For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவமானம், புறக்கணிப்பு.. அவமதிப்புகளுக்கு அதிரடி பதிலடி கொடுத்த கேன்.. இவருக்கு போய் இந்த நிலையா?

துபாய்: ஐபிஎல் தொடரில் பல புறக்கணிப்புகளுக்கு பின்பும் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி வருவது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சொந்த அணியே தன்னை புறக்கணித்த பின்பும் அவர் தனது அணிக்காக நேற்று உயிரை கொடுத்து விளையாடியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்று டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவருக்கு 4 விக்கெட் இழந்து 162 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் வார்னர் 45, பிரைஸ்டோ 53, கேன் வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்தனர்.

டெல்லி தோல்வி

டெல்லி தோல்வி

அதன்பின் இறங்கிய டெல்லி அணியில் ஷிகர் தவான் மட்டும் 34 ரன்கள் அடிக்க மற்ற எல்லோரும் வரிசையாக விக்கெட்டானார்கள். ரஷித் கான் மட்டும் ஹைதராபாத் அணிக்காக 4 ஓவர் போட்டு வெறும் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். இதனால் டெல்லி 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கேன் வில்லியம்சனின் வருகையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கேன் வில்லியம்சன்

கேன் வில்லியம்சன்

நேற்று கேன் வில்லியம்சன் அணிக்கு வந்த காரணத்தால்தான் ஹைதராபாத் அணி வென்றது என்று அணியின் ரசிகர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் தெரிவித்து வருகிறார்கள். கேன் வில்லியம்சன் நேற்று அடித்த 41 ரன்கள்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. கடைசி ஓவர் வரை கேன் வில்லியம்சன் களத்தில் விக்கெட் விழுவதை கட்டுப்படுத்தினார்.

பாராட்டு

பாராட்டு

முக்கியமாக நேற்று வார்னர் விக்கெட் விழுந்த பின் வேகமாக ஹைதராபாத் வேகமாக சரிவை நோக்கி சென்றது. அந்த சரிவை கேன் வில்லியம்சன்தான் காப்பாற்றினார். டெஸ்ட் போட்டிகளில் ஆடும் ஸ்டைலைதான் முன்பு கேன் வில்லியம்சன் கொண்டு இருந்தார். ஆனால் ஐபிஎல் போட்டிக்காக மொத்தமாக கேன் தனது ஸ்டைலை மாற்றினார். தன்னை சிறப்பாக டி20 வீரராக கேன் வில்லியம்சன் மாற்றி உள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள்.

இரண்டு வருடம்

இரண்டு வருடம்

இரண்டு வருடம் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடியும் கூட இந்த வருடம் இவரின் கேப்டன்சி பதவி பறிக்கப்பட்டது. கேப்டன்சி பதவி நீக்கப்பட்டதோடு விளையாடும் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். முதல் இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தும் கூட கேன் வில்லியம்சன் அணியில் சேர்க்கப்படவில்லை. அதோடு புதிய கேப்டன் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சனை மோசமாக புறக்கணித்தார்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

இந்த நிலையில் அணிக்குள் இவர் தொடர்ந்து கடுமையாக அவமதிக்கப்பட்டார். இவரை அணியை விட்டு நீக்க போகிறார்களா என்று கூட கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில்தான் நேற்று கடும் அழுத்தம் காரணமாக கேன் வில்லியம்சன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ரசிகர்கள் வைத்த கோரிக்கை காரணமாகவும், தொடர் தோல்வி காரணமாகவும் மீண்டும் கேன் வில்லியம்சன் வேறு வழியின்றி அணியில் எடுக்கப்பட்டார்.

மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

நேற்று அணிக்கு மீண்டும் வந்த கேன் வில்லியம்சன் மிகவும் அதிரடியாக ஆடினார். தன்னை பலர் புறக்கணித்த பின்பும், அணி நிர்வாகம் மோசமாக நடத்திய பின்பும் கூட அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் களத்தில் ஆடினார். டேவிட் வார்னரிடம் எந்த விதமான ஈகோவும் காட்டாமல் நேற்று பீல்டிங் நின்றார். இவரின் செயல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிராக உலகக் கோப்பை இறுதி போட்டியில் பவுண்டரி வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக்கொண்டார் கேன் வில்லியம்சன். அதேபோல் 2018 ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் தோல்வி அடைந்து அதை சிரித்துக் கொண்டே எதிர்கொண்டார். நேற்று அணிக்குள் வந்த போதும்.. சிரித்துக் கொண்டே இயல்பாக ஆடினார்.. உண்மையில் இவர் தோனியை விட கூலான ஆள்.. ஆனால் இவரை போய் ஹைதராபாத் அணி புறக்கணிப்பது தவறு என்று பலரும் இவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

Story first published: Wednesday, September 30, 2020, 22:18 [IST]
Other articles published on Sep 30, 2020
English summary
IPL 2020: Kane Williamson's good heart and batting skill deserve more from the Hyderabad team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X