For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சீக்கிரம் ஒரு முடிவை சொல்லுங்க.. வாட்ஸ்ஆப் குரூப்பையே வெறித்து பார்த்துக் கொண்டு இருக்கும் வீரர்கள்!

மும்பை : 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா? நடக்காதா? இந்த கேள்வி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்களுக்கும் உள்ளது.

Recommended Video

நடக்குமா நடக்காதா ? வாட்ஸ்அப் குரூப்பையே பார்த்துட்டு இருக்கும் வீரர்கள்

இந்த கேள்விக்கு பதில் கேட்டு தங்கள் ஐபிஎல் அணிகளை அவர்கள் குடைந்து வருகிறார்கள்.

2020 ஐபிஎல் தொடர்பாக அவர்களுக்கு அவ்வப்போது நடக்கும் விஷயங்களை தெரிவிக்க வாட்ஸ்ஆப் குரூப் ஆரம்பித்து சமாளித்து வருகின்றனவாம் ஐபிஎல் அணிகள்.

விம்பிள்டன் தொடர் ரத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதுதான் முதல்முறை!விம்பிள்டன் தொடர் ரத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இதுதான் முதல்முறை!

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர்

2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்கி இருக்க வேண்டும். ஆனால், அதற்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவத் துவங்கியது. இந்தியாவிலும் அந்த பாதிப்பு வரத் துவங்கியது. மார்ச் 13 அன்று ஐபிஎல் குறித்து அதிரடி முடிவு எடுத்தது பிசிசிஐ.

விசா கிடைக்கவில்லை

விசா கிடைக்கவில்லை

ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15 வரை தள்ளி வைத்தது. வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கிடைக்காத காரணத்தால் இப்படி தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதே சமயம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

சிக்கல்

சிக்கல்

இனி வெளிநாட்டு வீரர்களுக்கு விசா கொடுத்தாலும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பலரும் வர அஞ்சுவார்கள். அப்படியே வந்தாலும், ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டியை நடத்தினாலும், யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இந்த தொடரை நடத்த வேண்டிய நிலையில் உள்ளது பிசிசிஐ.

இளம் வீரர்கள் நிலை

இளம் வீரர்கள் நிலை

அதனால், 2020 ஐபிஎல் தொடரை அடுத்த சில மாதங்களுக்கு நடத்த வாய்ப்பே இல்லை. அதே சமயம், ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து பல வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் வாழ்க்கையை ஐபிஎல் மாற்றும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

வாட்ஸ்ஆப் குரூப் துவக்கம்

வாட்ஸ்ஆப் குரூப் துவக்கம்

அவர்கள் தொடர்ந்து ஐபிஎல் குறித்து கேள்வி கேட்டு வருவதாலும், பிற வீரர்கள் குழப்பத்தில் இருப்பதாலும் ஐபிஎல் அணிகள் வாட்ஸ்ஆப் குரூப் துவங்கி உள்ளன. அதன் மூலம், ஐபிஎல் அணிகள் - பிசிசிஐ முடிவுகள் என்ன, அடுத்த கட்டம் என்ன என்பது பற்றி வீரர்களுக்கு தகவல் கூறி வருகின்றனவாம் அந்த அணிகள்.

நல்ல செய்தி வருமா?

நல்ல செய்தி வருமா?

அதனால், தான் இளம் வீரர்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில் ஐபிஎல் நடக்கும் என்ற நல்ல செய்தி வராதா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர். இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த நல்ல செய்தி வர வாய்ப்பில்லை.

Story first published: Wednesday, April 1, 2020, 22:36 [IST]
Other articles published on Apr 1, 2020
English summary
IPL 2020 : IPL teams running Whatsapp group to communicate with players
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X