ஆர்சிபி சொதப்புவதை கூட ஏற்கலாம்.. ஆனால் இதுதான் அதிர்ச்சி தருகிறது.. கோலியால் கலக்கத்தில் ரசிகர்கள்!

துபாய்: பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் கோலியின் ஆட்டம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இன்று பஞ்சாப் அணிக்கும் பெங்களூருக்கும் இடையே துபாயில் ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் பவுலிங்கை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் மட்டும் 132 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய பெங்களூர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 10 ஓவருக்குள் 5 விக்கெட்டை இழந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூர்.

எந்த இந்திய வீரரும் செய்யாத இமாலய சாதனை.. என்னா அடி.. கோலியை தெறிக்கவிட்ட பஞ்சாப் கேப்டன்!

கேப்டன் எப்படி

கேப்டன் எப்படி

இந்த போட்டியில் பஞ்சாப் கேப்டன் போல பெங்களூர் கேப்டனும் அதிரடியாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் பெங்களூர் கேப்டன் கோலிக்கு 2வது ஓவரிலேயே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. ஓப்பனிங் வீரர் தேவ்தத் படிக்கல் வெறும் 1 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். கடந்த போட்டியில் 56 ரன்கள் எடுத்த தேவ்தத் இந்த போட்டியில் ஏமாற்றம் அளித்தார்.

டக் அவுட்டானார்

டக் அவுட்டானார்

அதன்பின் இறங்கிய ஜோஷ் பிளிப் டக் அவுட்டாகி வெளியேறினார். கடந்த போட்டியில் 6வது இடத்தில் இறங்கிய பிளிப்பை சோதனை முயற்சியாக இந்த முறை ஒன் டவுன் இறங்கினார் கோலி. ஆனால் இவர் 3 பந்துகளை எதிர்கொண்டு டக் டவுட்டானார். இதன்பின் இறங்கிய கோலிக்கு இன்று தனது பார்மை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தது.

கோலி பேட்டிங்

கோலி பேட்டிங்

ஆனால் கோலி இறங்கிய போதே, நம்பிக்கையின்றிதான் களமிறங்கினார். வெறும் 5 பந்துகள் மட்டுமே கோலி பிடித்தார். ஆனால் அதிலும் பழைய கோலி போல இல்லாமல், சரியான ஷாட் அடிக்க முடியாமல் திணறினார். 5 பந்துகள் மட்டுமே பிடித்த கோலி 3 பந்துகளை வேஸ்ட் செய்துவிட்டு, 1 ரன் மட்டுமே அடித்து அவுட்டானார்.

மிக மோசம்

மிக மோசம்

சென்ற போட்டியிலும் கோலி மோசமாக ஆடினார். சென்ற போட்டியில் 13 பந்துகள் பிடித்த இவர் 14 ரன்கள் எடுத்தார். ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் அவுட்டானார். கடந்த உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் கோலி தனது பார்மை இழந்தார். அந்த தொடரில் கோலி சரியாக ஆடவில்லை. அதன்பின் பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் இப்போதுவரை அவர் பார்ம் பெறவில்லை.

நம்பர் 1

நம்பர் 1

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் இப்படி திணறுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பெங்களூர் அணி சொதப்பும் என்று தெரியும். ஆனால் கோலியும் இப்படி சொதப்புவது கஷ்டமாக இருக்கிறது. அவர் விரைவில் பார்மிற்கு திரும்ப வேண்டும், என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Virat Kohli didn't come back to form even against Punjab team.
Story first published: Thursday, September 24, 2020, 22:59 [IST]
Other articles published on Sep 24, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X