For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு.. 100 விக்கெட் சாதனைக்கு காத்திருக்கும் ஜஸ்பிரீத் பும்ரா

அபுதாபி : ஐபிஎல்லின் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்க மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரீத் பும்ராவிற்கு இன்னும் ஒரு விக்கெட்டே பாக்கியுள்ளது.

இன்றைய ஐபிஎல்லின் 48வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது.

இதையடுத்து இன்றைய போட்டியில் பும்ரா தனது சாதனையை எட்டி 100 விக்கெட்டுகள் கிளப்பில் இணையும் 16வது வீரர் என்ற பெருமையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி -மும்பை இந்தியன்ஸ் மோதல்

ஆர்சிபி -மும்பை இந்தியன்ஸ் மோதல்

ஐபிஎல்லின் 48வது லீக் போட்டியில் இன்றைய தினம் ஆர்சிபியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரீத் பும்ரா புதிய சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். இதுவரை 88 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 100 விக்கெட்டுகள் சாதனையை எட்ட ஒரேயொரு விக்கெட்டே மீதமுள்ளது.

16வது வீரர் பும்ரா

16வது வீரர் பும்ரா

இந்நிலையில், இன்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த 100 விக்கெட் கிளப்பில் இணையும் 16வது வீரர் என்ற பெருமையை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கிளப்பில் 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார் லசித் மலிங்கா.

17 விக்கெட்டுகள்

17 விக்கெட்டுகள்

இந்த சீசனில் லசிங்கா விளையாடாத நிலையில், பும்ரா சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையை இந்த சீசனில் பெற்றுள்ளார். முதலிடத்தில் டெல்லி வீரர் காகிசோ ரபாடா உள்ளது குறிப்பிடத்தக்கது.

கீரன் பொல்லார்ட் பாராட்டு

கீரன் பொல்லார்ட் பாராட்டு

இந்நிலையில் பும்ரா உலக தரத்திலான பௌலர் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் கீரன் பொல்லார்ட் பாராட்டு தெரிவித்துள்ளார். சில வடிவங்களில் நம்பர் ஒன் வீரராக பும்ரா உள்ளார் என்றும் பொல்லார்ட் கூறியுள்ளார். பிளே -ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு இன்றைய ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Story first published: Wednesday, October 28, 2020, 18:24 [IST]
Other articles published on Oct 28, 2020
English summary
Both MI and RCB have 14 points each and whoever wins is more or less assured of a play-off berth
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X