For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே என்னை நம்பவில்லை.. ஒரே ஓவரில் போட்டியை மாற்றியது எப்படி? ரகசியத்தை உடைத்த ராகுல் திவாதியா!

ஷார்ஜா: பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் ராஜஸ்தான் வீரர் ராகுல் திவாதியாவை கிரிக்கெட் உலகமே பாராட்டி வருகிறது.

நேற்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக சென்றது. டாஸ் வென்ற நொடியில் இருந்தே இரண்டு அணிகளும் அதிரடியாக ஆடியது.

தொடக்கத்தில் இருந்து வேகமாக ரன் குவிக்கும் நோக்கத்தோடு ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 223 ரன்கள் எடுத்து அதிர வைத்தது. மயங்க் அகர்வால் 50 பந்துகள் பிடித்து 106 ரன்கள் எடுத்தார்.

செம தொடக்கம்

செம தொடக்கம்

54 பந்துகள் பிடித்த கே.எல் ராகுல் 69 ரன்கள் எடுத்தார். இதனால் ராஜஸ்தானுக்கு ஒரு ஓவரில் 11.15 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஆனால் 223 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேஸ் செய்யும் எந்த பிரஷரும் இல்லாமல் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. ஒரு பக்கம் ஸ்மித் அரை சதம் அடித்தார். இன்னொரு பக்கம் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். இதில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி அடக்கம்.

வெற்றி பெறும்

வெற்றி பெறும்

இதனால் ராஜஸ்தான் வென்றுவிடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் பவுலர் ராகுல் திவாதியா மிக மோசமாக பேட்டிங் செய்தார். பெரிய அளவில் ஹிட் எதுவும் அடிக்கமால் டொக் வைத்து ஆடினார். அவர் எதிர்கொண்ட முதல் 23 பந்துகளில் 17 ரன்களை மட்டுமே எடுத்தார்.இதனால் கடைசி மூன்று ஓவரில் 51 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

சிக்ஸ்

சிக்ஸ்

ராகுல் திவாதியா மொத்தமாக போட்டியின் போக்கையே மாற்றிவிட்டார். ராஜஸ்தான் தோல்விக்கு இவர் காரணமாக இருக்க போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ராஜஸ்தான் அணி ராகுல் திவாதியாவை முன்பே இறக்கியதால் அந்த அணியின் ரன் ரேட் குறைந்தது. ஆனால் கடைசியில் அவரும் அதிரடி காட்டி ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்தார்.

செம

செம

காட்ரல் ஓவரில் 5 சிக்ஸ் அடித்து, ஒரே ஓவரில் 30 ரன்கள் எடுத்து மொத்தமாக போட்டியை புரட்டி போட்டார் ராகுல். அதன்பின் 19வது ஓவரில் இவர் அவுட்டானாலும், மொத்தமாக அதற்கு முன்பே போட்டியின் போக்கை மாற்றிவிட்டார். ராகுல் திவாதியா ஆட்டத்தை உலகமே பாராட்டி வரும் நிலையில், அவர் தனது ஆட்டம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், நான் முதலில் கொஞ்சம் திணறினேன்.

எப்படி ஆடினேன்

எப்படி ஆடினேன்

என்னுடைய ஆட்டத்தின் முதல் பாதி மிக மோசமாக இருந்தது. நான் ஆடியதில் மிக மோசமான நிமிடங்கள் அதுதான் என்று கூட சொல்வேன். எதிர் அணியினர் நான் அடித்து ஆடுவேன் என்று நம்பவில்லை. ஆனால் அதன்பின் போட்டி மாறியது. மிக மோசமான 20 பந்துகளை எதிர்கொண்டுவிட்டு, தொடர்ந்து நம்பிக்கையோடு விளையாடினேன். எனக்கு நெட் பயிற்சியில் நன்றாக அடிக்க முடிந்தது.

சிக்ஸ் அடித்து பயிற்சி

சிக்ஸ் அடித்து பயிற்சி

அடுத்தடுத்து சிக்ஸ் அடித்து பயிற்சி செய்தேன். அதனால் எனக்கு என் மீது நம்பிக்கை இருந்தது. தொடர்ந்து ஆடினேன். முதலில் நான் பந்துகளை அடிக்கவில்லை. பெவிலியனில் பார்க்கும் போது, எல்லோரும் நான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தனர். என்னால் சிக்ஸ் அடிக்க முடியும் எனபது அவர்களுக்கு தெரியும்.

நம்பிக்கை முக்கியம்

நம்பிக்கை முக்கியம்

என் மீது நான் நம்பிக்கை வைக்க வேண்டும். அதை மட்டும் நான் சரியாக செய்தேன். ஒரே ஒரு சிக்ஸ் அடித்த உடன் எனக்கு நம்பிக்கை வந்தது. அதன்பின் வரிசையாக அடிக்க தொடங்கினேன். அந்த ஒரு சிக்ஸ்தான் போட்டியை மாற்றியது. அதன்பின் அடுத்தடுத்து 4 சிக்ஸ் அடித்தேன். என்னை களமிறக்கியது சிக்ஸ் அடிக்கத்தான்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

லெக் ஸ்பின் பவுலிங்கில் சிக்ஸ் அடிக்கத்தான் என்னை கோச் அனுப்பினார். ஆனால் நான் அப்போது சிக்ஸ் அடிக்கவில்லை. அப்போது சரியாக ஆட முடியவில்லை. ஆனால் அதன்பின் வேறு பவுலர்களின் பந்துகளில் சிக்ஸ் அடிக்க முடிந்தது. அதுதான் ஆட்டத்தை மாற்றியது, என்று திவாதியா கூறியுள்ளார்.

Story first published: Monday, September 28, 2020, 9:02 [IST]
Other articles published on Sep 28, 2020
English summary
IPL 2020: I trained for this in net says Rahul Tewatia about his batting against Punjab yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X