For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லா டீமையும் அடிச்சு தூக்குறோம்.. ஒலிம்பிக் வீரரை கூட்டி வந்த கொல்கத்தா.. மாஸ் திட்டம்!

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வெல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.

அதன் ஒரு அங்கம் தான் நியூசிலாந்தை சேர்ந்த ஒலிம்பிக் வீரர் கிறிஸ் டொனால்ட்சன்.

அவர் நியூசிலாந்து நாட்டின் சார்பாக இரண்டு ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் தொடர்களில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீரர். அவரை வைத்து தான் அசத்தல் திட்டம் ஒன்றை வகுத்துள்ளது கொல்கத்தா அணி.

 ஸ்பின்னர் ஆர் அஸ்வினின் 34வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவியும் வாழ்த்துக்கள் ஸ்பின்னர் ஆர் அஸ்வினின் 34வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. குவியும் வாழ்த்துக்கள்

பயிற்சியாளர் மாற்றம்

பயிற்சியாளர் மாற்றம்

2019 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இதை அடுத்து அந்த அணி பயிற்சியாளர் ஜேக்கஸ் காலிஸ்-ஐ நீக்கியது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் பிரென்டன் மெக்குல்லம் பயிற்சியாளர் பதவியை பெற்றார்.

மெக்குல்லம் விடுத்த அழைப்பு

மெக்குல்லம் விடுத்த அழைப்பு

பிரென்டன் மெக்குல்லம் பதவி ஏற்ற உடன் முதல் வேலையாக 2015 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போது அணியின் பயிற்சியாளர் உதவியாளர்களில் ஒருவராக இருந்த கிறிஸ் டொனால்ட்சனை தொலைபேசியில் அழைத்தார்.

பணியாற்ற விருப்பமா?

பணியாற்ற விருப்பமா?

நியூசிலாந்து அணியில் பணியாற்றியது போல, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பணியாற்ற விருப்பமா? என அவர் கேட்க, உடனே ஒப்புக் கொண்டார் டொனால்ட்சன். இப்படித் தான் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் வீரர் கொல்கத்தா அணிக்கு வந்து சேர்ந்தார்.

டொனால்ட்சன் திறமை

டொனால்ட்சன் திறமை

ஓட்டப் பந்தய வீரரான கிறிஸ் டொனால்ட்சன் விளையாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர் ஆவார். அந்த நுணுக்கங்களை தான் நியூசிலாந்து அணியில் அவர் கற்றுத் தந்தார். தற்போது கொல்கத்தா அணியிலும் கற்றுக் கொடுத்து, வீரர்களை வேகமாக தயார் செய்து வருகிறார்.

என்ன பணி?

என்ன பணி?

ஆம், வீரர்களை "வேகமாக" ஓட தயார் செய்வது தான் இவரின் முக்கிய பணி. முதல் இரண்டு மீட்டர்களை நீங்கள் எத்தனை வேகமாக ஓடுகிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை கொண்டு வர முடியும் என்கிறார் அவர்.

தனிப்பட்ட பயிற்சிகள்

தனிப்பட்ட பயிற்சிகள்

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கட்டுப்பாடுகள் இருப்பதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் தங்கள் அறைகளிலேயே எப்படி தங்கள் வேகத்தை அதிகரிக்கலாம், அதற்கு என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும் என ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட முறையில் கற்றுத் தருகிறார்.

வேகம்

வேகம்

அதிலும், பீல்டிங் செய்யும் வேகத்தை அதிகரிப்பது தான் அவரின் முதன்மை பணி என்றாலும், பேட்ஸ்மேன்கள் விக்கெட்களுக்கு இடையே ஓடும் வேகம், பந்துவீச்சாளர்கள் பந்து வீச ஓடி வரும் வேகம் என அனைத்தையும் அதிகரிக்க அவர் தனித் தனியாக பயிற்சி அளித்து வருகிறார்.

ஒரு பார்வையில்..

ஒரு பார்வையில்..

வெறும் ஒரு பார்வையில் ஒரு வீரரின் பலம் என்ன என்பதை கண்டுபிடித்து அந்த விஷயத்தை எப்படி இன்னும் பட்டை தீட்டலாம் என கற்றுத் தருகிறார் என கொல்கத்தா அணியின் இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டி அவரைப் பற்றி கூறினார்.

மற்ற அணிகளை வீழ்த்தும்

மற்ற அணிகளை வீழ்த்தும்

இந்தப் பயற்சிகள் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தில் மற்ற ஐபிஎல் அணிகளை விட வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பீல்டிங்கில் துடிப்பாக செயல்படுவதன் மூலம் எதிரணிகளுக்கு கடும் அழுத்தம் கொடுக்க முடியும்.

Story first published: Thursday, September 17, 2020, 18:10 [IST]
Other articles published on Sep 17, 2020
English summary
IPL 2020 : KKR brought Olympic sprinter Chris Donaldson to speed up the players and beat other IPL teams on the field. This is an idea of the new coach of KKR Brendon McCullum.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X