For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுக்கு மேலயும் நரைனை ஆட வைத்தால் கேப்டன்சிக்கே ஆபத்து.. உஷாரான தினேஷ் கார்த்திக்.. என்ன நடந்தது?

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாற்றத்தை செய்துள்ளார் கேப்டன் தினேஷ் கார்த்திக்.

கொல்கத்தா அணியின் துவக்க வீரர் சுனில் நரைன் சிறப்பாக செயல்படவில்லை. அவரால் இதுவரை ஒரு போட்டியில் கூட பெரிதாக ரன் குவிக்க முடியவில்லை.

இந்த நிலையில், ராகுல் திரிபாதி டெல்லி அணிக்கு எதிராக ஆடிய மிரட்டல் ஆட்டத்துக்குப் பின், கடும் அழுத்தம் ஏற்பட்டு தினேஷ் கார்த்திக் நரைனை நீக்கி உள்ளார்.

கொல்கத்தா அணியின் புரட்சி

கொல்கத்தா அணியின் புரட்சி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புரட்சிகரமான சில முடிவுகளை எடுத்து ஐபிஎல் அரங்கை அதிர வைத்துள்ளது. அதில் ஒன்று தான் சுனில் நரைனை துவக்க வீரராக ஆட வைத்தது. அவர் பந்துவீச்சாளர் என்பதால் அவரது விக்கெட் இழப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

கூடுதல் லாபம்

கூடுதல் லாபம்

அதே சமயம் அவர் அதிரடியாக ரன் குவித்தால் அது அணிக்கு கூடுதல் லாபம் என்பதால் அவரை துவக்க வீரராக ஆட வைத்தது கொல்கத்தா அணி. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் கலக்கி வந்தார் சுனில் நரைன். அவரை கண்டு எதிரணிகள் பதற்றமடைந்த சம்பவங்கள் நிறைய உண்டு.

வேலை செய்யவில்லை

வேலை செய்யவில்லை

கடந்த இரண்டு சீசன்களில் கொல்கத்தா அணிக்கு சுனில் நரைனின் அதிரடி ஆட்டம் பெரிய அளவில் உதவியது. ஆனால், 2020 ஐபிஎல் தொடரில் சுனில் நரைனால் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட முடியவில்லை. அவர் பந்துகளை வீணடித்தும் வந்தார்.

மாற்றம் வேண்டும்

மாற்றம் வேண்டும்

இந்த நிலையில், சுனில் நரைனை நீக்கி விட்டு வேறு முழு நேர துவக்க வீரரை ஆட வைக்க வேண்டும் என்ற குரல் எழுந்து வந்தது. கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்த விமர்சனத்தை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார்.

ராகுல் திரிபாதி

ராகுல் திரிபாதி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து கொல்கத்தா அணிக்கு வந்த ராகுல் திரிபாதிக்கு துவக்க வீரராக ஆட வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற்றார்.

மிரட்டல் ஆட்டம்

மிரட்டல் ஆட்டம்

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் திரிபாதி துவக்க வீரராக களமிறங்கவில்லை. அவர் பேட்டிங் வரிசையில் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ்-க்கும் கீழே இறங்கினார். ஆனால், அதிரடியாக 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். 3 சிக்ஸ், 32 ஃபோர் அடித்து இருந்தார்.

தினேஷ் கார்த்திக் கேப்டன்சிக்கு ஆபத்து

தினேஷ் கார்த்திக் கேப்டன்சிக்கு ஆபத்து

ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் ஆடி தன் பார்மையும் காட்டிய நிலையில், கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு அழுத்தம் அதிகரித்தது. இனிமேலும், சுனில் நரைனை மட்டுமே துவக்க வீரராக ஆட வைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அவரது கேப்டன்சியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வந்தன.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சுனில் நரைனை நான்காம் வரிசையில் களமிறக்கி விட்டு ராகுல் திரிபாதியை துவக்க வீரராக களமிறக்கினார் தினேஷ் கார்த்திக். இது பெரிய அளவில் வேலை செய்தது.

பலமான மிடில் ஆர்டர்

பலமான மிடில் ஆர்டர்

ராகுல் திரிபாதி அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். சுனில் நரைன் மிடில் ஆர்டரில் இறங்கி அதிரடியாக 9 பந்துகளில் 17 ரன்கள் குவித்தார். தற்போது துவக்கமும், மிடில் ஆர்டரும் பலமாக மாறி உள்ளது. கொல்கத்தா அணியின் பேட்டிங் ஆர்டர் அதிரடி வீரர்களாலும் நிறைந்துள்ளது.

Story first published: Wednesday, October 7, 2020, 21:16 [IST]
Other articles published on Oct 7, 2020
English summary
IPL News in Tamil : IPL 2020 KKR vs CSK : Dinesh Karthik removed Sunil Narine from opening, replaced him with Rahul Tripathi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X