அவசரப்பட வேண்டாம்.. தோனி பல நாளாக கிரிக்கெட் ஆடவில்லை.. என்ன சிஎஸ்கே கோச்சே இப்படி சொல்லிட்டாரே?

சார்ஜா: சென்னை அணியின் கேப்டன் தோனி பல மாதங்கள் கழித்து களத்திற்கு வந்துள்ளார் என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தோனிக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

சென்னை அணி நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் தோல்வி காரணமாக, அணியில் இருக்கும் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.

முக்கியமாக கேப்டன் தோனி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை. அவர் மிகவும் தாமதமாக பேட்டிங் இறங்கினார் , ஆனாலும் சரியாக ஆடவில்லை என்று பலரும் தோனிக்கு எதிராக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

ஆதரவு

ஆதரவு

இந்த நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தற்போது தோனிக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார். தோனியின் பேட்டிங் குறித்து எல்லோரும் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், தற்போது அணியின் தலைமை பயிற்சியாளர் தோனிக்கு ஆதரவாக் குரல் கொடுத்துள்ளார். அதில், எல்லா வருடமும் தோனி குறித்து இப்படி தவறாக விமர்சனங்கள் வைக்கிறார்கள்.

நேரம்

நேரம்

எல்லா வருடமும் இதே கேள்வியை வைக்கிறார்கள். தோனி களமிறங்கிய போது 14 ஓவர்கள் வீசப்பட்டு இருந்தது. அதுவரை சென்னை அணி திட்டமிட்டபடி பேட்டிங் செய்தது. அதன்பின்தான் தோனி பேட்டிங் செய்ய வந்தார். தோனி பேட்டிங் செய்து பல நாட்கள் ஆகிறது.

பல நாட்கள் ஆகிறது

பல நாட்கள் ஆகிறது

பல நாட்களாக அவர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தோனியின் பெஸ்டை பார்க்க இன்னும் சில நாட்கள் ஆகலாம். அவரின் சிறப்பான ஆட்டத்தை பார்க்க பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் தோனி விரைவில் மீண்டு வருவார். சில நாட்கள் அவருக்காக காத்திருக்க வேண்டும்.

காத்திருப்பு

காத்திருப்பு

நேற்றே கடைசியில் தோனி நன்றாக ஆடினார். அணியில் டு பிளசிஸ் நல்ல பார்மில் உள்ளார். நாங்கள் நேற்று ஸ்கோரை நெருங்கிவிட்டோம். பேட்டிங் அணியில் நன்றாக இருக்கிறது. பவுலிங்தான் தற்போது மோசமாக உள்ளது.

கடைசி நேரம்

கடைசி நேரம்

தோனி செல்ல செல்ல மீண்டும் வருவார். கடைசியில் ஆடுவதுதான் அவரின் திறமை. கரன் அதிரடியாக ஆடுகிறார். ரன் ரேட்டை நேற்று உயர்த்த அவரே காரணமாக இருந்தார். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. நல்ல ஹிட்டராக அவர் இருக்கிறார், என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Its been so long since Dhoni played says CSK chief coach Felming.
Story first published: Wednesday, September 23, 2020, 16:44 [IST]
Other articles published on Sep 23, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X