For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திடீர் சர்ப்ரைஸ் தந்த தினேஷ் கார்த்திக்.. இடம் மாறிய கொல்கத்தா வீரர்.. பதறிய சிஎஸ்கே!

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் வரிசையை மாற்றியது.

அதில் சுனில் நரைன் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஆக இறங்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவர் அதிரடி ஆட்டம் ஆடி விரைவில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆகும் வரை சிஎஸ்கே அணியில் பதற்றம் நிலவியது.

பிராவோவோடு வாக்குவாதம்.. கிளவுஸை கழற்றிவிட்டு.. தோனி கொடுத்த சிக்னல்.. கடைசி ஓவரில் பரபர சம்பவம்!பிராவோவோடு வாக்குவாதம்.. கிளவுஸை கழற்றிவிட்டு.. தோனி கொடுத்த சிக்னல்.. கடைசி ஓவரில் பரபர சம்பவம்!

கொல்கத்தா பேட்டிங்

கொல்கத்தா பேட்டிங்

சிஎஸ்கே அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சிஎஸ்கே அணி தொடர்ந்து ஆறாவது போட்டியில் முதலில் பந்து வீசியது. கொல்கத்தா அணி பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்திருந்தது.

துவக்கம் மாற்றம்

துவக்கம் மாற்றம்

கொல்கத்தா அணியின் துவக்க வீரர் சுனில் நரைன் இடம் மாற்றப்பட்டு, ராகுல் திரிபாதி துவக்கம் அளித்தார். அவருடன் ஏற்கனவே சிறப்பாக ஆடி வரும் ஷுப்மன் கில் இணைந்து துவக்கம் அளித்தனர். கில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ராகுல் திரிபாதி அதிரடி

ராகுல் திரிபாதி அதிரடி

ராகுல் திரிபாதி அதிரடியாக ரன் குவித்து மிரள வைத்தார். அவருடன் அதிரடி ஆட்டம் ஆட வந்த பேட்ஸ்மேனும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவரை தவிர அதிக ரன்கள் அடித்த இருவர் சுனில் நரைன் மற்றும் கம்மின்ஸ் மட்டுமே.

சுனில் நரைன் ஆட்டம்

சுனில் நரைன் ஆட்டம்

சுனில் நரைன் துவக்க வீரராக நீக்கப்பட்ட நிலையில், நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பி ஆச்சரியம் அளித்தார் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக். அவர் அதிரடி ஆட்டம் ஆடவே அனுப்பி வைக்கப்பட்டார். தனக்கு அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்த அவர் பந்துகளை வீணடிக்காமல் ரன் குவித்தார்.

பதறிய சிஎஸ்கே

பதறிய சிஎஸ்கே

அவர் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அவர் அடித்து ஆடத் துவங்கிய உடன் சிஎஸ்கே வீரர்கள் இடையே பதற்றம் காணப்பட்டது. அவர் விக்கெட்டை வீழ்த்தாவிட்டால் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி விட்டுத் தான் செல்வார் சுனில் நரைன்.

சூப்பர் கேட்ச்

சூப்பர் கேட்ச்

இந்த நிலையில், ஷர்துல் தாக்குர் ஓவரில் பந்தை தூக்கி அடித்தார் நரைன். பந்தை ஜடேஜா - பாப் டுபிளெசிஸ் சேர்ந்து அபாரமாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினர். அதன் பின்னரே கேப்டன் தோனி உட்பட சிஎஸ்கே வீரர்கள் நிம்மதி அடைந்தனர்.

கொல்கத்தா தடுமாற்றம்

கொல்கத்தா தடுமாற்றம்

கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் முதலில் அதிரடி ஆட்டம் ஆடியது. அப்போது அந்த அணி 190 ரன்களுக்கும் மேல் எடுக்கும் என்ற நிலை இருந்தது. எனினும், மத்திய ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 167 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Story first published: Wednesday, October 7, 2020, 22:16 [IST]
Other articles published on Oct 7, 2020
English summary
IPL News in Tamil : KKR vs CSK - Sunil Narine scored 17 runs from 9 balls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X