For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பல லட்சம் அபராதம்.. இப்படியே போனால் விரைவில் தடைதான்.. சுதாரிக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி!

துபாய்: பஞ்சாப்பிற்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கேப்டன் கோலி செய்த சில தவறுகள் தற்போது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது.

பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் பெங்களூர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதிலும் கேப்டன் கோலி மீது பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

நேற்று முதலில் ஆடிய பஞ்சாப் அணி 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய பெங்களூர் அணி 17 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

 கோலி தவறு

கோலி தவறு

இந்த போட்டி முழுக்க முழுக்க கேப்டன் கோலிக்கு எதிராக இருந்தது. நேற்று போட்டியில் இரண்டு முறை கோலி கேட்சை விட்டார். முதலில் ராகுல் 83 ரன்கள் இருந்த போது அடித்த எளிதான கேட்சை விட்டார். அதன்பின் ராகுல் 89 ரன்கள் இருக்கும் போது அடித்த பந்தையும் கோலி தவற விட்டார். அதன்பின் கடைசி 9 பந்துகளில் கே.எல் 42 ரன்கள் எடுத்தார்.

அபராதம்

அபராதம்

கோலியின் இந்த தவறுதான் போட்டியை மொத்தமாக புரட்டி போட்டது. அதன்பின் நேற்று போட்டியில் கோலி செய்த இன்னொரு தவறும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. அதன்படி நேற்று போட்டியில் பெங்களூர் அணி பவுலிங் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

 எவ்வளவு லட்சம்

எவ்வளவு லட்சம்

பவுலிங் செய்ய அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரத்தை கேப்டன் கோலி எடுத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இதனால் நடுவர்களின் நடவடிக்கைக்கு கோலி ஆளாகி உள்ளார். இதனால் கோலிக்கு தற்போது 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதல்முறை எப்படி

முதல்முறை எப்படி

இந்த தொடரில் முதல்முறை இந்த தவறை கேப்டன் கோலி செய்துள்ளார். அடுத்த முறை இதேபோல் தவறு செய்தால் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் அணியில் இருக்கும் மற்ற வீரர்களிடம் இருந்தும் தலா 6 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும்.

ஆனால் மூன்றாவது முறை

ஆனால் மூன்றாவது முறை

மூன்றாவது முறை இதேபோல் தவறு செய்தால் கோலிக்கு ஒரு போட்டியில் விளையாடுவதில் இருந்து தடை விதிக்கப்படும். ஏற்கனவே கடந்த தொடரிலும் இதேபோல் பெங்களூர் அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டது என்று புகார் வைக்கப்பட்டது. தற்போது இதே தொடரிலும் அந்த சிக்கல் தொடர்கிறது.

சுதாரிக்க வேண்டும்

சுதாரிக்க வேண்டும்

இதனால் கோலி விரைவில் சுதாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். உடனே அணியின் பவுலிங் திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். களத்தில் அதிக நேரம் பவுலிங் திட்டங்களை வகுக்காமல் உடனே பவுலிங் பிளானை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கோலி உள்ளார்.

Story first published: Friday, September 25, 2020, 10:47 [IST]
Other articles published on Sep 25, 2020
English summary
IPL 2020: Kohli fined for late bowling during RCB vs Punjab match yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X