For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியா அடிப்பீங்க!! அந்த கடைசி ஓவர்.. போட்ட திட்டமெல்லாம் வேஸ்ட்.. மனம் உடைந்த பஞ்சாப் கேப்டன்!

அபுதாபி : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர்களை கட்டுப்படுத்த திட்டத்துடன் களமிறங்கினார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல்.

ஆனால், முதலுக்கே மோசம் என்பது போல எது நடக்கக் கூடாது என அவர் திட்டமிட்டாரோ அது அவர் கண் முன் நடந்தது.

கீரான் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா இணைந்து அவர் திட்டத்தை கேலிக்குரியதாக மாற்றினர். கேஎல் ராகுல் கேப்டன்சி மீதும் விமர்சனம் எழுந்தது.

மெகா ஐபிஎல் சாதனை.. கோலி, ரெய்னாவுடன் டாப் லிஸ்ட்டில் சேர்ந்த ஹிட்மேன்!மெகா ஐபிஎல் சாதனை.. கோலி, ரெய்னாவுடன் டாப் லிஸ்ட்டில் சேர்ந்த ஹிட்மேன்!

கேஎல் ராகுல் திட்டம்

கேஎல் ராகுல் திட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி வீரர்கள் எண்ணிக்கை அதிகம். ரோஹித் சர்மா, கீரான் பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா என சில பந்துகளில் போட்டியை மாற்றும் திறன் கொண்ட வீரர்கள் உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த திட்டம் தீட்டினார் கேஎல் ராகுல்.

முருகன் அஸ்வின் நீக்கம்

முருகன் அஸ்வின் நீக்கம்

லெக் ஸ்பின்னர்கள் ஓவர்களில் கீரான் பொல்லார்டு எளிதாக ரன் குவிப்பார் என்பதால் அவரை கட்டுப்படுத்த ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இடம் அளிக்க வேண்டி சிறப்பாக செயல்பட்டு வந்த முருகன் அஸ்வின் நீக்கப்பட்டார்.

ரோஹித் பொறுமை

ரோஹித் பொறுமை

மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. டி காக் டக் அவுட் ஆனார். இஷான் கிஷன் நிதான ஆட்டம் ஆடி 28 ரன்களக் சேர்த்தார். ரோஹித் சர்மாவும் முதலில் அதிரடி ஆட்டம் ஆடவில்லை. பொறுமை காத்தார்.

மும்பை போட்ட திட்டம்

மும்பை போட்ட திட்டம்

கடைசி 5 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி ரன் குவிப்பதே மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டம். அதன் காரணமாகவே ரோஹித் சர்மா 15 ஓவர்கள் வரை ஆறு ரன்கள் என்ற ரன் ரேட்டை பின்பற்றி ரன் குவித்து வந்தார். அதன் பின் அவர்கள் திட்டம் அமலுக்கு வந்தது.

ரோஹித் - பொல்லார்டு

ரோஹித் - பொல்லார்டு

16வது ஓவரில் ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடினார். பஞ்சாப் அணி கௌதமை கடைசி ஓவர் வீச வைக்க திட்டமிட்டது. மேலும், அந்த அணி சரியாக 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே தேர்வு செய்ததன் பலனை அனுபவித்தது. ஜேம்ஸ் நீஷம் ஓவர்களில் ரன்கள் வாரி இறைக்கப்பட்டாலும் வேறு பந்துவீச்சாளர்கள் இல்லாமல் ராகுல் அவரிடமே ஓவர்களை கொடுத்து வந்தார்.

பாண்டியா அதிரடி

பாண்டியா அதிரடி

ரோஹித் 70 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த பின், பொல்லார்டுடன் இணைந்தார் ஹர்திக் பாண்டியா. இருவரும் பஞ்சாப் பந்துவீச்சில் பவுண்டரி மழை பொழிந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் பஞ்சாப் கேப்டன். 19 ஓவர்களில் மும்பை 166 ரன்கள் குவித்து இருந்தது.

கடைசி ஓவர் திட்டம்

கடைசி ஓவர் திட்டம்

கடைசி ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் பந்து வீசினார். எப்படியும் குறைவான ரன்கள் கொடுத்து மும்பை அணியை 175 - 180 ரன்கள் மட்டுமே எடுக்க விடுவார் என எதிர்பார்த்தார் கேஎல் ராகுல். ஆனால், நடந்ததே வேறு.

மனம் உடைந்த ராகுல்

மனம் உடைந்த ராகுல்

கடைசி ஓவரில் பாண்டியா 1 சிக்ஸ், பொல்லார்டு 3 சிக்ஸ் அடித்தனர். அந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. பஞ்சாப் பந்துவீச்சில் அதிக ரன்கள் சென்றது அந்த ஓவரில் தான். தன் திட்டம் தவிடு பொடியானதை அடுத்து ராகுல் சில நிமிடங்கள் இறுக்கமாக காணப்பட்டார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. பஞ்சாப் அணி பேட்டிங்கில் சொதப்பி 60 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ராகுல் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

Story first published: Friday, October 2, 2020, 11:59 [IST]
Other articles published on Oct 2, 2020
English summary
IPL 2020 News in Tamil : KXIP vs MI : KL Rahul Plan failed against Mumbai Indians
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X