For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கஷ்டத்தை காட்டமாட்டேன்.. ரொம்ப வலிக்கிறது.. தோல்விக்குப்பின் உடைந்து நொறுங்கிய தோனி.. பரபர பேச்சு!

துபாய்: சிஎஸ்கே அணியின் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் தோனி நேற்று மிகவும் வருத்தமாக காணப்பட்டார். தோல்வியை ஜீரணிக்க முடியாத தோனி மிகவும் வருத்தமாக பேட்டி கொடுத்தார்.

Recommended Video

Dhoni Speech | தோல்விக்குப்பின் உடைந்து நொறுங்கிய தோனி.. பரபர பேச்சு

நேற்று மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி படுமோசமாக தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து உள்ளது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய மும்பை அணி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் எளிதாக 12.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

தோல்வி

தோல்வி

சிஎஸ்கேவின் தோல்விக்கு பின் பேசிய கேப்டன் தோனி, இந்த தோல்வி எனக்கு வலியை கொடுக்கிறது. எங்கே தவறு நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே முக்கியம். இந்த வருடம் எங்களுக்கான வருடமாக இல்லை. எங்களின் பேட்டிங் பவுலிங் இரண்டும் ஒரு சில போட்டிகளில் மட்டுமே நன்றாக இருந்தது.

முக்கியம் இல்லை

முக்கியம் இல்லை

நீங்கள் எப்படி தோல்வி அடைகிறீர்கள், 10 விக்கெட் மூலமா, 8 விக்கெட் மூலமா என்பது முக்கியம் இல்லை.ஆனால் இந்த தோல்வி எங்களுக்கு வலியை கொடுக்கிறது. எல்லா வீரர்களும் வலியில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்த விஷயங்களை செய்கிறார்கள். எப்போதும் நீங்கள் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்கும் என்று சொல்ல முடியாது.

சிரிப்பை காட்ட வேண்டும்

சிரிப்பை காட்ட வேண்டும்

உங்கள் மனம் வலியில் இருக்கும் போதும் கூட நீங்கள் முகத்தில் சிரிப்பை காட்ட வேண்டும். நான் கஷ்டத்தை வெளியே காட்ட மாட்டேன். அப்படி செய்தால்தான் அணி நிர்வாகம் நீங்கள் பயப்படுகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்காது. அது ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும்.

பாதுகாப்பு உணர்வு

பாதுகாப்பு உணர்வு

இளைஞர்களுக்கு அந்த பாதுகாப்பு உணர்வு அவசியம். சிஎஸ்கே அணி வீரர்கள் அதை சிறப்பாக செய்தனர். சிஎஸ்கே அணியின் டிரெஸ்ஸிங் ரூம் அப்படித்தான் இருந்திருக்கிறது. டிரெஸ்ஸிங் அறையில் நல்ல ஒற்றுமை இருந்திருக்கிறது. அடுத்த மூன்று போட்டிகளில் நிலைமை மாறும் என்று நினைக்கிறேன்.

நன்றாக ஆட வேண்டும்

நன்றாக ஆட வேண்டும்

எங்கள் மீதான மரியாதைக்காகவாது நாங்கள் அடுத்த மூன்று போட்டிகளில் நன்றாக ஆட வேண்டும். இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். அணிக்குள் உறவு நன்றாக இருப்பதே இப்போது முக்கியம். அதை சிஎஸ்கே அணிக்குள் சரியாக கடைப்பிடித்து வருகிறோம், என்று தோனி குறிப்பிட்டு இருக்கிறார் .

முடியாது

முடியாது

பொதுவாக சிஎஸ்கே கேப்டன் தோனி இவ்வளவு வருத்தமாக பேட்டி அளித்தது கிடையாது. ஆனால் நேற்று மிகவும் வருத்தமாக காணப்பட்டார். 10 வருடங்களில் சிஎஸ்கே முதல்முறை பிளே ஆப் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தோனி வருத்தமாக பேசி உள்ளார்.

Story first published: Saturday, October 24, 2020, 12:32 [IST]
Other articles published on Oct 24, 2020
English summary
IPL 2020: Even when you lose, you have to smile says Dhoni after CSK defeat against MI yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X