For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டனான முதல் நாளே இப்படியா?.. டிகேவின் "லெப்ட் ஹேண்டை" அணியிலிருந்து தூக்கிய மோர்கன்.. பின்னணி!

துபாய்: கொல்கத்தா அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் நாளே அணியின் முக்கியமான வீரர் ஒருவர் இயான் மோர்கன் அணியில் இருந்து நீக்கி உள்ளார்.

கொல்கத்தா அணிக்கும் மும்பை அணிக்கும் இடையில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் கொல்கத்தா அணி ஆடும் முதல் போட்டியாகும் இது. அதிலும் கொல்கத்தா அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இன்றுதான் தினேஷ் கார்த்திக் பதவி விலகினார்..

கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்று உள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றவர் பேட்டிங் தேர்வு செய்தார்.

பல வருடமாக உருவாக்கியதை.. நொடியில் நொறுக்கிவிட்டனர்.. தினேஷ் கார்த்திக் முடிவு.. கம்பீர் கோபம்!பல வருடமாக உருவாக்கியதை.. நொடியில் நொறுக்கிவிட்டனர்.. தினேஷ் கார்த்திக் முடிவு.. கம்பீர் கோபம்!

மோர்கன் நீக்கினார்

மோர்கன் நீக்கினார்

இந்த நிலையில் கொல்கத்தா அணியில் இருந்து கமலேஷ் நாகர்கோட்டியை இயான் மோர்கன் நீக்கினார். கொல்கத்தா அணியில் மிக முக்கியமான பவுலராக கமலேஷ் நாகர்கோட்டி பார்க்கப்பட்டார். இந்திய அண்டர் 19 அணிக்காக விளையாடிய நாகர்கோட்டி தற்போது கொல்கத்தா அணியில் விளையாடி வருகிறார். கடந்த 7 போட்டிகளில் இவர் சிறப்பாகவே பந்து வீசினார்.

தினேஷ் கார்த்திக் நெருக்கம்

தினேஷ் கார்த்திக் நெருக்கம்

பெரிய அளவில் ரன் கொடுக்காமல் பந்து வீசினார். முக்கியமாக தினேஷ் கார்த்திக்கு இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். தோனி எப்படி ஷர்துல் தாகூரை பயன்படுத்துகிறாரோ அதேபோல்தான் நாகர்கோட்டியை தினேஷ் கார்த்திக் பயன்படுத்தி வந்தார். முதல் பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் நாகர்கோட்டியை தினேஷ் கார்த்திக் பயன்படுத்தி வந்தார்.

இடது கை போல இருந்தார்

இடது கை போல இருந்தார்

தினேஷ் கார்த்திக்கின் இடது கை போல கமலேஷ் நாகர்கோட்டி பார்க்கப்பட்டார். ஆனால் இன்று தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டன் கிடையாது. இன்றுதான் முதல் முறையாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இயான் மோர்கன் பதவி ஏற்றார். பதவி ஏற்ற முதல் நாளே மோர்கன் நாகர்கோட்டியை நீக்கி உள்ளார்.

அணியில் புதிய வீரர்

அணியில் புதிய வீரர்

இவருக்கு பதிலாக கிறிஸ் கிரீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிறிஸ் அணி சிறப்பாக டெத் ஓவர்களில் பந்து வீசுவார். பேட்டிங்கும் செய்வார். ஆனால் இதற்காக நாகர்கோட்டியை அணியில் இருந்து நீக்கியதை பலரும் எதிர்த்து உள்ளனர். அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் நாளே இந்திய வீரரை நீக்கியதை பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

கமலேஷ் நாகர்கோட்டி எப்படி

கமலேஷ் நாகர்கோட்டி எப்படி

இந்திய அணி அண்டர் 19 2018 உலகக் கோப்பையை வெல்ல கமலேஷ் நாகர்கோட்டி முக்கியமான காரணமாக இருந்தார். இவரின் பவுலிங் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதுவும் அணியில் தற்போது சுனில் நரேன் இல்லாத போது நாகர்கோட்டியை நீக்குவது தவறு. மோர்கன் கொஞ்சம் யோசித்து முடிவு எடுத்து இருக்கலாம் என்று அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

Story first published: Friday, October 16, 2020, 22:32 [IST]
Other articles published on Oct 16, 2020
English summary
IPL 2020: Eoin Morgan removes Kamlesh Nagarkoti from the KKR team after becomes captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X