந்த சரிவுக்கு 2 பேர்தான் காரணம் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக இரண்டு விதமான தகவல்கள் உலா வருகிறது. ஒன்று தினேஷ் கார்த்திக் தனது பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று சுயமாக எடுத்த முடிவு கொல்கத்தா அணிக்கு எதிராக மாறியது என்கிறார்கள்.

இன்னொரு முடிவு

இன்னொரு முடிவு

இன்னொரு பக்கம் அணி நிர்வாகம்தான தினேஷ் கார்த்திகை நீக்கியது. உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்பதால் இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இயான் மோர்கனும் இதற்கு காய் நகர்த்திதான் வந்தார் என்கிறார்கள். இந்த இரண்டில் ஒன்றுதான் கேப்டன்சி மாறவே காரணம் என்று கூறுகிறார்கள்.

கொல்கத்தா தோல்வி

கொல்கத்தா தோல்வி

இதுவே தற்போது கொல்கத்தா அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. கொல்கத்தா அணி நிர்வாகம் அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டதோ என்று தற்போது ஷாருக்கான் புலம்பிக் கொண்டு இருக்கிறார் . அவசரப்பட்டு கேப்டனை மாற்றிவிட்டோமோ என்று அணி நிர்வாகம் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணியின் தொடர் தோல்வியால் ஷாருக்கான் விரக்தியில் இருக்கிறார் என்கிறார்கள்.

Story first published: Friday, October 30, 2020, 14:03 [IST]
Other articles published on Oct 30, 2020
English summary
IPL 2020: Eoin Morgan captaincy is not good comparing with Dinesh Karthik
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X