டூல்ஸ் பிடிச்ச கை.. துல்லியமான மேஜிக் கூக்ளி.. ஐபிஎல் உலகை அதிர வைக்கும் தமிழக "இன்ஜினியர்"!

சென்னை: ஐபிஎல் 2020 தொடரில் தமிழகத்தை வீரர் ஒருவர் பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளார். ஒரு காலத்தில் இன்ஜினியரிங் படித்தவர் தற்போது கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான வீரராக மாறியுள்ளார்.

ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழக வீரர்கள் இந்த தொடரில் அதிக கவனம் ஈர்த்து உள்ளனர். ஆனாலும் விஜய் சங்கர், முரளி விஜய் போன்ற வீரர்கள் மோசமான ஆட்டத்தால் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் அஸ்வின் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இப்போதுதான் தினேஷ் கார்த்திக் தனது கொல்கத்தா அணியை வெற்றி பாதையை நோக்கி திருப்பி உள்ளார்.

இன்னொரு வீரர்

இன்னொரு வீரர்

தமிழக வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பார்மில் இருக்க.. ஒரு வீரர் மட்டும் அனைத்து அணிகளின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை.. பஞ்சாப் அணியின் இளம் ஸ்பின்னர் முருகன் அஸ்வின். சென்னையை சேர்ந்த முருகன் அஸ்வின் 2015ல் இருந்துதான் முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ஆனால் செம

ஆனால் செம

ஆனால் வெறும் 5 வருடத்தில் தற்போது கிரிக்கெட் உலகில் கவனிக்கத்தக்க வீரராக மாறியுள்ளார். 2015 டிசம்பர் 11ம் தேதி இவரின் தொடர் ஆட்டம் காரணமாக விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.அதன்பின் சையது முஸ்தாக் அலி கோப்பை போட்டியில் கடந்த 2016ம் வருடம் இவர் அறிமுகம் ஆனார். அந்த தொடரில் முதல் போட்டியிலேயே 4 ஓவர் போட்டு வலுவான ஹரியானாவில் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

முருகன் அஸ்வின்

முருகன் அஸ்வின்

தொடர்ந்து முதல் தர போட்டிகளில் முருகன் அஸ்வின் சிறப்பாக விளையாடி வந்தார். இதனால் எதிர்காலத்தில் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2016லேயே இவருக்கு பெரிய லக் அடித்தது. சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் 2015-16ல் இவர்தான் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர்.

எவ்வளவு கோடி

எவ்வளவு கோடி

இவரின் முதல் தர போட்டிகளை பார்த்து பிடித்து போன தோனி, அந்த ஐபிஎல் தொடரில் கொக்கி போட்டு முருகன் அஸ்வினை தூக்கினார். ஆம், 2016 ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக தோனி பட்டறையில் தீட்டப்பட்ட குட்டி வைரம்தான் இந்த முருகன் அஸ்வின். அதிலும் இவருக்கு புனே அணி அப்போது 4.6 கோடி ரூபாய் கொடுத்தது.

தோனிக்கு நம்பிக்கை

தோனிக்கு நம்பிக்கை

இந்த வீரருக்கு ஏன் 4.6 கோடி ரூபாய் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இவரின் ஸ்பின் மீது தோனிக்கு நம்பிக்கை இருந்தது. 2015ல் இவர் சிஎஸ்கே அணிக்கு நெட் பவுலிங் செய்து இருக்கிறார். இதனால் தோனி புனே சென்ற போதே தன்னுடன் முருகனை கூட்டி சென்றார். அதன்பின் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை 1 கோடிக்கு வாங்கியது.

டெல்லி மேட்ச்

டெல்லி மேட்ச்

டெல்லி அணியில் சேர்ந்தவர் அந்த வருடம் முழுக்க ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. அதன்பின் பெங்களூர் அணிக்கு சென்றவருக்கு அங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.சாஹல் போன்ற வீரர்கள் இருந்ததால் இவருக்கு பிளேயிங் லெவன் அணியில் வாய்ப்பு கிடைக்கவே இல்லை . அதன்பின்தான் பஞ்சாப் அணியில் ரவிச்சந்திரன அஸ்வின் கேப்டன் ஆன போது இவருக்கு அந்த அணியில் வாய்ப்பு கிடைத்தது.

பஞ்சாப் கேப்டன்

பஞ்சாப் கேப்டன்

பிளெயிங் லெவன் அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த இரண்டு வருடமாக நன்றாக பவுலிங் செய்த முருகன் அஸ்வின் தற்போது முழு பார்மில் இருக்கிறார். பஞ்சாப் கேப்டன் ராகுலும் இவரை நம்ப தொடங்கி உள்ளார்.அமீரகத்தில் இருக்கும் பிட்ச்கள் இவருக்கு சாதகமாக இருக்கிறது. அதேபோல் இவர் போடும் துல்லியமான கூக்ளி பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.

துல்லியம்

துல்லியம்

டெல்லிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடவில்லை. அதன்பின் பெங்களூருக்கு எதிரான போட்டியில் இவரின் பவுலிங் அதிக கவனம் ஈர்த்தது. இதனால் இவர் தொடர்ந்து அணியில் விளையாடுவார் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிலும் இவர் தற்போது ஸ்பின் ஜாம்பவான், பஞ்சாப் பயிற்சியாளர் கும்ப்ளேவின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி பெற்று வருகிறார்.

படிப்பு

படிப்பு

கடந்த போட்டியில் முருகன் அஸ்வின் பவுலிங்கை பார்த்து கும்ப்ளேவே ஆடிப்போனார். கடைசியில் சிரித்துக்கொண்டே இவருக்கு கை தட்டினார். இவரின் கூக்ளி அந்த அளவிற்கு கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளது. சென்னையில் இன்ஜினியரிங் படித்த இவர் அமெரிக்கா சென்று மேற்படிப்பை படிக்கும் திட்டத்தில் இருந்தார் ஆனால் அவரின் பயணம் அதன்பின் கிரிக்கெட்டை நோக்கி நகர்ந்துள்ளது.

நண்பர்கள்

நண்பர்கள்

ரவிசந்திரன் அஸ்வினுக்கு இவர் உறவுக்காரரா என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இவர்கள் இவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்.. நெருக்கமான நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து டூல்ஸ் பிடித்து வளர்ந்தவர்..தற்போது ஐபிஎல் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்து வருகிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: From Engineering to Googly, Who is Murugan Ashwin from Chennai?
Story first published: Sunday, September 27, 2020, 15:31 [IST]
Other articles published on Sep 27, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X