For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுயநலம்.. வேண்டுமென்றே இப்படி செயல்படுகிறார்.. கேப்டன் ராகுல் மீது புகார்.. எதிர்பார்க்காத சர்ச்சை!

துபாய்: பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல் சுயநலமாக களத்தில் செயல்படுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து தோல்வி அடைந்த பஞ்சாப் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது . நேற்று போட்டியில் தோல்வி அடைந்த பின்பும் கூட பஞ்சாப் அணியின் பிளே ஆப் கனவு இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.

இந்த சீசனில் தொடக்கத்தில் 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வென்ற பஞ்சாப் அதன்பின் வரிசையாக வெற்றி அடைந்தது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்று தற்போது 13 போட்டிகளில் பஞ்சாப் 6ல் வென்றுள்ளது.

எப்படி

எப்படி

பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தொடக்கத்தில் சொதப்பினாலும் தற்போது கே. எல் ராகுல் பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளார் . இவரின் கேப்டன்சி பார்த்து இந்திய அணியிலும் தற்போது இவருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிலைமை என்ன

நிலைமை என்ன

ஆனால் ஒரு கேப்டனாக ராகுல் நன்றாக செயல்பட்டாலும் கூட ஒரு பேட்ஸ்மேனாக அவர் சரியாக செயல்படவில்லையென்று புகார் வைக்கப்பட்டுள்ளது. களத்தில் மிகவும் சுய நலத்துடன் செயல்படுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. அதாவது தான் மட்டுமே ரன் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்கிறார்கள்.

ஏன்

ஏன்

எதிரில் மயங்க் அகர்வால் ஆடினாலும் சரி, மன்தீப் சிங் ஆடினாலும் சரி.. ஏன் கெயில் ஆடினாலும் கூட அவர்களைதான் ஷாட் அடிக்க சொல்கிறார். ராகுல் பொறுமையாக ஆடுகிறார். தேவையான நேரத்தில் மட்டும் சிக்ஸ் அடிக்கிறார்.தனது தனிப்பட்ட இலக்கை உயர்த்தவே ராகுல் முயல்கிறார் என்கிறார்கள். மிகவும் கவனமாக ஆடி தனிப்பட்ட ரன்னை உயர்த்திக் கொள்கிறார் என்கிறார்கள்.

எப்படி

எப்படி

அதாவது தனிப்பட்ட வகையில் 70 பந்தில் 80 ரன்கள் எடுக்கிறார். இதனால் அவரின் ஸ்கோர் அதிகமாகிறது. ஆனால் அணியின் ரன் ரேட் குறைந்து விடுகிறது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. நேற்று போட்டியிலும் கெயிலை அதிரடியாக ஆட சொல்லிவிட்டு ராகுல் 41 பந்தில் 46 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவர் அதிரடியாக ஆடி இருந்தால் பஞ்சாப் அணி இன்னும் 20-30 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் அதிரடியாக ஆடினால் இவர் அவுட்டாகி விடுவார் என்ற பயத்தில் பொறுமையாக ஆடி தனது தனிப்பட்ட ஸ்கோரை அதிகரித்துக் கொள்கிறார். ஆரஞ்ச் கேப்பை தக்க வைப்பதிலேயே இவர் குறியாக இருக்கிறார் என்று கூறபடுகிறது. இவரின் ஸ்டிரைக் ரேட் இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் 110-125 வரை மட்டுமே இருக்கிறது இவரின் பொறுமையான ஆட்டத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.. தன்னுடைய தனிப்பட்ட ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று மட்டும் ஆடாமல்.. அணிக்காகவும் இவர் ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

ஸ்டிரைக் ரேட்

ஸ்டிரைக் ரேட்

இவரின் ஸ்டிரைக் ரேட் இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் 110-125 வரை மட்டுமே இருக்கிறது இவரின் பொறுமையான ஆட்டத்திற்க இதுவே சிறந்த உதாரணம்.. தன்னுடைய தனிப்பட்ட ஸ்கோரை உயர்த்த வேண்டும் என்று மட்டும் ஆடாமல்.. அணிக்காகவும் இவர் ஆட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

Story first published: Saturday, October 31, 2020, 16:36 [IST]
Other articles published on Oct 31, 2020
English summary
IPL 2020: K L Rahul should focus on his SR than looking for Orange cap
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X