For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2020 : அதிகமான வீரர்கள்... குறைவான ஊழியர்களை அழைத்து செல்ல பிசிசிஐ முடிவு?

மும்பை : ஐபிஎல் 2020 போட்டிகள் யூஏஇயில் வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் தேதிவரையில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Recommended Video

IPL2020 : அதிகமான வீரர்கள்... குறைவான ஊழியர்கள்

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஐபிஎல் குறித்த பல்வேறு விஷயங்களில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அதிகமான வீரர்களையும் குறைவான ஊழியர்களையும் யூஏஇக்கு அழைத்து செல்ல பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

யாருப்பா இது? 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கோச்.. பலருக்கும் தெரியாத ரகசியம்!யாருப்பா இது? 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் கோச்.. பலருக்கும் தெரியாத ரகசியம்!

யூஏஇயில் ஐபிஎல் 2020

யூஏஇயில் ஐபிஎல் 2020

ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் 19ல் துவங்கி நவம்பர் மாதம் 8ம் தேதி வரையில் யூஏஇயில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் யூஏஇயில் இந்த தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றம் ஏற்படலாம் என்றும் இதுகுறித்து நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஐபிஎல் நிர்வாக குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

20 வீரர்களுக்கு அனுமதி

20 வீரர்களுக்கு அனுமதி

வழக்கமாக ஐபிஎல் குழுக்களில் 20 முதல் 25 வீரர்கள் இடம்பெறுவார்கள். இதேபோல 10 முதல் 15 வரையில் ஊழியர்களும் இடம்பெறுவார்கள். ஆனால் இந்த முறை யூஏஇயில் போட்டிகள் நடைபெறவுள்ளதால் இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 20 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் நிதிச்சுமையும் குறையும்.

வீரர்கள் குறைப்பு

வீரர்கள் குறைப்பு

யூஏஇயில் தங்களது பாதுகாப்பு நடைமுறைகளை ஐபிஎல் அணிகள் தாங்களே செய்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் வீரர்கள் உள்ளிட்டவர்களை குறைப்பது அணிகளுக்கு அவசியமாகிறது. கடந்த 2014ல் யூஏஇயில் ஐபிஎல் நடத்தப்பட்ட போதும் இதேபோல குறைவான வீரர்களையே ஐபிஎல் அணிகள் அழைத்து சென்றன.

ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டம்

ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டம்

இவ்வாறு 20 வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டால், தங்களது அணிகளில் விளையாடாத வீரர்களை ஐபிஎல் அணிகள் குறைக்கும் என்று தெரிகிறது. இதேபோல ஆகஸ்ட் 15ம் தேதியை ஒட்டி அனைத்து அணிகளும் யூஏஇக்கு பயணம் செய்யவுள்ள நிலையில், சிஎஸ்கே முன்னதாகவே ஆகஸ்ட் 10 தேதியே தங்களது பயணத்தை துவக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் நிர்வாகக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் விதிமுறைகளின்படி இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Story first published: Friday, July 31, 2020, 14:12 [IST]
Other articles published on Jul 31, 2020
English summary
Three-time champions Chennai Super Kings are working on touching down in Dubai on August 10
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X