இதுதான் கேப்டன்சி.. இப்படித்தான் இறங்கி அடிக்கணும்.. மைதானத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கே.எல் ராகுல்!

துபாய்: பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் கே. எல் ராகுல் 69 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப்பிற்கும் பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெங்களூர் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து நிதானமாக ஆடியது. வரிசையாக பஞ்சாப் வீரர்கள் விக்கெட்டுகளை ஒரு பக்கம் இழந்து வந்தனர்.

என்னங்க இதெல்லாம்.. நம்பவே முடியலை.. தப்பு மேல் தப்பு செய்யும் தோனி.. துல்லியமாக கண்டுபிடித்த கோலி!

ஆனால் என்ன?

ஆனால் என்ன?

ஆனால் இன்னொரு பக்கம் பஞ்சாப் கேப்டன் கே எல் ராகுல் மட்டும் அதிரடியாக ஆடி வந்தார். கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து தொடக்கத்தில் இருந்து கேஎல் ராகுல் அதிரடியாக ஆடினார். ஒரு பக்கம் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் இன்னொரு பக்கம் கே.எல் ராகுல் அதிரடி காட்டினார்.

எல்லோரின் பவுலிங்

எல்லோரின் பவுலிங்

சென்ற போட்டி போல அவசரப்பட்டு விளையாடி அவுட்டாகாமல் இந்த போட்டியில் தொடக்கத்தில் நிதானமாக ஆடி போக போக அதிரடி காட்டினார். முதல் 70 ரன்கள் கொஞ்சம் நிதானமாக ஆடி, அதன்பின் வேகம் எடுத்தார் . அதிலும் களத்தில் அதிகம் ஆதிக்கம் செலுத்திய சாஹல், சிவம் துபே ஆகியோர் ஓவரில் கூட கே. எல் ராகுல் அதிரடி காட்டினார்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

முதலில் பவுண்டரி அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். 50 ரன்கள் அடிப்பதற்கு முன்பே 6 பவுண்டரிகளை விளாசினார். மொத்தம் இவர் 69 பந்துகள் பிடித்து 14 பவுண்டரிகள் அடித்தார். இன்னொரு பக்கம் அதிரடியாக 7 சிக்ஸர்களும் பறக்க விட்டார். மொத்தம் 132 ரன்கள் அடித்த கேஎல் ராகுலின் ஸ்டிரைக் ரேட் இந்த போட்டியில் 191.30 ஆகும்.

இதுதான் அதிகம்

இதுதான் அதிகம்

இன்று கே. எல் ராகுல் அடித்த ஸ்கோர்தான் ஐபிஎல் போட்டியில் கேப்டன் ஒருவர் அடித்த அதிக ஸ்கோர் ஆகும். அதேபோல் இன்று அவர் அடித்த ஸ்கோர்தான் ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிக ஸ்கோர் ஆகும். ஒரு கேப்டன் இப்படிதான் ஆட வேண்டும். அணியை முன்னின்றி வழி நடத்த வேண்டும் என்று பலரும் கே. எல் ராகுலை புகழ்ந்து வருகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: K L Rahul creates new record by hitting 132 runs in 69 balls against Bangalore.
Story first published: Thursday, September 24, 2020, 21:53 [IST]
Other articles published on Sep 24, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X