For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போட்டியின் நடுவே எழுந்த விமர்சனம்.. மாஸ்டர் பிளானை இறக்கிய தினேஷ் கார்த்திக்.. ஆடிப்போன ஜாம்பவான்கள்

துபாய்: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தனக்கு எதிராக வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு கேகேஆர் கேப்டன் தினேஷ் கார்த்திக் பதிலடி கொடுத்துள்ளார்.

2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கவனம் ஈர்த்துள்ளது. அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் கொல்கத்தா அணி வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. நேற்று மிகவும் பரபரப்பாக சென்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை கொல்கத்தா அணி வீழ்த்தியது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ராஜஸ்தான் 9 விக்கெட்டிற்கு வெறும் 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

முதலில் இந்த போட்டியின் தொடக்கத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்துவிடும் என்றுதான் கணித்தார்கள். ஏனென்றால் பேட்டிங்கின் போது தினேஷ் கார்த்திக் சரியாக பேட்டிங் செய்யவில்லை. நன்றாக பேட்டிங் செய்த இயான் மோர்கன் போன்ற வீரர்களை கூட தனக்கு முன்பாக களமிறக்கவில்லை. தேவையில்லாமல் சீக்கிரமே இறங்கி தினேஷ் கார்த்திக் அவுட்டானார்.

ஓவர் எப்படி கொடுத்தார்

ஓவர் எப்படி கொடுத்தார்

அதன்பின் இன்னொரு பக்கம் சேசிங்கின் போது, தினேஷ் கார்த்திக் ஓவர் கொடுத்த விதம் கேள்விகளை எழுப்பியது. முதலில் 10 ஓவர் முழுக்க ஸ்பீட் பவுலர்களுக்கு ஓவர் கொடுத்தார். அதன்பின்னர் ஸ்பின் பவுலர்களுக்கு ஓவர் கொடுத்தார். அதிலும் டெத் ஓவர்களை ஸ்பின் பவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் கொடுத்தது பெரிய அளவில் விமர்சனங்களை எழுப்பியது.

டெத் ஓவர்

டெத் ஓவர்

கடைசி ஓவரை குல்தீப் யாதவிற்கும், 19வது ஓவரை நரேனுக்கு தினேஷ் கார்த்திக் கொடுத்தது கேள்விகளை எழுப்பியது. இதனால் தினேஷ் கார்த்திக் எடுத்த முடிவுகள் சரியில்லை. கேப்டன்சியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று பலரும் அவருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினார்கள். ஆனால் தான் எடுத்த முடிவுகள் சரிதான் என்று தினேஷ் கார்த்திக் கடைசியில் நிரூபித்து உள்ளார்.

அவுட்டானார்

அவுட்டானார்

நேற்று ராகுல் திவாதியா பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது ஸ்பின் பவுலிங்கை மட்டும் தினேஷ் கார்த்திக் கொடுத்தார். ராகுல் திவாதி ஸ்பீட் பவுலிங்கில் ஆட கூடியவர் என்பதால் ஸ்பின் பவுலர்களை மட்டுமே இறக்கினார். சரியாக திவாதியா ஸ்பின் அட்டாக்கில் அவுட்டானார். அதேபோல் கொல்கத்தாவின் டெத் ஓவர்களை சமாளிக்க ராஜஸ்தான் ஏற்கனவே திட்டங்களை வகுத்து இருந்தது. இதனால் ராஜஸ்தானுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் கடைசியில் ஸ்பின் பவுலர்களை தினேஷ் கார்த்திக் இறக்கினார்.

பவுலிங் செய்தனர்

பவுலிங் செய்தனர்

இதை ராஜஸ்தான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஸ்பீட் பவுலர்களை எதிர்பார்த்து இருந்த ராஜஸ்தானுக்கு இது அதிர்ச்சி கொடுத்தது. அதேபோல் நேற்று மைதானம் பாதி போட்டிக்கு மேல் ஸ்பின் போடுவதற்கு சாதகமாக மாறியது. இதனால் 10 ஓவருக்குப்பின் முழுக்க முழுக்க கொல்கத்தாவின் ஸ்பின் பவுலர்கள் மட்டுமே பவுலிங் செய்தனர். இதனால் நன்றாக ரன் செல்ல வேண்டிய நேரத்தில் ராஜஸ்தான் திணறியது.

ஓவர் தரவில்லை

ஓவர் தரவில்லை

அடுத்தடுத்து இதனால் 4 விக்கெட்டுகளை ராஜஸ்தான் இழந்தது. கொல்கத்தாவின் கும்மின்ஸ், நாகர்கோட்டியிடம் ஓவர்கள் மீதம் இருந்தும் கூட தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு ஓவர் கொடுக்கவில்லை. கொல்கத்தாவின் இந்த ஸ்பின் அட்டாக்கை ராஜஸ்தான் எதிர்பார்க்கவில்லை. முதலில் தினேஷ் கார்த்திக்கின் முடிவை விமர்சனம் செய்தவர்களே.. கடைசியில் இது நல்ல பிளான் என்று பாராட்டினார்கள்.

விமர்சனம் ஏன் ?

விமர்சனம் ஏன் ?

கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலர்.. உண்மையில் தினேஷ் கார்த்திக்குக்கு பெரிய தைரியம்தான்.முழுக்க முழுக்க இரண்டாம் பாதியில் ஸ்பின் கொடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அவரின் கேப்டன்சி வித்தியாசமாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர். ஆனாலும் அவருக்கு எதிராக இன்னொரு தரப்பு தொடர்ந்து விமர்சனங்களை வைத்த வண்ணம் இருக்கிறது.

Story first published: Thursday, October 1, 2020, 21:05 [IST]
Other articles published on Oct 1, 2020
English summary
IPL 2020: KKR skipper Dinesh Karthik's master class plan against Rajasthan changed the match result.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X