For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கற்றுத் தந்த டெக்னிக்தான் காரணமா?.. சேசிங் மன்னனாக திகழ்ந்த கேதார் ஜாதவ்.. சறுக்கியது எப்படி!?

துபாய்: இந்திய அணியில் ஒரு காலத்தில் சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்து, சேசிங் செய்யும் போது பல முறை தனது திறமையை நிரூபித்த கேதார் ஜாதவ் தற்போது மிக மோசமான பார்ம் அவுட்டில் இருக்கிறார். இவரின் சரிவிற்கு தோனிதான் காரணம் என்று கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

கேதார் ஜாதவ்-ன் சரிவிற்கு தோனி தான் காரணமா?

சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் சொதப்பி வரும் கேதார் ஜாதவ் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த 30 போட்டிகளில் இவர் ஒரே ஒரு போட்டியில்தான் 30+ ரன்கள் அடித்தார் என்பது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கடந்த 6 போட்டிகளாக இவரின் பேட்டிங்தான் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

டி 20 போட்டிகளில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடும் இவரை சிஎஸ்கே ரசிகர்கள் நேற்று இரவில் இருந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவிற்கு ஜாதவ் அவ்வளவு மோசமான பேட்ஸ்மேன் கிடையாது.

2014

2014

2014ல் இருந்து இந்திய அணிக்காக கேதார் ஜாதவ் விளையாடி வருகிறார். யுவராஜ் சிங்கிற்கு பின் இந்திய மிடில் ஆர்டரில் அதிக நம்பிக்கை அளித்த வீரராகவே கேதார் ஜாதவ் இருந்தார். 2014-2017 வரை இவரின் கிரிக்கெட் கிராப் மிகவும் சிறப்பாக இருந்தது. ஒருநாள் போட்டிகளில் 50+ ரன்களை தனது சராசரியாக கேதார் ஜாதவ் வைத்து இருந்தார். அதேபோல் பல போட்டிகளில் இந்திய அணியின் சேஸிங்கில் உதவி உள்ளார்.

சேசிங்

சேசிங்

சரியாக சொல்ல வேண்டும் இந்திய அணிக்கு சேஸிங் மன்னனாக இவர் தொடக்க காலத்தில் பார்க்கப்பட்டார். சேஸிங்கில் தோனி சொதப்பிய சமயங்களில் கூட இவர் சிறப்பாக ஆடி இருக்கிறார். இவரின் தொடக்க காலத்தில் இங்கிலாந்திற்கு எதிராக வெறும் 76 பந்தில் சேஸிங்கின் போது 120 ரன் எடுத்து இருக்கிறார். அதே தொடரில் இன்னொரு போட்டியில் 75 பந்தில் 90 ரன் எடுத்து இருக்கிறார்.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா ஆடிய தொடரில் சேசிங்கில் 60, 50 என்று கடைசி கட்டத்தில் இறங்கி இவர் அதிரடி காட்டிய காலமெல்லாம் இருக்கிறது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் இவரின் ஸ்டிரைக் ரேட் 110 ஆக இருக்கும் அதே சேசிங் என்று வந்துவிட்டால் இவரின் ஸ்டிரைக் ரேட் 130-140 என்றுதான் இந்திய அணியில் இருந்துள்ளது. சேசிங்கில் தொடக்க கால தோனிக்கு இணையாக இவரின் ஸ்டிரைக் ரேட் இருந்தது.

கஷ்டப்பட்டார்

கஷ்டப்பட்டார்

2017வரை நல்ல பார்மில் இருந்தவர் அதன்பின் கடுமையான காயங்கள், ஆபரேஷன்கள் காரணமாக அவதிப்பட்டார். 2018 பார்ம் அவுட்டில் ஆனவர் அதன்பின் கடுமையாக கஷ்டப்பட்டார். அப்போதுதான் இவரின் வாழ்க்கையும் மாறியது. 2018 வரை இவரின் பேட்டிங் ஸ்டைல் நன்றாகவே இருந்தது. சேஸிங்கில் இவர் சிறப்பாகவே பேட்டிங் செய்து வந்தார். ஆனால் 2018 ஐபிஎல் தொடரில் இவரின் சேசிங் மிக கடுமையாக சொதப்ப தொடங்கியது.

