நியாபகம் இருக்கா? இனி சீண்ட வேண்டாம்.. களத்திலேயே ஜடேஜா அனுப்பிய வலுவான மெசேஜ்.. யாருக்கு?

துபாய்: மும்பையை சேராத கிரிக்கெட் வீரர்களை இழிவாக பேசி வரும் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கருக்கு சிஎஸ்கே வீரர் ஜடேஜா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

ஐபிஎல் 2020 தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்னும் 1 வார போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. இந்த நிலையில் தொடக்கத்தில் மோசமாக சொதப்பி வந்த சிஎஸ்கே மீண்டும் தற்போது வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது.

பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டாலும் சிஎஸ்கே தொடர் வெற்றிகள் மூலம் கொஞ்சம் நிம்மதி அளிக்க தொடங்கி உள்ளது.இதுவரை 13 போட்டிகளில் ஆடி உள்ள சிஎஸ்கே 5 போட்டிகளில் வென்று உள்ளது.

நேற்று எப்படி

நேற்று எப்படி

நேற்று சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு ரூத்துராஜ், ராயுடு மற்றும் ஜடேஜா மூவரும் முக்கியமான காரணமாக இருந்தனர். அதிலும் ஜடேஜா கடைசி நேரத்தில் வந்து அதிரடி காட்டினார். ஃபிரி ஹிட் சிக்ஸர், கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் என்று ஜடேஜா 11 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

சிஎஸ்கே வெற்றி

சிஎஸ்கே வெற்றி

மிகவும் டென்ஷனான நேரத்தில் முகத்தில் கொஞ்சமும் உணர்ச்சியை காட்டாமல் அதிரடியாக சிக்ஸ் அடித்துவிட்டு, ஆட்டத்தை முடித்து கொடுத்தார். இந்த சீசன் முழுக்க சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். பல போட்டிகளில் சென்னை அணியை மோசமான தோல்வியில் இருந்தும், அவமானங்களில் இருந்தும் ஜடேஜாதான் காப்பாற்றினார்.

என்ன செய்தார்

என்ன செய்தார்

நேற்று சிஎஸ்கே அணியை வெற்றிபெற செய்த பின் ஜடேஜா கேமராவை நோக்கி திரும்பி.. தன்னுடைய ஜெர்சியில் இருக்கும் தன் பெயரை காட்டினார். இவர் இப்படி தனது வெற்றியை கொண்டாட ஒரே ஒருவர்தான் காரணம்.. அது கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர். ஜடேஜாவை நினைத்த போதெல்லாம் சஞ்சய் மஞ்சிரேக்கர் கிண்டல் செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல உள்ள இந்திய டி 20 அணி அறிவிப்பு வெளியானது. இதில் ஜடேஜா இடம் பெற்று இருந்தார். ஜடேஜாவை டி 20 அணியில் சேர்த்ததை ஏற்க முடியாது என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் கிண்டல் செய்து இருந்தார். அவர் டி20 வீரர் கிடையாது என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் கூறி இருந்தார். இதற்குத்தான் தற்போது ஜடேஜா பதிலடி கொடுத்து.. தனது பெயரை கேமரா முன்பு காட்டி இருக்கிறார்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பே ஜடேஜா சஞ்சய் மஞ்சிரேக்கருக்கு பதிலடி கொடுத்தார்.ஜடேஜாவை குறைகளை உடைய வீரர் என்று சஞ்சய் மஞ்சிரேக்கர் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு உலகக் கோப்பை செமி பைனலில் ஜடேஜா அதிரடியாக பதிலடி கொடுத்தார்.

பதிலடி

பதிலடி

மும்பை வீரர்களை தவிர வேறு யாரை பற்றியும் சஞ்சய் மஞ்சிரேக்கர் சரியாக பேசியது கிடையாது.சஞ்சய் மஞ்சிரேக்கரின் மோசமான தொடர் விமர்சனங்களால் இந்த முறை அவரை கமென்டரி பேனலில் எடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Jadeja Sends a strong message to Sanjay Manjrekar after the winning knock
Story first published: Friday, October 30, 2020, 8:29 [IST]
Other articles published on Oct 30, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X