இவரை சீக்கிரம் இந்திய அணியில் சேருங்கப்பா.. இங்கிலாந்து கேப்டனுக்கே கிளாஸ் எடுத்த இளம் வீரர்!

அபுதாபி : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 21 வயதே ஆன ஷுப்மன் கில் எப்படி சிறிய இலக்கை சேஸிங் செய்ய வேண்டும் என இங்கிலாந்து கேப்டன் எதிரிலேயே ஆடிக் காட்டினார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தான் ஷுப்மன் கில் சிறப்பாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் தன் அணியை இலக்கை எட்டச் செய்தார்.

முதல் வெற்றி.. வார்னரின் தப்புக் கணக்கு.. ஹைதரபாத்தை திட்டம் போட்டு காலி செய்த கொல்கத்தா!

கொல்கத்தா - ஹைதராபாத் போட்டி

கொல்கத்தா - ஹைதராபாத் போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே ஆன ஐபிஎல் லீக் சுற்றுப் போட்டியில் ஷுப்மன் கில் கொல்கத்தா அணியின் துவக்க வீரராக இடம் பெற்றார். இந்த சீசனில் அவரை முக்கிய வீரராக அனைத்து போட்டிகளிலும் ஆட வைக்க கொல்கத்தா முடிவு செய்து இருந்தது.

சிறிய இலக்கு

சிறிய இலக்கு

ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. 143ரன்கள் என்ற சிறிய இலக்கை துரத்த வந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்த அணிக்கு ஷுப்மன் கில் - சுனில் நரைன் துவக்கம் அளித்தனர்.

இரண்டு டக் அவுட்

இரண்டு டக் அவுட்

சுனில் நரைன் டக் அவுட் ஆனார்.அடுத்து வந்த நிதிஷ் ராணா வேகமாக ஆடி 13 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இரண்டு பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆன போதும் ஷுப்மன் கில் தொடர்ந்து ஆடி வந்தார்.

தடுமாறாத கில்

தடுமாறாத கில்

அடுத்து இயான் மார்கனுடன் இணைந்து நிதான ஆட்டம் ஆடினார் ஷுப்மன் கில். தன் ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் மேல் இருக்கும் படி பார்த்துக் கொண்ட அவர் விக்கெட் இழக்காமல், ரன் ரேட் அழுத்தம் இல்லாமல் ஸ்ட்ரைக்கை மாற்றி, ரன் சேர்த்தார்.

திட்டமிட்ட ஆட்டம்

திட்டமிட்ட ஆட்டம்

அதிக டாட் பால்கள் ஆடினாலும், சிங்கிள் ரன்கள் எடுத்தாலும் ஷுப்மன் கில் சரியாக தன் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொண்டார். சிறிய இலக்கை துரத்தும் போது அதிரடி ஆட்டம் ஆடினால் சில சமயம் எதிரணிக்கு அது சாதகமாக மாறி விடும்.

ஒத்துழைத்த இயான் மார்கன்

ஒத்துழைத்த இயான் மார்கன்

அதை சரியாக புரிந்து கொண்டு ஆடிய கில்லுக்கு, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் ஒத்துழைப்பு அளித்து ஆடினார். மார்கன் எப்போதும் போல அதிரடி ஆட்டம் ஆட முற்படாமல் ஷுப்மன் கில் போல அவருக்கு ஒத்துழைத்து நிதானமாக இலக்கை நெருங்கி பின் அதிரடி ஆட்டம் ஆடினார்.

வெற்றி

வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முன்னிலையில், சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில்லை ரசிகர்கள் இணையத்தில் பாராட்டித் தள்ளினர்.

இந்திய அணியில்..

இந்திய அணியில்..

ஷுப்மன் கில் அண்டர் 19 அணியில் இருந்த போதே இந்திய அணியில் இடம் பெற்று இருக்க வேண்டியவர் கடந்த ஆண்டு அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது. விரைவில் அவரை முழு நேர வீரராக இந்திய அணியில் ஆட வைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 News in Tamil : IPL 2020 KKR vs SRH : Shubman Gill taught how to chase low targets in T20 in front of England captain Eoin Morgan.
Story first published: Saturday, September 26, 2020, 23:49 [IST]
Other articles published on Sep 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X