எதுவும் செய்ய முடியாது.. அவரை பார்த்தாலே பயமாக இருக்கும்..ரசல் உடனான சண்டைக்கு பின் டிகே ஷாக் பேச்சு

துபாய்: கொல்கத்தா பேட்ஸ்மேன் ஆண்ட்ரு ரசல் குறித்து கேப்டன் தினேஷ் கார்த்திக் சொன்ன கருத்து ஒன்று வைரலாகி வருகிறது.

கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கும், மூத்த வீரர் ஆண்ட்ரு ரசலுக்கும் இடையே மோதல் இருந்தது. தனக்கு அணியில் சரியாக வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று ரசல் குற்றஞ்சாட்டி இருந்தார்.

கொல்கத்தா அணியில் எத்தனை பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பயன் அளிக்காது என்று கொல்கத்தாவின் தோல்வி குறித்து ரசல் குற்றஞ்சாட்டி இருந்தார்.

யாருப்பா அது? வார்னரை காலி செய்த தமிழக வீரர்.. ஹைதரபாத்துக்கு செக் வைத்த தினேஷ் கார்த்திக்!

அணிக்குள் நடக்காது

அணிக்குள் நடக்காது

கொல்கத்தா அணிக்குள் நடந்த மோதல் அப்படியே வெளியே வந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தனக்கு பேட்டிங்கில் டாப் ஆர்டர் கிடைப்பது இல்லை என்பதால் ரசல் இப்படி குற்றஞ்சாட்டி இருந்தார். ஆனால் இதற்கு தினேஷ் கார்த்திக் அப்போது பதில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ரசல் சண்டை

ரசல் சண்டை

இந்த நிலையில் ரசல் உடனான சண்டைக்கு பின் தினேஷ் கார்த்திக் தற்போது மனம் திறந்து உள்ளார். சக தமிழக வீரர் அஸ்வின் உடன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரசல் குறித்து தினேஷ் கார்த்திக் பேசி உள்ளார். ரசல் மிகவும் அதிரடியான வீரர், அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தினேஷ் கார்த்திக்கிடம் அஸ்வின் கேட்டார். இதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக், ரசல் எளிதாக கணிக்க கூடிய வீரர் இல்லை.

கடவுள் வேண்டுங்கள்

கடவுள் வேண்டுங்கள்

அவருக்கு பவுலிங் போடும் முன் முதலில் கடவுளிடம் வேண்ட வேண்டும். அவருக்கு காணிக்கை செலுத்த வேண்டும். கடவுள் நல்ல மூடில் இருக்க வேண்டும். அதன்பின் ரசல் நல்ல மூடில் இருக்க வேண்டும். பின் மைதானம் கை கொடுக்க வேண்டும். பிட்ச் முதலில் கை கொடுக்க வேண்டும்.

தோரணை கொண்டவர்

தோரணை கொண்டவர்

ரசல் பேட்டிங் செய்ய வருவதை பார்த்தாலே அச்சமாக இருக்கும். அவரை பார்க்கவே மல்யுத்த வீரர் போல இருக்கும். அவர் நடந்து வருவதை பார்த்தே பலர் பயந்து இருக்கிறார்கள். அவர் ஒரு மிக சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் ஒரு மாதிரி தோரணை கொண்டவர். அதேபோல் அவர் நல்ல குணம் கொண்டவர்.

பார்க்க அப்படி இருப்பார்

பார்க்க அப்படி இருப்பார்

ஆள்தான் பார்க்க அப்படி பெரிய ஆள் போல இருப்பார். ஆனால் அவர் பல விஷயங்களுக்கு பயப்பட கூடியவர். காரில் வேகமாக சென்றால் பயப்படுவார். பேருந்து வேகமாக சென்று திரும்பினால் பயப்படுவார். ஆனால் ஆள் பார்க்க மட்டும் அப்படி இருப்பார், அவர் குழந்தை போன்றவர், என்று தினேஷ் கார்த்திக் ரசல் குறித்து கூறியுள்ளார்.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

கடந்த வருடம் முழுக்க ரசலுக்கும் தினேஷ் கார்த்திக்குக்கும் மோதல் இருப்பதாக நிறைய செய்திகள் வந்தது. இவர்கள் மோதல் வெளிப்படையாக பேட்டிகளில் எல்லாம் வெளியானது. இந்த நிலையில்தான் ரசல் குறித்து நல்ல முறையில் தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்து இருக்கிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020: Kolkata skipper Dinesh Karthik talks about team hitter Russell.
Story first published: Saturday, September 26, 2020, 22:38 [IST]
Other articles published on Sep 26, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X