For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு செம செக்.. மொத்தமாக திரண்டு வந்த வெளிநாட்டு வீரர்கள்.. இந்திய அணியை ஒரு வழி பண்ண போறாங்க!

துபாய்: இந்திய அணியின் தேர்வுக் குழு பாரபட்சமாக செயல்படுவதாக தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். கேப்டன் கோலி இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வரும் டிசம்பர் மாதம் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் நடக்க உள்ளது.

இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யா குமார் யாதவ் இடம்பெறவில்லை என்பதுதான் தற்போது புகாராக உள்ளது.

புகார் என்ன

புகார் என்ன

மும்பை இந்தியன்ஸ் அணியில் மிடில் ஆர்டரில் இறங்கி ஆடி வரும் வரும் வீரர்தான் சூர்ய குமார் யாதவ். தொடர்ந்து மூன்று வருடமாக சூர்ய குமார் யாதவ் சிறப்பாக ஆடியும் கூட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் மும்பை அணியின் வீரர் என்பதால் கோலி தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்து வருகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

கடந்த உலகக் கோப்பை தொடரில் விஜய் சங்கர் போன்ற வீரர்களுக்கு கூட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின் திடீர் என்று பண்ட் போன்ற வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருமே சரியாக ஆடவில்லை. ஆனாலும் கூட சூர்ய குமார் யாதவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவே இல்லை.இது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

நேற்று எப்படி

நேற்று எப்படி

இந்திய அணியில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு நேற்று தனது பேட்டிங் மூலம் சூர்ய குமார் யாதவ் பதிலடி கொடுத்தார். 43 பந்தில் 79 ரன்கள் எடுத்து முரட்டு சம்பவம் செய்தார். இந்த நிலையில் வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்திய அணியின் தேர்வுக்குழுவை மறைமுகமாக சாடி உள்ளனர். சாம் பில்லிங்ஸ் தொடங்கி பொல்லார்ட் வரை பலர் இந்திய அணியின் தேர்வுக்குழுவை சாடி உள்ளனர்.

எப்படிப்பட்ட வீரர்

எப்படிப்பட்ட வீரர்

சூர்ய குமார் யாதவ் ஒரு சீரியஸான வீரர் என்று சாம் பில்லிங்ஸ் கூறியுள்ளார். சூர்ய குமார் யாதவ் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும், வேறு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஸ்காட் ஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு தேர்வாகவில்லை என்ற வருத்தம் சூர்ய குமார் யாதவிற்கு உள்ளது என்று வெளிப்படையாக பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

நீல உடை

நீல உடை

அதேபோல் மிட்சல் மெக்லான்கான்.. இந்தியாவின் 360 வீரர் சூர்ய குமார் யாதவ்.. சிறப்பான ஆட்டம் ஆடினார். இப்படியே ஆடுங்கள்.. நீல உடையில் நன்றாக உள்ளீர்கள் என்று இந்திய தேர்வுக்குழுவை சீண்டி உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பலர் இப்படி சூர்ய குமார் யாதவிற்கு ஆதரவாக பேசி உள்ளனர். ஆனால் இது ஒரு வகையில் இந்திய அணியின் தேர்வு குழுவிற்கும் சிக்கலாக மாறியுள்ளது .

ஒரு வீரர்

ஒரு வீரர்

ஒரு வீரரை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று வெளிநாட்டு வீரர்கள் அழுத்தம் கொடுப்பது இதுவே முதல் முறை . வெளிநாட்டு வீரர்கள் இப்படி ஒன்றாக வந்து அழுத்தம் கொடுப்பது இதுவே முதல் முறை. இதற்கு பிசிசிஐ செவி சாய்த்தால்.. வரும் நாட்களில் வெளிநாட்டு வீரர்கள் என்ன மாதிரியான அழுத்தங்களை வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதே சமயம் சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்காமலும் இருப்பது தவறு.

சிக்கல்

சிக்கல்

இதனால் கோலியும், பிசிசிஐ அமைப்பும் கடும் சிக்கலில் மாட்டியுள்ளது. அழுத்தத்தற்கு அடி பணிந்து, சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா? அல்லது அவரை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டுமா என்று குழம்பி போய் உள்ளனர். உன் பக்கம் நியாயம் இருந்தால் உலகமே உன்னுடன் நிற்கும் என்பார்கள்.. இப்போது அப்படித்தான் சூர்ய குமார் யாதவுடன் சர்வதேச வீரர்கள் உடன் நிற்கிறார்கள்.

Story first published: Thursday, October 29, 2020, 12:03 [IST]
Other articles published on Oct 29, 2020
English summary
IPL 2020: International players supports Surya Kumar Yadav for Team India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X