For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் வெற்றி.. வார்னரின் தப்புக் கணக்கு.. ஹைதரபாத்தை திட்டம் போட்டு காலி செய்த கொல்கத்தா!

அபுதாபி : 2020 ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்து பெரிய அளவில் ரன்கள் குவிக்கலாம் என தப்புக்கணக்கு போட்டார். அந்த அணியால் 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

143 ரன்கள் இலக்கை எளிதாக எட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஷுப்மன் கில் சிறப்பாக ஆடி 70 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் நின்றார்.

நம்பிக்கை இழந்த டீம்.. அணிக்குள்ளேயே எதிரிகள்.. நெருக்கடியில் தமிழக வீரர்.. இன்றுதான் கடைசி வாய்ப்புநம்பிக்கை இழந்த டீம்.. அணிக்குள்ளேயே எதிரிகள்.. நெருக்கடியில் தமிழக வீரர்.. இன்றுதான் கடைசி வாய்ப்பு

8வது லீக் போட்டி

8வது லீக் போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இந்த இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இந்தப் போட்டியில் யார் முதல் வெற்றியை பதிவு செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

பேட்டிங் தேர்வு

பேட்டிங் தேர்வு

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். இதற்கு முன் நடந்த ஏழு போட்டிகளில் டாஸ் வென்ற அணி பந்துவீச்சை தேர்வு செய்து அதில் ஆறு முறை தோல்வி அடைந்த நிலையில், வார்னர் முதன் முறையாக இந்த சீசனில் டாஸ் முடிவை மாற்றினார். ஆனால், அது தவறான முடிவாக மாறியது.

விஜய் ஷங்கர் நீக்கம்

விஜய் ஷங்கர் நீக்கம்

ஹைதராபாத் அணியில் விஜய் ஷங்கர் முதுகில் ஏற்பட்ட வலி காரணமாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் சாஹா தேர்வு செய்யப்பட்டார். காயத்தால் விலகிய மிட்செல் மார்ஷ்-க்கு பதில் முகமது நபி அணியில் தேர்வு செய்யப்பட்டார். சந்தீப் சர்மாவுக்கு பதில் கலீல் அஹ்மது தேர்வு செய்யப்பட்டார்.

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

கொல்கத்தா அணியின் கமலேஷ் நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி அணியில் தேர்வு செய்யப்பட்டனர். சந்தீப், நிகில் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்தப் போட்டியில் வெற்றி பெறாவிட்டால் பதவி இழக்க நேரிடும் என கூறப்பட்ட நிலையில் பந்துவீச்சை சரியாக மாற்றி ஹைதராபாத் அணியை திணற வைத்தார் அவர்.

பாட் கம்மின்ஸ்

பாட் கம்மின்ஸ்

ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் பேர்ஸ்டோ - வார்னரை சமாளிக்க பாட் கம்மின்ஸ் துவக்கத்தில் தொடர்ந்து மூன்று ஓவர்களை வீசினார். பேர்ஸ்டோ அவரது பந்துவீச்சில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் - மனிஷ் பாண்டே கூட்டணி அமைத்து ஆடினர்.

ஹைதராபாத் ஸ்கோர்

ஹைதராபாத் ஸ்கோர்

நபி 11, அபிஷேக் சர்மா 2 ரன்களுடன் களத்தில் இருக்க ஹைதரபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை மாற்றி, 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி ஹைதராபாத் அணியை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

வருண் சக்கரவர்த்தி

வருண் சக்கரவர்த்தி

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் வார்னர் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வார்னர் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். மனிஷ் பாண்டே போராடி 51 ரன்கள் சேர்த்தார். சாஹா 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

சுனில் நரைன் டக் அவுட்

சுனில் நரைன் டக் அவுட்

கொல்கத்தா அணி 143 ரன்கள் என்ற இலக்கை துரத்தியது. அணியில் ஆறு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்ததால் அந்த அணி விக்கெட் இழக்காமல் சரியாக இலக்கை எட்ட வேண்டிய நிலையில் இருந்தது. இந்த நிலையில், துவக்க வீரர் சுனில் நரைன் டக் அவுட் ஆனார்.

தினேஷ் கார்த்திக் டக் அவுட்

தினேஷ் கார்த்திக் டக் அவுட்

அடுத்து வந்த நிதிஷ் ராணா அதிரடியாக 13 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். அப்போது லேசான பரபரப்பு எழுந்தது. எனினும், இயான் மார்கன் நிதானமாக ஆடி, ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து ரன் சேர்த்தார்.

ஷுப்மன் கில்

ஷுப்மன் கில்

ஷுப்மன் கில் இளம் வீரர் என்றாலும் எந்த பதற்றமும் இன்றி, எந்த தவறான ஷாட்டும் ஆடாமல் 70 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். மார்கன் 29 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இது இந்த சீசனில் கொல்கத்தா அணியின் முதல் வெற்றி ஆகும்.

Story first published: Saturday, September 26, 2020, 23:23 [IST]
Other articles published on Sep 26, 2020
English summary
IPL 2020 News in Tamil : Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X