For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ரெக்கார்டு.. சச்சின் சாதனையை உடைத்து எறிந்து.. நம்பர் 1 இடத்தை பிடித்த ராகுல்!

துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் முக்கிய சாதனை ஒன்றை படைத்தார்.

2020 ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் சுற்றுப் போட்டியில் பெங்களூர் - பஞ்சாப் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் சச்சினின் ஐபிஎல் சாதனை ஒன்றை முறியடித்தார் ராகுல். இந்திய அளவில் முதல் இடம் பெற்ற அவர், ஒட்டுமொத்த வீரர்களில் மூன்றாம் இடத்தை பிடித்து அசத்தினார்.

KXIP vs RCB : கோலி டாஸ் வென்றார்.. பஞ்சாப் அணியில் அஸ்வின், நீஷம்.. அதே அணியுடன் இறங்கும் பெங்களூர்!KXIP vs RCB : கோலி டாஸ் வென்றார்.. பஞ்சாப் அணியில் அஸ்வின், நீஷம்.. அதே அணியுடன் இறங்கும் பெங்களூர்!

லீக் போட்டி

லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தன் முதல் போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வி அடைந்து இருந்தது. பெங்களூர் அணி தன் முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

துவக்கம்

துவக்கம்

இந்த இரண்டு அணிகள் மோதும் லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு கேஎல் ராகுல் - மயங்க் அகர்வால் துவக்கம் அளித்தனர்.

2000 ரன்கள்

2000 ரன்கள்

முதல் போட்டியில் சரியாக ரன் குவிக்காத ராகுல், இந்த முறை துவக்கம் முதலே பவுண்டரி அடித்து அதிரடியாக ரன் குவித்து வந்தார். அவர் இந்தப் போட்டியில் முதல் ஃபோர் அடித்த போது ஐபிஎல் தொடரில் 2000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.

முதல் இடம்

முதல் இடம்

அவர் 69 போட்டிகளில், 60 இன்னிங்க்ஸ்களில் 2000 ரன்களை கடந்துள்ளார், இது ஒரு முக்கிய சாதனை ஆகும். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கேஎல் ராகுல்.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை செய்து இருந்தார். அவரை முந்தி கேஎல் ராகுல் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக மேலும் ஒரு அடி எடுத்து வைத்துள்ளார் ராகுல்.

மூன்றாம் இடம்

மூன்றாம் இடம்

அதி வேகமாக 2000 ரன்களை கடந்த ஒட்டுமொத்த ஐபிஎல் வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இதுவும் ஐபிஎல் அரங்கில் முக்கிய சாதனையாக அமைந்தது.

பேட்டிங் சராசரி

பேட்டிங் சராசரி

ராகுல் கடந்த இரண்டு சீசன்களில் பேட்டிங் சராசரி 50க்கும் மேல் வைத்துள்ளார். அது மட்டுமின்றி இந்த சீசன் முதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பதவியிலும் அமர வைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சச்சின் சாதனையை முறியடித்தது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Story first published: Thursday, September 24, 2020, 21:35 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
IPL 2020 : KL Rahul fastest Indian to reach 2000 runs in IPL. He beat Sachin Tendulkar to achieve the same. He is also the third fastest to reach 2000 runs overall.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X