For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐயா வாங்க, அம்மா வாங்க.. கூவிக்கூவி கூப்பிட்டாலும் யாரும் வரமாட்டேங்கிறாங்களே.. ஐபிஎல் அணிகள் கதறல்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதத்தில் நடக்க உள்ளது. இது ஐபிஎல் அணிகளுக்கு மிக மிக நல்ல செய்தி தான்.

ஆனாலும், ஐபிஎல் அணிகள் முக்கிய வருவாயை இழக்கும் அபாயத்தில் உள்ளன. ஆம், பெரு நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளிடம் விளம்பரம் செய்ய மறுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்னை ஏன் வார்னேவுடன் ஒப்பிடறாங்கன்னு தெரியல... அனில் கும்ப்ளே கேள்வி என்னை ஏன் வார்னேவுடன் ஒப்பிடறாங்கன்னு தெரியல... அனில் கும்ப்ளே கேள்வி

தாமதம்

தாமதம்

2020 ஐபிஎல் தொடர் சுமார் ஆறு மாதம் தாமதமாக நடைபெற உள்ளது. அதற்கு காரணம் கொரோனா வைரஸ். ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐக்கு மட்டும் 4,000 கோடி நஷ்டம் ஏற்படும் எனவும், ஐபிஎல் அணிகள் ஒவ்வொன்றுக்கும் சில நூறு கோடிகள் நஷ்டம் ஆகும் எனவும் கூறப்பட்டது.

நஷ்டம் இருக்காது?

நஷ்டம் இருக்காது?

இந்த நிலையில், பிசிசிஐ திட்டமிட்டு டி20 உலகக்கோப்பை தள்ளி வைக்கப்பட்டதால், அந்த தேதிகளில் ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது. ஒரு வழியாக ஐபிஎல்-இல் நஷ்டம் ஏற்படாமல் அனைவரும் தப்பியதாக நினைத்த நிலையில், ஐபிஎல் அணிகள் வேறு ஒரு சிக்கலில் இருக்கின்றன.

விளம்பரப் போட்டி

விளம்பரப் போட்டி

கடந்த மார்ச் மாதம் ஐபிஎல் தொடர் வழக்கம் போல நடைபெறும் எனக் கருதி பல நிறுவனங்களும் ஐபிஎல் அணிகளில் விளம்பரம் செய்ய போட்டி போட்டன. அதனால் அப்போது 95 சதவீத விளம்பரங்கள் ஐபிஎல் அணிகளுக்கு குவிந்து இருந்தது.

முக்கிய வருவாய்

முக்கிய வருவாய்

அந்த விளம்பர வருவாய் தான் ஐபிஎல் அணிகளின் முக்கிய வருவாய் ஆகும். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வெளிநாட்டில் ஐபிஎல் தொடர் போன்ற காரணங்களால் பல்வேறு விளம்பரதாரர்கள் விலகிக் கொண்டுள்ளனர். அதனால், ஐபிஎல் அணிகள் வேறு விளம்பரதாரர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றன.

ஐபிஎல் அணிகள் தவிப்பு

ஐபிஎல் அணிகள் தவிப்பு

அனைத்து ஐபிஎல் அணிகளுமே இந்த விஷயத்தில் மோசமான நிலையில் தான் உள்ளன. இன்னும் 2020 ஐபிஎல் தொடருக்கு இரண்டு மாதமே உள்ள நிலையில் விளம்பரம் பெற முடியாமல் தத்தளித்து வருகின்றன ஐபிஎல் அணிகள்.

டிக்கெட் வருவாய்

டிக்கெட் வருவாய்

மைதானத்தில் ரசிகர்கள் நேரில் பார்க்க டிக்கெட் வாங்கும் தொகையில் ஒரு பகுதி ஐபிஎல் அணிகளுக்கு கிடைக்கும். இந்த முறை கொரோனா வைரஸ் காரணமாக அந்த வருவாயும் கிடைக்காது. அதனால், ஐபிஎல் அணிகள் பெரிய சிக்கலில் உள்ளன.

அதிகாரி தகவல்

அதிகாரி தகவல்

இது குறித்து ஒரு ஐபிஎல் அணியின் அதிகாரி கூறுகையில் வழக்கமாக தங்கள் அணிக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் தற்போது விலகிக் கொண்டு இருப்பதாகவும், மற்ற அணிகளிடம் பேசினேன். அவர்களும் அதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்றார்.

சீசன் மாற்றம்

சீசன் மாற்றம்

கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை போன்ற காரணங்கள் மட்டுமின்றி, வெயில் காலத்தில் ஐபிஎல் நடக்காமல், குளிர் காலத்தில் நடக்க இருப்பதாலும் வியாபார சீசன் மாற்றம் காரணமாகவும் பல விளம்பரதாரர்கள் பின் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏர் கண்டிஷனர் விளம்பரம்

ஏர் கண்டிஷனர் விளம்பரம்

இது குறித்து அந்த ஐபிஎல் அணியின் அதிகாரி கூறுகையில், வெயில் காலத்தில் தான் ஏர் கண்டிஷனர் விளம்பரம் அளிக்க முன்வருவார்கள். தற்போது இந்தியாவில் அக்டோபர், நவம்பர் காலத்தில் எப்படி ஏர் கண்டிஷனர் விளம்பரம் பெற முடியும். இப்படித் தான் ஸ்பான்சர்களை இழந்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி நடக்குமா?

திட்டமிட்டபடி நடக்குமா?

எனினும், குறைந்தபட்ச அளவில் நஷ்டத் திட்டமிட்டபடி நடக்குமா? தை ஈடுகட்ட முடியும் என ஐபிஎல் அணிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றன. பிசிசிஐ-யும் கூட இதே நிலையில் இருக்கக் கூடும். 2020 ஐபிஎல் திட்டமிட்டபடி நடக்குமா? என்பதிலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

Story first published: Saturday, July 25, 2020, 19:13 [IST]
Other articles published on Jul 25, 2020
English summary
IPL 2020 : IPL teams are struggling with finding sponsors ahead of September IPL start
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X