போட்டிக்கு நடுவே.. மைதானத்தில் யார் இந்த பெண்?.. அதுவும் கையில் பையோடு.. வைரலாகும் போட்டோ!

மும்பை: நேற்று மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில் இந்த போட்டி தொடர்பான போட்டோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

மும்பை மற்றும் பெங்களூருக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டி, ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. திருப்பங்களுக்கு பஞ்சம் இல்லாமல் சென்ற போட்டியில்.. கடைசி நொடியில் சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் பெங்களூர் வெற்றிபெற்றது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 201 ரன்கள் எடுத்தது. அதன்பின் பேட் செய்த மும்பை 201 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. இதன் பின் சூப்பர் ஓவரில் மும்பை வெறும் 7 ரன்கள் எடுக்க.. பெங்களூர் எளிதாக அந்த ஸ்கோரை எடுத்து வெற்றிபெற்றது.

வெற்றி

வெற்றி

மும்பைக்காக சூப்பர் ஓவரில் பும்ரா பவுலிங் செய்தும், மும்பை தோல்வி அடைந்து உள்ளது. பெங்களூர் பவுலர் சைனி வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து சூப்பர் ஓவரை கட்டுப்படுத்திய காரணத்தால் மும்பை தோல்வி அடைந்தது. ஆனால் மும்பை , பெங்களூர் இரண்டு அணிகளிலும் குறை சொல்லும் அளவிற்கு நேற்று வீரர்கள் யாரும் பெரிய தவறுகளை செய்யவில்லை. இரண்டு அணிகளும் கடைசி வரை வெற்றிக்காக போராடியது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில்தான் இந்த போட்டி நடந்த மைதானத்தில் புடவை கட்டிய பெண் ஒருவர்.. கையில் பெரிய பையுடன் இருப்பது போன்ற ''போட்டோஷாப்'' செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இணையம் முழுக்க தற்போது இந்த புகைப்படம்தான் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் காட்சியாகும் இது.

கண்ணம்மா

கண்ணம்மா

கண்ணம்மா கையில் பெட்டி படுக்கையோடு கோபமாக கிளம்பி செல்லும் புகைப்படமாகும். இந்த புகைப்படம்தான் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. கண்ணம்மாவை அப்படியே போட்டோ ஷாப் செய்து அவர் பல இடங்களில் இருப்பது போல டிவிட் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

சீனா

சீனா

வெளிநாடுகளில் இருப்பது போலவும், சீனாவில் நடந்து செல்வது போலவும், நிலாவில் அவர் மூட்டையோடு நடந்து செல்வது போலவும் டிரெண்டு செய்து வருகிறார்கள். இதெல்லாம் போக நேற்று நடந்த போட்டியில் மைதானத்தில் இவர் இருப்பது போலவும் போட்டோஷாப் செய்து காமெடி செய்துள்ளனர்.

வேறு என்ன

வேறு என்ன

அதோடு இந்தியாவில் இருக்கும் ரெய்னாவுடன் இவர் நிற்பது போலவும் கிண்டல் செய்துள்ளனர். இணையம் முழுக்க கண்ணம்மா மீம்ஸ்களால் நிரம்பி வழிகிறது. ஐபிஎல் போட்டிகளையும் தற்போது கண்ணம்மா மீம்ஸ் ஆக்கிரமித்துள்ளது.

யார் இவர்?

யார் இவர்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. இந்த குறிப்பிட்ட காட்சியை மட்டும் கட் செய்து நெட்டிசன்கள் டிரெண்டு செய்து வருகிறார்கள். இந்த கட்சியில் நடித்திருப்பவர் ரோஷினி ஹரிபியன் என்பவர் ஆவார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Kannamma memes made the internet a laugh marathon amid RCB vs MI match.
Story first published: Tuesday, September 29, 2020, 12:40 [IST]
Other articles published on Sep 29, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X