For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கூட செய்ய முடியாத அந்த சாதனை.. சாதித்துக் காட்டிய இந்திய வீரர்கள்!

மும்பை : ஐபிஎல் தொடரில் தோனியால் செய்ய முடியாத சாதனை ஒன்றை மூன்று இந்திய வீரர்கள் செய்துள்ளனர்.

Recommended Video

தோனியை கேப்டனாக தேர்வு செய்தவர் ஷாக் பேச்சு

ஐபிஎல் வரலாற்றில் இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களில் சதம் அடித்தவர்கள் மூவர் மட்டுமே.

ஐபிஎல் சதம் அடித்த அந்த மூவர் பட்டியலில் தோனி பெயர் இடம் பெறவில்லை.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ஆடிய கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆக ஆடினார். துவக்க வீரராக களமிறங்கி ஆடி வந்த அவர் தன் இழந்த பார்மை முழுமையாக மீட்டார். கிறிஸ் கெயிலுடன் ஜோடி போட்டு அபார ஆட்டம் ஆடினார்.

64 பந்துகளில் சதம்

64 பந்துகளில் சதம்

கெயிலுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 116 ரன்கள் கூட்டணி அமைத்தார் ராகுல். அந்தப் போட்டியில் 64 பந்துகளில் சதம் அடித்தார் ராகுல். சரியாக 100 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அந்தப் போட்டியில் 197 ரன்கள் குவித்தது.

விரிதிமான் சாஹா

விரிதிமான் சாஹா

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விரிதிமான் சாஹா மட்டுமே. 2014 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆடியது. அந்த அணிக்காக ஆடிய சாஹா, இரண்டு விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் பேட்டிங் செய்து வந்தார்.

சாஹா அதிரடி சதம்

சாஹா அதிரடி சதம்

அவர் அந்தப் போட்டியில் மனன் வோஹ்ராவுடன் இணைந்து அபாரமான கூட்டணி அமைத்தார். சாஹா கடைசி அரை களத்தில் நின்று 55 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார். எனினும், இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

மூன்றாவதாக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். அவர் 2017 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அபார ஆட்டம் ஆடினார். டெல்லி அணி 21 ரன்களுக்கு 2 விக்கெட்கள் இழந்து தவித்த போது களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டம் ஆடினார்.

ரிஷப் பண்ட் முதல் சதம்

ரிஷப் பண்ட் முதல் சதம்

அந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் 63 பந்துகளில் 128 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 187 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 15 ஃபோர், 7 சிக்ஸர் விளாசி இருந்தார். அதுதான் ரிஷப் பண்ட்டின் முதல் ஐபிஎல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனி இல்லை

தோனி இல்லை

இந்த சாதனைப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரில் பல அரைசதங்கள் அடித்துள்ள தோனி, இதுவரை சதம் அடிக்கவில்லை. அவர் பேட்டிங் ஆர்டரில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் களமிறங்குவதால் சதம் அடிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கவில்லை.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

மேலும், மேலே கூறப்பட்டுள்ள மூன்று வீரர்களும் ஆடிய போட்டிகளில் ஒரு ஒற்றுமை உள்ளது. மூன்று போட்டிகளிலும் அந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் சதம் அடித்து இருந்தாலும், அவர்கள் அணி வெற்றி பெறவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் தொற்று

2020 ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 வரை ராகுல் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள அந்த தொடர் இந்த ஆண்டு நடக்குமா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது.

தோனியின் எதிர்காலம்

தோனியின் எதிர்காலம்

அதனால் தோனியின் எதிர்காலமும் கேள்விக் குறியாக உள்ளது. ஐபிஎல் தொடரில் தன் பார்மை நிரூபித்து, டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு திரும்பலாம் என எண்ணி வந்த தோனியை தடுத்து நிறுத்தி உள்ளது கொரோனா வைரஸ்.

Story first published: Monday, March 23, 2020, 17:33 [IST]
Other articles published on Mar 23, 2020
English summary
IPL 2020 : Even Dhoni doesn’t did this record in IPL history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X