For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்கக் கூடாதவரிடம் சிக்கிய அஸ்வின்.. சரமாரி விளாசல்.. கொல்கத்தாவை காத்த நம்பிக்கை நாயகன்!

அபுதாபி : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் ருத்ர தாண்டவம் ஆடினார்.

அவரது ஆட்டத்தால் கொல்கத்தா அணியின் நிலை தலைகீழாக மாறியது. அந்த அணி 194 ரன்கள் குவித்தது.

அஸ்வின் ஓவர்களில் தான் சுனில் நரைன் குறி வைத்து அடித்து ஆடினார். அஸ்வின் 3 ஓவர்களில் 45 ரன்களை வாரிக் கொடுத்து பரிதாப நிலையை அடைந்தார்.

இதுதான் கடைசி சான்ஸ்.. கலக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்!இதுதான் கடைசி சான்ஸ்.. கலக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்!

சுனில் நரைன்

சுனில் நரைன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் சுனில் நரைன். அவர் சில போட்டிகளாக அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அவரது பந்துவீச்சு குறித்து அம்பயர்கள் முதல் புகாரை அளித்தது தான் அதற்கு காரணம்.

தடை விதிக்கப்படும்

தடை விதிக்கப்படும்

இன்னும் ஒரு புகார் அளிக்கப்பட்டால் அவர் ஓராண்டுக்கு கிரிக்கெட் ஆட முடியாத நிலை ஏற்படும் என்பதால் கொல்கத்தா அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அவரது பந்துவீச்சு விதிகளுக்கு உட்பட்டே இருப்பதை அவர் நிரூபித்தார்.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

அதன் பின் அவருக்கு வாய்ப்பு அளிக்க சரியான நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார் கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் இயான் மார்கன். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி அவசியம் என்ற நிலையில் சுனில் நரைன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் சுழற் பந்துவீச்சாராக அணியில் சேர்க்கப்பட்டார்.

கில் அவுட்

கில் அவுட்

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா களமிறங்கினர். ஷுப்மன் கில் மோசமாக ஆடி 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ராணா - நரைன் ஜோடி

ராணா - நரைன் ஜோடி

அடுத்து வந்த ராகுல் திரிபாதி 13, தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆக இயான் மார்கனுக்கு முன் சுனில் நரைன் களமிறங்கினார். நிதிஷ் ராணாவுடன் அவர் ஜோடி சேர்ந்தார். இருவருமே அதிரடி ஆட்டம் ஆடுபவர்கள் என்பதால் டெல்லி அணிக்கு அப்போது தலைவலி ஆரம்பம் ஆனது.

அஸ்வின் பந்துவீச்சு

அஸ்வின் பந்துவீச்சு

சுனில் நரைன் சுழற் பந்துவீச்சாளர்களை எளிதாக சமாளித்து ஆடுவார் என்பது தெரிந்தும், நரைன் களமிறங்கிய உடன் அஸ்வினுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அவரது முதல் ஓவரிலேயே 13 ரன்கள் கொடுத்தார். அடுத்து துஷார் தேஷ்பாண்டே, ஸ்டோய்னிஸ் என யார் பந்து வீசினாலும் வெளுத்தது நரைன் - ராணா ஜோடி.

நரைன் அரைசதம்

நரைன் அரைசதம்

வேறு வழியின்றி மீண்டும் அஸ்வினுக்கு ஓவர் கொடுக்கப்பட்டது. அவரது ஓவர்களை நரைன் குறி வைத்து அடித்தார். அஸ்வின் 3 ஓவர்கள் மட்டுமே வீசி 45 ரன்கள் கொடுத்து இருந்தார். சுனில் நரைன் அரைசதம் கடந்து 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கொல்கத்தா ஸ்கோர்

கொல்கத்தா ஸ்கோர்

சுனில் நரைன் 32 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் ராணா 53 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். இயான் மார்கன் 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து கடைசி ஓவர்களில் ரன் குவிக்க உதவினார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

நம்பிக்கை நாயகன்

நம்பிக்கை நாயகன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வலுவான டெல்லி அணியை வீழ்த்துவது கடினம் என கூறப்பட்டு வந்த நிலையில், சுனில் நரைன் மீண்டும் வாய்ப்பு கிடைத்த உடன் அணியை காப்பாற்றும் இன்னிங்க்ஸ் ஆடி உள்ளார். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் ஆடிய இந்த ஆட்டம் கொல்கத்தா அணியின் தலைஎழுத்தை மாற்றக் கூடும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, October 24, 2020, 18:17 [IST]
Other articles published on Oct 24, 2020
English summary
IPL 2020 KKR vs DC : Sunil Narine innings turned the match for KKR
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X