For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மருத்துவமனையில் கிடந்தார்.. ஆடுவதே கஷ்டம் என்றார்கள்.. மாத்திரையை எறிந்துவிட்டு பேட்டை தூக்கிய புயல்

துபாய்: கடந்த வாரம் வரை கிறிஸ் கெயில் ஆடுவாரா மாட்டாரா என்று ஐபிஎல் கிரிக்கெட் உலகமே விக்கித்து நின்ற நிலையில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அதிரடியாக ஆடி கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியின் கேம் சேஞ்சராக மாறியுள்ளார்.

ஐபிஎல் என்றால் சிலருக்கு சிஎஸ்கே நினைவு வரும், சிலருக்கு மும்பை இந்தியன்ஸ் நினைவிற்கு வரும், இன்னும் சிலருக்கு பெங்களூர், பிரீத்தி ஜிந்தா என்று பலரும் நினைவிற்கு வருவார்கள். ஆனால் எல்லோருக்கும் நினைவிற்கு வரும் ஒரு நபர்.. கிறிஸ் கெயில்தான்.

10க்கும் மேற்பட்ட ஐபிஎல் சீசன்களில் ஆடி கலக்கிய கெயில் கடந்த இரண்டு சீசனாக சரியாக ஆட முடியவில்லை. 2017ல் பெங்களூர் அணிக்காக கெயில் சரியாக ஆடாத நிலையில் இந்த 2018ல் கெயில் பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டார்.

எடுக்கப்பட்டார்

எடுக்கப்பட்டார்

ஏலத்தில் கெயிலை எடுக்க யாரும் விருப்பம் தெரிவிக்காத போது, கடைசியில் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. அணியில் எடுத்தாலும் கூட 2018 சீசனில் கேப்டன் அஸ்வின் கெயிலை பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. அதற்கு அடுத்த 2019 சீசனிலும் கெயிலை பெரிய அளவிற்கு பஞ்சாப் அணி பயன்படுத்தவில்லை.

இந்த வருடம் எப்படி

இந்த வருடம் எப்படி

இந்த வருடம் பஞ்சாப் அணி புதிய கேப்டன் ராகுல், புதிய கோச் கும்ப்ளே, நிறைய கர்நாடக வீரர்கள் என்று களமிறங்கியது. ஆனால் இந்த வருடமும் தொடக்கத்தில் கெயிலை பயன்படுத்தாமல் பஞ்சாப் அணி அவரை புறக்கணித்து வந்தது. மோசமாக ஆடிய மெக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆடவே முடியாமல் திணறிய கருண் நாயர் போன்ற வீரர்களுக்கு கூட வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கெயில் மட்டும் களமிறக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே இருந்தார். அதிலும் இவர் களமிறங்க வேண்டிய சூழ்நிலை உருவான போதும் பேட்டிங் இறங்க முடியாமல் போனது. காரணம் இவர் சாப்பிட்ட உணவு புட் பாய்சன் ஆகி மருத்துவமனையில் கிடந்தார். கடந்த வாரம் கூட இவர் மருத்துவமனையில் இருந்தார். அதிக நீர் சத்தை இழந்து கஷ்டப்பட்டார்.

வயது

வயது

40 வயதிற்கும் மேல் ஆகிவிட்டது.. உடலில் நீர் சத்து இல்லை. இப்படி இருக்கும் போது அமீரகத்தில் கடும் வெப்பநிலையில் கெயில் எப்படி பேட்டிங் செய்வார். அவரால் ஆட முடியாது, அவர் களமிறங்குவதே கஷ்டம் என்று பலரும் இணையத்தில் அவருக்கு முடிவுரை கட்டினார்கள். ஆனால் பெங்களூருக்கு எதிரான போட்டிக்கு முன் கையில் இருந்த மாத்திரையை எறிந்துவிட்டு கெயில் பேட்டை தூக்கினார்.

இரண்டு போட்டி

இரண்டு போட்டி

பெங்களூருக்கு எதிரான பஞ்சாப் அணிக்காக அன்று ஒன் டவுன் இறங்கிய கெயில் 45 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். அரை சதம் அடித்த இவர் 5 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்தார். ஒரு வருடம் கழித்து பேட்டிங் இறங்கிய கெயில் அதற்கான எந்த சுவடும் இன்றி முதல் போட்டியிலேயே மாஸ் ஆட்டம் ஆடினார். அரை சதம் அடித்துவிட்டு, தான்தான் பாஸ் என்பதை நிரூபித்தார்.

செம

செம

தனது பேட்டில் இருந்த தி பாஸ் வாசகத்தை உயர்த்தி காட்டி.. விமர்சனங்களுக்கு எல்லாம் ஒரே மேட்சில் பதிலடி கொடுத்தார். அதேபோல் நேற்று நடந்த போட்டியிலும் இவர்தான் கடைசியில் போடப்பட்ட இரண்டாவது சூப்பர் ஓவரில் கேம் சேஞ்சராக இருந்தார். நேற்று மும்பை சார்பாக இரண்டாவது சூப்பர் ஓவரை போல்ட் வீசினார். இதில் 12 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் கெயில் முதல் பந்திலேயே 6 அடித்து போட்டியை அடியோடு மாற்றினார்.

மாற்றினார்

மாற்றினார்

பஞ்சாப் அணி வெல்லுமா என்று கருதப்பட்ட நிலையில்.. அட இதைத்தான் இவ்வளவு நேரம் உருட்டிக்கிட்டு இருந்தீங்களா என்று ஒரே பாலில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தையே மாற்றினார். இதுவரை 2020 ஐபிஎல் சீசனில் போடப்பட்ட சூப்பர் ஓவர்களில் கெயில் மட்டுமே சிக்ஸ் அடித்துள்ளார். 40+ வயதில் பல இன்னல்களை தாண்டி, கடுமையான வெப்பநிலையில் அடித்து நொறுக்கும் கெயில்.. உண்மையில் பாஸ்தான்!

Story first published: Monday, October 19, 2020, 9:08 [IST]
Other articles published on Oct 19, 2020
English summary
IPL 2020: Gayle becomes a game-changer for the MI vs KXIP match super over.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X