மோசம்

மோசம்

எப்போதும் சேஸிங்கில் அதிரடியாக ஆடும் இவர் கொஞ்சம் கொஞ்சமாக டொக் வைத்து ஆடினார். 2018 ஐபிஎல் சீசனில் சில முறை சிஎஸ்கே அணியின் வெற்றிக்கும் கூட இவர் காரணமாக இருந்தார். ஜாதவ் கடந்த சீசன்களில் சிஎஸ்கேவிற்கு முக்கியமான கட்டங்களில் ரன் எடுத்துள்ளார். காலில் அடிப்பட்டு பெவிலியன் சென்றவர் மீண்டும் திரும்பி வந்து ஆடி சிஎஸ்கேவை வெற்றிபெற வைத்துள்ளார். பல முறை 9வதாக இறங்கும் வீரருடன் இணைந்து சிஎஸ்கேவை வெற்றிபெற வைத்துள்ளார்.

ஆனால் எங்கே

ஆனால் எங்கே

2019க்கு பின் இவரின் சரிவு வேகமாக அதிகரித்தது. 2019ல் இவர் மிக மோசமாக பார்ம் அவுட் ஆனார். இவரின் பேட்டிங் ஸ்டைல் டி 20 வீரர் போல இல்லாமல் டெஸ்ட் வீரர் போல மாறியது. ஒரு காலத்தில் விராட் கோலியுடன் சேர்ந்து பல போட்டிகளில் சேசிங் செய்தவர், போக போக ஸ்டிரைக் கூட ரொட்டேட் செய்ய முடியாமல் கஷ்டப்பட தொடங்கினார். இவர் தோனியின் ஸ்டைலை பின்பற்றி கெட்டுப்போய்விட்டார் என்றும் புகார் உள்ளது.

எப்படி ஆடுவார்

எப்படி ஆடுவார்

பொதுவாக சேசிங் செய்யும் போது ஜாதவ் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டுவார். ஆனால் தோனி பொறுமையாக ஆடிவிட்டு கடைசியில் அதிரடி காட்டுவார். தோனியின் ஸ்டைலை கற்றுக்கொண்ட பின்தான் ஜாதவ் இப்படி சொதப்புகிறார் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடாமல் கடைசி இரண்டு ஓவரில் அடிக்கலாம் என்று நினைத்துதான் ஜாதவ் இப்படி மோசமாகிவிட்டார் என்று புகார்கள் வைக்கப்படுகிறது.

சரிவு

சரிவு

இன்னொரு பக்கம் ஜாதவின் சரிவிற்கு தோனி காரணம் இல்லை. 2018ல் இவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது பார்ம் அவுட் ஆனார் அதன்பின் மீண்டும் பார்மிற்கு திரும்பவே இல்லை. இதில் தோனியை குற்றஞ்சாட்ட முடியாது என்றும் கூறுகிறார்கள். ஜாதவ் தனது பேட்டிங் ஸ்டைலை இழந்துவிட்டார். சிஎஸ்கே வந்தபின் அவர் மொத்தமாக மாறிவிட்டார். ஆனால் இதற்காக தோனியை குற்றஞ்சாட்ட முடியாது என்று கூறுகிறார்கள்.

கடைசி காலம்

கடைசி காலம்

கேதார் ஜாதவ் இப்போது கிண்டல் செய்யும் அளவிற்கு மோசமாக பேட்ஸ்மேன் கிடையாது. டி 20 போட்டிகளில் இப்போதும் அவரின் ஸ்டிரைக் ரேட் 130தான். ஆனால் ஏனோ இந்த வருடம் மிக மோசமான பார்மில் இருக்கிறார். இந்த குறுகிய சரிவிற்காக அவரை இவ்வளவு கேவலமாக அவமானப்படுத்த கூடாது என்றும் கூறுகிறார்கள். ஒரு கிரிக்கெட் வீரர் பார்ம் திரும்ப ஒரு போட்டி போதும்..அந்த போட்டி ஒன்று கிடைத்தால் போது ஜாதவும் வாட்சன் போல பார்மிற்கு வந்துவிடுவார் என்கிறார்கள்.

Story first published: Thursday, October 8, 2020, 16:57 [IST]
Other articles published on Oct 8, 2020
English summary
IPL 2020: Is Dhoni a reason behind the batting form-out of Kedar Jadhav?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X