For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகமே தூக்கி வீசிய போது.. தூக்கிவிட்ட ஒரு கை.. கேப்டனாக உயர்ந்து நின்ற கோலி.. நேற்று நடந்த சம்பவம்!

துபாய்: பெங்களூர் அணியின் இளம் பவுலர் முகமது சிராஜுக்கு எதிராக கிரிக்கெட் உலகமே கருத்து தெரிவித்த போது கேப்டன் கோலி மட்டுமே அவருக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் 2020 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் மும்பை, சிஎஸ்கே போன்ற ஜாம்பவான் அணிகளை கூட களத்தில் வீழ்த்தி பெங்களூர் வலிமையாக உருவெடுத்து உள்ளது.

இந்த சீசனில் பெங்களூர் பிளே ஆப் செல்வது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இதுவரை 10 போட்டிகளில் ஆடி உள்ள பெங்களூர் 7 போட்டிகளில் வென்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஒரே ஒரு போட்டி

ஒரே ஒரு போட்டி

இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட பெங்களூர் அணி பிளே ஆப் செல்வது உறுதியாகிவிடும். இந்த நிலையில்தான் பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபித்து இருக்கிறார். கடந்த சில வருடங்களாக பெங்களூர் அணியின் பவுலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. பல போட்டிகளில் பெங்களூர் அணியின் தோல்விக்கு அந்த அணியின் மோசமான பவுலிங்தான் காரணமாக இருந்தது.

காரணம் என்ன

காரணம் என்ன

ஆனால் இந்த வருடம் பெங்களூர் அணியின் பவுலிங் மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளது. இதுதான் பெங்களூர் அணியின் சிறந்த பிளெயிங் லெவன் என்று சொல்லும் அளவிற்கு அந்த அணியின் பவுலிங் வலிமை அடைந்துள்ளது. கிறிஸ் மோரிஸ், சாஹல், வாஷிங்டன் சுந்தர், உடானா, சைனி என்று பெரிய படையை பெங்களூர் அணி வைத்து உள்ளது.

செம

செம

இதன் காரணமாகவே அடுத்தடுத்த போட்டிகளில் பெங்களூர் வெற்றிபெற்று வருகிறது. அணியில் இருந்த உமேஷ் யாதவும் இப்போது வாய்ப்பு வழங்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அணியில் ஒரே ஒரு வீரர் மட்டும் அடுத்தடுத்து பவுலிங்கில் சொதப்பி வந்தார். அவர்தான் முகமது சிராஜ். தொடர்ந்து முக்கியமான போட்டிகளில் எல்லாம் சிராஜ் மோசமாக சொதப்பி வந்தார்.

சொதப்பல்

சொதப்பல்

டெத் ஓவர்களில்தான் சிராஜை கோலி பயன்படுத்தி வந்தார். ஆட்டம் பெங்களூர் வசம் இருக்கும் போது இவர் ஓவர் போட வந்தால் அப்படியே ஆட்டம் எதிரணி வசம் திரும்பம் அளவிற்கே இவரின் பவுலிங் இந்த சீசனில் இருந்தது. அதிலும் பஞ்சாப் அணிக்கு எதிராக இவர் வீசிய 19வது மொத்தமாக பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

கடுமையான கருத்து

கடுமையான கருத்து

இதன் காரணமாக இவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. முகமது சிராஜை அணியில் இருந்து நீக்க வேண்டும். அவருக்கு பவுலிங் போட தெரியவில்லை. கோலி இவருக்கு தேவையில்லாமல் வாய்ப்புகளை வழங்க கூடாது. உடனே இவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

விமர்சனம்

விமர்சனம்

அதிலும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் சிராஜுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை வைத்தனர். சிராஜை நீக்கினால்தான் பெங்களூர் வெற்றிபெறும் என்றும் கூட கூறினார்கள். சிராஜுக்கு மன ரீதியாக அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு அவருக்கு எதிராக இணையத்தில் நிறைய கருத்துக்கள் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் கோலி மட்டும் சிராஜுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார்.

ஆதரவு அளித்தார்

ஆதரவு அளித்தார்

கிரிக்கெட் உலகமே சிராஜை எதிர்த்த போது கோலி மட்டும் சிராஜுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை உனக்கு நான் உடன் இருப்பேன் என்று உறுதியாக இருந்தார். எதிர்ப்புகளை மீறி சிராஜை அணியில் எடுத்தார். அதோடு முதல் பவர் பிளேவிலேயே சிராஜுக்கு கோலி ஓவர் கொடுத்தார். இரண்டாவது ஓவரிலேயே நேற்று சிராஜ் கொல்கத்தாவிற்கு எதிராக பவுலிங் செய்தார்.

பவுலிங்

பவுலிங்

சிராஜ் நேற்று செய்த ஓவரில் அடுத்தடுத்த நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி அவுட் ஆனார்கள். அதன்பின் அவர் வீசிய நான்காவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் விழுந்தது. மொத்தம் 3 விக்கெட் எடுத்த சிராஜ் 2 மெய்டன் ஓவர் வீசினார்.நேற்று 4 ஓவர் வீசிய சிராஜ் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் எடுத்து ஆட்டத்தை காலி செய்தார். இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என்று வீசி மொத்தமாக ஆட்டத்தை புரட்டி போட்டார்.

செம

செம

இவர் நேற்று போட்ட பவுலிங்தான் கொல்கத்தா அணியின் அஸ்திவாரத்தை காலி செய்தது. உலகமே இவரை எதிர்த்த போது கோலி மட்டுமே சிராஜுக்கு ஆதரவாக இருந்தார். அவர் மீது நம்பிக்கை வைத்து முதல் பவர் பிளேவிலேயே பவுலிங் கொடுத்தார். விளைவு சிராஜ் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஒரு கேப்டனாக கோலி சிராஜிடம் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

Story first published: Thursday, October 22, 2020, 14:34 [IST]
Other articles published on Oct 22, 2020
English summary
IPL 2020: Kohli supported Mohammed Siraj in his hard times, now he proved himself.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X