விறுவிறு சேஸிங்.. நம்பர் 1 டெல்லி டீமை காலி செய்த பஞ்சாப்.. வெ.இண்டீஸ் வீரர்கள் அதிரடி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தது. அந்த அணி பஞ்சாப் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது.

பஞ்சாப் அணியில் இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடி தங்கள் அணியை வெற்றி பெற வைத்தனர்.

என்னா அடி.. ஒரே ஓவர்தான்.. டெல்லி டீமை கதிகலங்க வைத்த கிறிஸ் கெயில்.. காப்பாற்றிய அஸ்வின்!!

லீக் போட்டி

லீக் போட்டி

2020 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய 38வது லீக் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்றார். அவர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

தவான் சதம்

தவான் சதம்

டெல்லி அணியில் ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும், துவக்க வீரர் ஷிகர் தவான் மட்டும் நிலையாக நின்று அதிரடி ஆட்டம் ஆடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட 20 ரன்களை தாண்டவில்லை. தவான் சதம் கடந்தார். 106 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார் அவர்.

டெல்லி ஸ்கோர்

டெல்லி ஸ்கோர்

டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் 1, ஷமி 2, நீஷம் 1, முருகன் அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்ததாக பஞ்சாப் அணி 165 ரன்களை சேஸிங் செய்தது.

பஞ்சாப் அதிரடி

பஞ்சாப் அதிரடி

பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் ராகுல் 15, மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கிறிஸ் கெயில் அதிரடி ஆட்டம் ஆடினார். 5வது ஓவரில் மட்டும் அவர் 26 ரன்கள் குவித்தார். 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.

பூரன் அரைசதம்

பூரன் அரைசதம்

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 28 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். கெயில் - பூரன் அதிரடி ஆட்டத்தால் ரன் ரேட் அழுத்தத்தில் இருந்து தப்பிய பஞ்சாப் இலக்கை நெருங்கியது.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

தீபக் ஹூடா, நீஷம் கடைசி வரை நின்று வெற்றியை உறுதி செய்தனர். பஞ்சாப் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று வெற்றிப் பாதைக்கு சென்றுள்ளது பஞ்சாப் அணி.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020 KXIP vs DC : Kings XI Punjab vs Delhi Capitals 38th match result
Story first published: Tuesday, October 20, 2020, 23:34 [IST]
Other articles published on Oct 20, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X