For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாம் பயம்தான்.. எல்லோரையும் வழிக்கு கொண்டு வந்த கோலி.. திடீர் திருப்பம் ஏன்? பரபர பின்னணி

துபாய்: 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியை கேப்டன் கோலி மொத்தமாக பார்மிற்கு கொண்டு வந்துள்ளார். எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் பெங்களூர் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஆர்சிபி அணி என்றால் ஐபிஎல் தொடரில் பலருக்கும் கிண்டலும், கேலியுமாக கடந்த சீசன் வரை இருந்தது. சில முறை பிளே ஆப் மற்றும் ஒரு முறை பைனல் வரை சென்று இருந்தாலும் கூட பெங்களூர் அணி ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றது கிடையாது.

ஐபிஎல் தொடரில் இதனால் பெங்களூர் அணியை எப்போது ரசிகர்கள் கிண்டல் செய்வது உண்டு. நிறைய வருடம் பெங்களூர் அணிதான் பிளே ஆப் வாய்ப்பை இழக்கும் முதல் அணியாகவும் கூட இருந்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த வருடம் பெங்களூர் அணி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருடம் பெங்களூர் அணியின் பேட்டிங், பவுலிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. எப்போதும் பெங்களூர் அணியின் ஓப்பனிங் வீரர்கள் மிக மோசமாக இருப்பார்கள்.

மோசம்

மோசம்

டி வில்லியர்ஸ் இருந்தாலும் கூட பெங்களூர் அணியின் ஓப்பனிங் தொடர்ந்து சொதப்பியே வந்தது. பர்திவ் பட்டேலை நம்பி பல முறை பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. அதேபோல் பெங்களூர் அணியின் டெத் ஓவரும் மிகவும் மோசமாகவே இருந்தது. உமேஷ் யாதவ், சிராஜ் ஆகியோரை நம்பி பெங்களூர் அணி ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் கூட தோல்வி அடைந்துள்ளது.

இந்த முறை என்ன

இந்த முறை என்ன

ஆனால் இந்த முறை பெங்களூர் கேப்டன் கோலி அது போன்ற தவறுகளை செய்யவில்லை. மொத்தமாக அணியில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து, ஐபிஎல் தொடரை இந்த முறை பெங்களூர் அணி கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முதலில் ஓப்பனிங் வீரர்கள் பிரச்சனையை கோழி சரி செய்தார். படிக்கல் போன்ற புதிய வீரரையும், பின்ச் போன்ற அனுபவ வீரரையும் களமிறக்கி ஓப்பனிங் பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வந்தார்.

செம

செம

டி வில்லியர்ஸ், கோலி அடுத்தடுத்த பேட்டிங் இறங்குவதால் பெங்களூர் பேட்டிங் ஆர்டர் வலிமையாக மாறியுள்ளது . இன்னொரு பக்கம் பவுலிங்கிலும் உமேஷ் யாதவை நம்பாமல் வாஷிங்க்டன் சுந்தர், சாஹல், உடானா, கிறிஸ் மோரிஸ் என்ற வலுவான படையை கோலி கொண்டு வந்தார். அதிலும் மோரிஸ் வருகை பெங்களூர் அணிக்கு மேலும் பலம் சேர்த்தது.

ஏன்

ஏன்

இதன் காரணமாகவே பெங்களூர் அணி இந்த முறை வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது என்கிறார்கள். பெங்களூர் அணியின் இந்த வெற்றிக்கு கோலியின் அச்சமும் ஒரு வகையில் காரணம் என்கிறார்கள். அணிக்குள் ஆரோன் பின்ச் வந்துவிட்டதால் தன்னுடைய கேப்டன் பதவியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி இருக்கிறார். இதனால்தான் கஷ்டப்பட்டு அணியை வெற்றிபெற வைக்கிறார்.

தோல்வி

தோல்வி

இந்த சீசனிலும் தோல்வி அடைந்தால் கேப்டன் பதவி பறிபோய்விடும். அதேபோல் அடுத்த வருடம் உலகக்கோப்பை டி20 தொடர் நடக்க உள்ளது. இதில் கோலி இந்திய அணியின் கேப்டனாக தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ரோஹித் கோலியை விட டி20 போட்டிகளில் நன்றாக கேப்டன்சி செய்கிறார். மும்பை அணியும் 4 கோப்பைகளை வென்றுவிட்டது.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

இதனால் ரோஹித்திடம் தன்னுடைய இந்திய டி 20 அணி கேப்டன் பதவியை இழக்க கூடாது என்பதில் கோலி உறுதியாக இருக்கிறார். எப்படியாவது தனது கேப்டன்சி திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு கோலி தள்ளப்பட்டு உள்ளார். இதன் காரணமாகவே ஏதாவது செய்து இந்த முறை பெங்களூர் அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று கோலி உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

Story first published: Wednesday, October 21, 2020, 16:50 [IST]
Other articles published on Oct 21, 2020
English summary
IPL 2020: Kohli should prove his captaincy against Rohith Sharma this year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X