மிக மோசமான சாதனை.. தலையை தொங்க போட்டுக்கொண்டே சென்ற "கிங்".. கோலிக்கு இப்படி ஒரு நிலையா?

துபாய்: மும்பைக்கு எதிராக இன்று நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் தனது விக்கெட்டை இழந்த பின் பெங்களூர் கேப்டன் கோலி தலையை தொங்கபோட்டபடி பெவிலியன் நோக்கி சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மும்பை மற்றும் பெங்களூர் என்ற இரண்டு பரம வைரிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி தற்போது துபாயில் நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்து போட்டியில் பெங்களூர் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தொடக்கத்தில் பெங்களூர் அணி மெதுவாக தொடங்கினாலும் போக போக அதிரடி காட்டியது. பெங்களூரின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ் மூன்று பேரும் மும்பை வீரர்களின் பவுலிங்கை துபாயில் இருக்கும் பாலைவனங்களுக்கு பறக்கவிட்டனர்.

இதுக்கு மேலயும் அவரை டீம்ல வைச்சுக்க முடியாது.. கழட்டி விட்ட கோலி வயதான வீரருக்கு நேர்ந்த கதி!

ஆனால் என்ன

ஆனால் என்ன

இந்த போட்டியில் பெங்களூர் கேப்டன் கோலி மீது அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. கடந்த இரண்டு போட்டிகளாக கோலி சரியாக ஆடவில்லை. இதனால் இன்றைய போட்டியில் எப்படியாவது அவர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இன்னொரு பக்கம் ஒரு கேப்டனாக நன்றாக ஆட வேண்டிய அழுத்தமும் கோலி மீது இருந்தது.

உலகக் கோப்பை தொடர்

உலகக் கோப்பை தொடர்

உலகக் கோப்பை தொடரிலும் கேப்டன் கோலி சரியாக பேட்டிங் செய்யவில்லை. ரோஹித் சர்மா அதிரடியாக சதங்களை அடிக்க கோலி சதம் அடிக்க முடியாமல் திணறி வந்தார். கோலி உலகக் கோப்பை தொடரில் எப்படியும் பார்மிற்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. அந்த தொடர் முழுக்க அவர் பார்மிற்கு திரும்பவில்லை.

அதன்பின் பார்ம்

அதன்பின் பார்ம்

அதன்பின் நடந்த போட்டிகளிலும் கோலி பார்மிற்கு திரும்பவில்லை. அதற்கு பின் கொரோனா காரணமாக கோலி வீட்டில் முடங்கினார். இதனால் கோலியின் பயிற்சி பாதிக்கப்பட்டு, அவரின் பார்ம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்றைய போட்டியிலேயே கோலியின் பேட்டிங்கில் அவர் கஷ்டப்படுவது தெரிந்தது.

பழைய கோலி

பழைய கோலி

முன்பு போல பேட்டை சுற்ற முடியாமல், பந்தை கணிக்க முடியாமல், பேட்ஸ்மேன்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கணிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இன்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி நன்றாக பேட்டிங் செய்து வந்தது. ஆனால் கோலி வந்த பின் அதிக பந்துகளை குடித்த காரணத்தால் பெங்களூரின் ரன் ரேட் அப்படியே சரிந்தது.

மிக மோசம்

மிக மோசம்

இந்த போட்டியில் 11 பந்துகளை சந்தித்த கோலி 3 ரன்கள் மட்டும் எடுத்தார். ஹைதராபாத்திற்கு எதிரான முதல் போட்டியில் 13 பந்துகள் பிடித்து 14 ரன்கள் மட்டுமே கோலி எடுத்தார். பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் 5 பந்துகள் பிடித்து ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இந்தநிலையில் இன்றைய போட்டியிலும் கோலி ஏமாற்றம் அளித்துள்ளார்.

மோசமான சாதனை

மோசமான சாதனை

கடந்த 8 ஐபிஎல் போட்டிகளில் கோலி வெறும் 25 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனையை செய்துள்ளார். இந்த போட்டியில் கோலி தனது விக்கெட்டை இழந்துவிட்டு, தலையை தொங்க போட்டபடி மைதானத்தை விட்டு சென்றார். பெவிலியன் திரும்பும் வரை அவர் தலையை நிமிர்த்தவே இல்லை. கிங் கோலி இப்படி மோசமாக பார்ம் இன்றி தவிப்பது அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Kohli yet to return to form after worst batting in world cup 2019.
Story first published: Monday, September 28, 2020, 21:50 [IST]
Other articles published on Sep 28, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X