For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்போது எல்லாம் புரிகிறது.. கஷ்டமாக இருந்தது.. சிஎஸ்கேவில் நடப்பது என்ன? இம்ரான் தாஹிர் பரபர பேச்சு!

துபாய்: சிஎஸ்கே அணியில் நடக்கும் முக்கியமான விஷயம் ஒன்று குறித்து மூத்த வீரர் இம்ரான் தாஹிர் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று சிஎஸ்கே அணிக்கும் மும்பைக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது.

இன்று நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் விளையாடுவார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இன்றைய மேட்சில் பெரும்பாலும் இம்ரான் தாஹிர் சிஎஸ்கே சார்பாக களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்குள் நடக்கும் விஷயங்கள் குறித்து மூத்த வீரர் இம்ரான் தாஹிர் பேட்டி அளித்துள்ளார். தமிழக வீரர் அஸ்வினின் யூ டியூப் சேனலுக்காக அவரிடம் பேசிய இம்ரான் தாஹிர் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில்.. நான் இதுவரை பல கிரிக்கெட் அணியில் லீக் போட்டிகளில் ஆடி உள்ளேன்.

ஆனால் சென்னை

ஆனால் சென்னை

பல அணிகளில் ஆடி இருந்தாலும் என் இதயத்தில் இருந்து சொல்கிறேன். சென்னைதான் எப்போதும் சிறந்த அணி. உலகம் முழுக்க சென்று இருக்கிறேன். சென்னை மாதிரி ஒரு அணியை நான் பார்த்தது இல்லை. சென்னையை போல வேறு எந்த ஒரு அணி நிர்வாகமும் வீரர்களை மதித்து நான் பார்த்தது இல்லை .

என் குடும்பம்

என் குடும்பம்

சென்னை அணி என்னை மட்டுமின்றி என்னுடைய குடும்பத்தையும் நன்றாக பார்த்துக்கொண்டார்கள். சென்னை அணி ரசிகர்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக எங்கள் மீது அன்பை பொழிந்தனர். நாங்கள் சென்னையில் விளையாடிய போது அங்கு சூழ்நிலை, கலாச்சாரம் வேறு மாதிரி இருந்தது.

கலாச்சாரம்

கலாச்சாரம்

சென்னை மக்களின் கலாச்சாரம் எனக்கும் பிடிக்கும். சிஎஸ்கே அணியில் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கிறது. சிஎஸ்கே அணி நிர்வாகம் உங்களின் ஆட்டத்தை எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காது. உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும். அதுதான் முக்கியமான விஷயம்.

எப்படி

எப்படி

நீங்கள் எப்படி ஆடினாலும் அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வீரர்களுக்கு கூல் ட்ரிங்ஸ் சுமந்து செல்வதை நான் பெருமையாகவே கருதுகிறேன். அணியில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. கடந்த சீசன்களில் டு பிளசிஸ் சிஎஸ்கே அணியில் இப்படி கூல் டிரிங்ஸ் சுமந்து சென்றார்.

மொத்த சீசன்

மொத்த சீசன்

மொத்த சீசனும் கூல்ட்ரிங்ஸ் சுமந்து சென்றார். அது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் எப்படி உணர்ந்து இருப்பார் என்பதை இப்போது புரிந்து கொள்ள முடியாது. அவரிடம் இதுகுறித்து பேசினேன். 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆட முடியும். சிஎஸ்கே அணியில் ஒருமுறை 4 வெளிநாட்டு வீரர்கள் செட்டாகிவிட்டால் வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்.

கஷ்டம்

கஷ்டம்

அணியில் தற்போது அதே நிலைதான் இருக்கிறது. சிஎஸ்கே அணியில் தற்போது ஏறத்தாழ 4 வீரர்கள் தேர்வாகிவிட்டனர். இதனால்தான் இந்த சீசனில் இதுவரை நான் இறங்கவில்லை. இதற்கு பின் வேறு காரணம் இல்லை. விரைவில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். வரும் போட்டிகளில் பார்க்கலாம் என்று இம்ரான் தாஹிர் பேட்டி அளித்துள்ளார்.

Story first published: Friday, October 23, 2020, 15:32 [IST]
Other articles published on Oct 23, 2020
English summary
IPL 2020: Imran Tahir says He loves the CSK culture and team management.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X