For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படி மாற்றினார்? தோனி, கோலியால் கூட முடியவில்லை.. "கேப்டன்" கே.எல் ராகுலின் மாஸ்டர் ஸ்டிரோக்!

அபுதாபி: ஐபிஎல் தொடரில் எந்த அணியும் சாதிக்க முடியாத மிக முக்கியமான விஷயத்தை பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல் செய்து காட்டி உள்ளார். பஞ்சாப் அணிக்காக அவர் முதல் முறை கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் நிலையில் மாஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தி காட்டி உள்ளார்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று பஞ்சாப் தோல்வி அடைந்தது.

அந்த போட்டியில் பஞ்சாப் பெரிதாக தவறு எதுவும் செய்யவில்லை. அதற்கு அடுத்த போட்டியிலேயே பெங்களூரை துவைத்து எடுத்து பஞ்சாப் வெற்றிபெற்றது.

மாஸ் வெற்றி

மாஸ் வெற்றி

அந்த போட்டியில் பஞ்சாப் வென்றதை தொடர்ந்து இன்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் பஞ்சாப் அதிரடி காட்டி வருகிறது . பஞ்சாப் அணிக்காக ஓப்பனிங் இறங்கி இருக்கும் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் தொடக்கத்தில் இருந்து இருந்து அதிரடி காட்டி வருகிறார்கள் . அதிலும் பஞ்சாப் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சிக்ஸ்ர் பவுண்டரிகளை பறக்கவிட்டு சதம் கடந்துள்ளார்.

அரைசதம்

அரைசதம்

கடந்த இரண்டு போட்டியிலும் சரி, இன்று நடக்கும் போட்டியிலும் சரி மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்று பார்த்தால் அது மயங்க் அகர்வாலின் பார்ம்தான். டெல்லிக்கு எதிரான போட்டியில் 89, பெங்களூருக்கு எதிரான போட்டியில் 26, இன்றைய போட்டியில் அரை சதம் என்று மயங்க் அதிரடி காட்டி வருகிறார். இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம்..ஒரு சிறந்த டெஸ்ட் பிளேயர் எப்படி மொத்தமாக டி 20 ஹீரோவாக மாறி இருக்கிறார் என்பது தான்.

இல்லை இதுவரை

இல்லை இதுவரை

பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் யாரும் ஐபிஎல்லில் சரியாக ஆடியது கிடையாது. புஜாரா போன்ற வீரர்களுக்கு இந்த முறை ஐபிஎல் போட்டியில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இன்னொரு பக்கம் வாய்ப்பு கிடைத்த ரஹானே போன்ற வீரர்கள் அணியில் எடுக்கப்படவில்லை. அணியில் எடுக்கப்பட்ட முரளி விஜய் போன்ற வீரர்கள் மோசமாக திணறுகிறார்கள்.

மாற்ற முடியவில்லை

மாற்ற முடியவில்லை

டெஸ்ட் வீரர்களை டி20 பார்மட்டிற்கு மாற்றுவது கடினம். தோனி தொடங்கி கோலி வரை முக்கியமான கேப்டன்கள் எல்லோரும் தங்கள் அணியில் இருக்கும் டெஸ்ட் வீரர்களை டி20 பார்மட்டிற்கு மாற்ற முயன்று தோல்வி அடைந்துள்ளனர் . இன்னும் கூட தோனியால் முரளி விஜயை டி20க்கு ஏற்றபடி மாற்ற முடியவில்லை. ஆனால் இப்படி பெரிய கேப்டன்கள் செய்ய முடியாததை கேப்டன் கே எல் ராகுல் செய்து காட்டி உள்ளார்.

