For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 டாட் பால்.. தீயாய் சீறிய பந்துகள்.. ஒரே மேட்ச்.. விமர்சனங்களை உடைத்தெறிந்த வீரர்.. செம பதிலடி!

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் முதல் போட்டியில் மோசமாக பந்து வீசியதால் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியிலேயே பந்துகளை சீற வைத்து வார்னர் - பேர்ஸ்டோ போன்ற முன்னணி சர்வதேச பேட்ஸ்மேன்களை திணற வைத்தார்.

அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பேர்ஸ்டோ விக்கெட்டை இழந்தார். ஒரே போட்டியில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கம்மின்ஸ்.

ஒருவர் விடாமல் எல்லோரும் ஒருவர் விடாமல் எல்லோரும் "பார்ம் - அவுட்''.. ஐபிஎல்லில் சொதப்பும் தமிழக வீரர்கள்.. அதிர்ச்சி தகவல்!

பாட் கம்மின்ஸ் விமர்சனம்

பாட் கம்மின்ஸ் விமர்சனம்

பாட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பந்து வீசிய போது சொதப்பலாக வீசினார். 3 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்தார். அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. 15.5 கோடி கொடுத்து வாங்கிய வீரர் என்பதால் விமர்சனம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

கொல்கத்தா - ஹைதராபாத் போட்டி

கொல்கத்தா - ஹைதராபாத் போட்டி

2020 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் ஹைதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் பந்து வீசியது.

சீறிப் பாய்ந்த பந்துகள்

சீறிப் பாய்ந்த பந்துகள்

இந்தப் போட்டியில் இரண்டாவது ஓவரை பாட் கம்மின்ஸ்-இடம் அளித்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். கம்மின்ஸ் டி20 போட்டிகளில் புதிய பந்தில் வீசுவது வழக்கம் கிடையாது. எனினும், அவரிடம் பந்தை கொடுத்தார் தினேஷ் கார்த்திக். அவரது பந்துவீச்சில் பந்துகள் சீறிப் பாய்ந்தன.

பத்து டாட் பால்

பத்து டாட் பால்

டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோஎன ஹைதராபாத் அணியின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி வீழ்த்தும் பொறுப்பை ஏற்ற பாட் கம்மின்ஸ் அதை சிறப்பாக செய்தார். அவர் வீசிய முதல் மூன்று ஓவர்களில் 10 டாட் பால்கள் வீசப்பட்டன.

பேர்ஸ்டோ விக்கெட்

பேர்ஸ்டோ விக்கெட்

பேர்ஸ்டோ, கம்மின்ஸ் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் திணறினார். மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் தினேஷ் கார்த்திக் கேட்ச் பிடித்தார். பேர்ஸ்டோ அந்த பந்தை பேட்டால் அடிக்கவில்லை என்பதால் ரிவ்யூ கேட்டு தப்பினார். அதற்கு அடுத்த பந்திலேயே அவரை பவுல்டு அவுட் ஆக்கி வெளியே அனுப்பினார் கம்மின்ஸ்.

தினேஷ் கார்த்திக் முடிவு ஏன்?

தினேஷ் கார்த்திக் முடிவு ஏன்?

பாட் கம்மின்ஸ் தொடர்ந்து மூன்று ஓவர்களை வீசி முடித்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவர்களை பற்றி கவலைப்படாமல் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறந்த பந்துவீச்சாளர் என்ற முறையில் கம்மின்ஸ்-க்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து ரன் குவிப்பை தடுத்து நிறுத்தினார். கம்மின்ஸ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ஹைதராபாத் தடுமாற்றம்

ஹைதராபாத் தடுமாற்றம்

ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் பேர்ஸ்டோ 5, வார்னர் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மனிஷ் பாண்டே அதிரடியாக ஆடினாலும், சாஹா நிதான ஆட்டம் ஆடியதால் ரன் குவிக்க முடியாமல் அந்த அணி திணறியது.

Story first published: Saturday, September 26, 2020, 21:45 [IST]
Other articles published on Sep 26, 2020
English summary
IPL 2020 News in Tamil : Pat Cummins replied with his fiery bowling against Sunrisers Hyderabad.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X