For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீக்க முடியாமல் தவித்த தோனிக்கு.. செக் வைத்த விதி.. பிளேயிங் லெவனில் மாற்றம்..இனி பிளான்படி நடக்கும்

துபாய்: இன்று ராஜஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ள சிஎஸ்கே அணியில் பிராவோ நீக்கப்பட்டு ஹசல்வுட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடக்க உள்ளது. சிஎஸ்கே அணியின் தலை விதியை நிர்ணயிக்க போகும் ஆட்டம் இன்று நடக்க உள்ளது.

ராஜஸ்தான் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபுதாபியில் நடக்க உள்ளது. இதில் சிஎஸ்கே தோல்வி அடைந்தால் பிளே ஆப் செல்வது கனவாகிவிடும். இதனால் சிஎஸ்கே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

கடைசியாக டெல்லிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட கடைசி ஓவரில் சொதப்பிய காரணத்தால் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. கடைசி ஓவரை வீச வேண்டிய பிராவோ காயம் காரணமாக வெளியேறினார். இதனால் ஜடேஜா கடைசி ஓவரை வீச.. சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பிராவோ இன்னும் இரண்டு வாரங்கள் ஆடுவது கஷ்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு வாரங்கள் அவர் களத்திற்கு வர முடியாது. அதற்கு முன்பு வந்தாலும் கூட சிஎஸ்கே ஆடும் அடுத்த 2-3 போட்டிகளில் பிராவோ கண்டிப்பாக ஆடவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இன்று ஆட மாட்டார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதன் காரணமாக இன்று கண்டிப்பாக அணிக்குள் இம்ரான் தாஹிர் வருவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹசல் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கேவில் இன்று சாம் கரன், டு பிளசிஸ், வாட்சன்,ஹசல்வுட் ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்கள் ஆடுவார்கள். மற்றபடி ப்ளெயின் லெவனில் இன்று மாற்றம் எதுவும் இல்லை. இத்தனை நாட்கள் சிஎஸ்கேவிற்கு பிராவோதான் டெத் ஓவர் வீசி வந்தார்.

டெத் ஓவர்

டெத் ஓவர்

இதனால் தோனி அவரை நீக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பிராவோ டெத் ஓவர் வீசுவதால், அவரின் பேட்டிங் குறித்து தோனி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதனால் பிராவோவை அணியில் இருந்து நீக்குவதை தோனி விரும்பவில்லை. இந்த நிலையில் விதியே தற்போது பிராவோவை நீக்க வைத்துள்ளது. பிராவோ காயம் காரணமாக கஷ்டப்படுவதால் ஹஸல்வுட் இன்று ஆடுவார்.

எப்படி

எப்படி

அமீரகத்தில் இருக்கும் பிட்ச்கள் ஸ்லோ பிட்சாக மாறி வருகிறது. இதனால் இம்ரான் தாஹிருக்கு பவுலிங் செய்ய வசதியாக இருக்கும். ஆனாலும் இன்றி தாஹிருக்கு பதிலாக ஹசல்வுட் வந்துள்ளார். டெத் ஓவர் தேவை என்பதால் ஹசல் உள்ளே வந்துள்ளார். இதன் காரணமாக தோனி தனது டெத் ஓவர் பிளானை இனி எளிதாக களமிறக்க முடியும். கடந்த போட்டி போல தோனி ஜடேஜாவை நம்பி இருக்க வேண்டியது இல்லை.

Story first published: Monday, October 19, 2020, 19:47 [IST]
Other articles published on Oct 19, 2020
English summary
IPL 2020: Why Dhoni chooses hazelwood over Tahir for CSK team?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X