டெஸ்ட் வீரர்

டெஸ்ட் வீரர்

ஆம், மயங்க் என்ற டெஸ்ட் வீரரை கேஎல் ராகுல் டி20 வீரராக மாற்றி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தன்னை ஜாம்பவான் என்று நிரூபித்து இருக்கும் மயங்க் அகர்வால் தற்போது தன்னை டி20 போட்டிகளில் நிரூபித்து வருகிறார். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. கேஎல் ராகுல் உடன் இவருக்கு இருக்கும் நெருக்கம் இதில் முக்கியமான ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

சூப்பர் டீம்

சூப்பர் டீம்

கே. எல் ராகுலுக்கு கீழ் ஆடுவதுதான் மயங்கின் இந்த திடீர் பார்மிற்கு காரணம் என்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக கிரிக்கெட் போட்டிகளில் கர்நாடக அணிக்காக ஆட தொடங்கியவர்கள். அதேபோல் பெங்களூர் அணிக்காக கும்ப்ளேவின் கீழ் இவர் விளையாடி உள்ளனர். இந்த நட்பும், தற்போது கே. எல் ராகுல் கொடுக்கும் டிப்ஸும் இவரின் பேட்டிங் ஸ்டைலை மாற்றி உள்ளது என்கிறார்கள்.

பயிற்சி

பயிற்சி

கடந்த 2018 ஐபிஎல் போட்டியில் கேஎல் ராகுல் வேகமான அரை சதம் அடித்துவிட்டு, தன்னுடைய ஆட்டத்திற்கு கெயில் கொடுத்த டிப்ஸ்தான் காரணம் என்றார்..அதேபோல் மயங்க் அகர்வால் இந்த முறை கெயில், கே. எல் ராகுல் என்று இருவரிடமும் பயிற்சி எடுத்துள்ளார். இரண்டு ஹிட்டர்கள் கொடுத்த பயிற்சி இவரின் பேட்டிங் ஸ்டைலை மாற்றி உள்ளது.

இதுவரை இல்லை ஏன்?

இதுவரை இல்லை ஏன்?

இதுவரை ஐபிஎல்லில் சரியாக ஆடாத இவர் இப்போது அதிரடி காட்டவும் இதுதான் காரணம். கே .எல் ராகுல் மயங்க்கை பயன்படுத்துவது போல மற்ற கேப்டன்கள் இவரை பயன்படுத்தவில்லை. கே. எல் ராகுல் அப்படியே மயங்கின் பேட்டிங் ஸ்டைலை மாற்றிவிட்டார். இதுதான் ஒரு கேப்டனின் திறமை. தனது வீரர்களிடம் புதிய திறனை கண்டுபிடிப்பது. அது கே.எல் ராகுலிடம் உள்ளது. அதோடு இன்னொரு பக்கம் பஞ்சாப் அணி முழுக்க கர்நாடகாவை சேர்ந்த வீரர்கள் இருப்பதால் சையது முஷ்டாக் கோப்பைக்கு ஆடுவதாக நினைத்துக் கொண்டு மயங்க் மிகவும் நம்பிக்கையாக ஆடி வருகிறார்.

கடந்த வருடம்

கடந்த வருடம்

அதேபோல் சையது முஷ்டாக் அலி கோப்பையின் 20-20 தொடர்களில் ஆடி இவர் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். இந்த பயிற்சியும் இவரின் பார்மிற்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.கடந்த வருடம் இந்த தொடரில் கர்நாடகா மாஸ் காட்டியது. இந்த தொடரில் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடினார். அதே பார்மை தற்போது ஐபிஎல் டி20 தொடருக்கு மயங்க் அகர்வால் கொண்டு வந்து இருக்கிறார்

டெஸ்ட் பிளேயர்

டெஸ்ட் பிளேயர்

இதெல்லாம் போக கர்நாடகாவை சேர்ந்த கும்ப்ளே பயிற்சி கொடுப்பதும், கடந்த ஒரு வருடமாக இவர் ஐபிஎல்லுக்கு தயார் ஆனதும் கூட இவரின் தன்னம்பிக்கை அதிகரிக்க காரணம் என்று கூறுகிறார்கள்.. இதனால்தான் ஒரு முழு நேர டெஸ்ட் பிளேயர் தற்போது ஐபிஎல் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். ஒரு டெஸ்ட் பிளேயரை ஓப்பனாராக இறக்கியும் கூட கே.எல் ராகுல் பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லவும் இதுதான் காரணம்.

Story first published: Sunday, September 27, 2020, 20:54 [IST]
Other articles published on Sep 27, 2020
English summary
IPL 2020: How K L Rahul Shaped test player Mayank Agarwal into t20 player
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X